(Reading time: 14 - 27 minutes)

டே.. இங்கேயே இரு. உள்ள போக என்னவெல்லாம் வேணும்ணு கேட்டுட்டு வாறேன்’.

மாமா கொஞ்சம் தூரத்திலிருந்த ஒருவரிடம் போய் விசாரித்துக் கொண்டிருந்தார்.திடீரென்று பார்வையாளர்கள் உள்ளே போய்க் கொண்டிருந்த அறையிலிருந்து சண்டை போடுவது போல சத்தம் வந்தது.

உடனே நான் அந்த வரிசையில் கடைசி ஆளாய் போய் நின்று எட்டிப் பார்த்தேன். தூரத்தில் ஒருவர் கையில் செருப்புடன் போலீஸ்காரரிடம் வாக்குவாதம் பண்ணிக் கொண்டிருந்தார். அவர்கள் தூரத்தில் இருந்ததால் அவர்கள் பேசிக் கொண்டது சரியாக கேட்கவில்லை. சிறிது நேரம் கழத்து, உள்ளே இருந்து வந்த ஒருவரிடம்,

     ‘சார் அங்க என்ன பிரச்சனை?;’ என்று கேட்டேன்.

‘தம்பி! அந்த ஆளு செருப்புக்குள்ள பிளேட மறச்சு வச்சு கடத்திட்டு போக முயற்சி பண்ணிருக்காரு. செக் பண்ணும் போது மாட்டிக்கிட்டாரு.’

‘ஓ! அப்படியா சார் பிளேட வச்சு என்ன பண்ண முடியும்.’

‘தம்பி அது சாதாரண பிளேடு இல்ல. ஆபரேசனுக்கு பயன்படுத்துற சர்ஜரிக்கரிக்கல் பிளேடு அத வச்சு எத்தனை பேரை வேணும்னாலும் தாக்கி கொல்லலாம். அந்த அளவுக்கு பதமா இருக்கும்.’

‘ம்ம்ம்….. சார் எனக்கு ஒரு டவுட்டு.. செக் பண்றாங்களே அவங்க என்ன போலீசு?’

‘அவங்க டி.எஸ்;.பி.’

‘டி.எஸ்.பி னா சார்?’

‘தெரியலப்பா’

அவங்க திகார் சர்ச் போலீசா இருக்கலாம் என எனக்குள் தோன்றியது. அதற்குள் மாமா வந்துவிட்டார்.

‘டே! உன்ன அங்க தான நிக்க சொன்னேன்!.’

     ‘சரிமாமா! போன காரியம் என்னாச்சு?’

‘அடப்போடா வந்ததெல்லாம் வீணாய்போச்சு உள்ள இருக்க கைதிய பாக்கனும்னா முன் கூட்டியே ரெஜிஸ்டர் பண்ணணுமா.. நான் ரிஜிஸ்டர் பன்னிட்டேன் ரெண்டு நாள் கழிச்சு வருவோம்;’

‘ம்ம்… சரி மாமா ..’

இருவரும் அங்கிருந்து பஸ் ஏரி மாமா விட்டுக்கு போனோம்.

‘டே.. உங்கிட்ட சொல்ல மறந்துட்டேன் தமிழ்நாடு போலீசுக்கு ஆள் எடுக்குறாங்கன்னு நேத்து நியூஸ் பேப்பர்ல போட்டுருக்காங்க.. நீ வேணும்னா ஊருக்கு போய் அப்ளிகேசன் போட்டுப்பாறேன்.’

‘அடப்போ மாமா.. நான் வேல வெட்டிக்கு போகம கூட இருந்திருவேன். ஆனா சத்தியமா தமிழ்நாடு போலீசுக்கு மட்டும் போக மாட்டேன்.’

‘ஏண்;டா…’

‘நம்ம ஊருல போலீஸ்காரன எவனாவது நல்லவன்னு சொல்றானா.. பொறுக்கி திங்கிற பயலுக, புடுங்கி திங்கிறவனுங்க, ஆளுங்கட்சிக்கு அடியாளுக. இவனுங்க எல்லாம் விளங்குவானுங்களான்னு நம்ம கண்ணு முன்னாலயே திட்டுறாங்க. அப்படிப் பட்ட போலீசு வேலைக்கு போகனும்மா…?’

‘நீயெல்லாம் திருந்தவே மாட்ட எக்கேடும் கெட்டு போ..’

‘கோபப்படாத மாமா நாம இன்னைக்கு காலைல திகார் ஜெயில்ல பாத்தோமே, அந்த போலீசு மாதிரி ஆகனும் ஆவங்கள மாதிரி வெறட்டி, வெறட்டி பிடிக்கனும். கைதிகளுக்கு கடத்துற பொருட்களை எல்லாம் கண்டுபிடிக்கனும். அது தான் மாமா உண்மையான போலீசு. ஆனா அப்படியொரு போலீசாகனும்.’

‘ம்..ம்…ம்… பாக்கதான போறேன். நீ என்ன ஆக போறேன்னு..… என்றார். நான் பதிலேதும் பேசவில்லை.

சாயங்காலம் நானும் மாமாவும் அவரது கிப்ட் கடைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தோம். நான் தான் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தேன். அப்படி நடக்கும் என்று சத்தியமாக நினைக்கவே இல்லை.

என் முன்னே சென்ற வண்டிக்காரன் இடது பக்க இண்டிக்கேட்டரை போட நான் அவனது வலது பக்கம் வேகத்தை கூட்டி சென்றேன். அவன் சடக்கென்று வலது பக்கம் திரும்ப வண்டியோடு வண்டி மோதின. மூன்று பேரும் வண்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டோம். நல்ல வேளை உயிருக்கு எந்த ஆபத்துமில்லை. சிறுசிறு சிராய்ப்புகள் தான் ஏற்பட்டது.

பிறகு மருத்துவ மணையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. பின் டெல்லி போலீசார்; விசாரித்துவிட்டு கேஸ் போட்டார்கள். நானும், மாமாவும் எவ்வளவோ மன்றாடியும் விடவே இல்லை. கேஸ் போட்டு விட்டு விடுவார்கள் என்று நினைத்தேன். ஆனால் கேஸ் போட்டு ஜெயிலுக்கு கொண்டு போக முடிவெடுத்தார்கள். என்ன கொடுமை. எதுவா இ;ருந்தாலும் கோர்ட்டில் பேசிக்கங்க என்றனர் டெல்லி போலீசார்;. சின்ன ஆக்சிடண்ட் கேசுக்கெல்லாமா டெல்லியில் தான் ஜெயிலில் போடுகிறார்கள். இதே தமிழ்நாடாக இருந்தால் போலீசில் ஸ்டேசனில் வைத்து பேசி தீர்த்து அனுப்பியிருப்பார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.