(Reading time: 14 - 27 minutes)

போலீஸ் வாகனத்தில் நானும், மாமா உட்பட சில பேருடன் திகார் ஜெயிலுக்கு போய்க் கொண்டிருந்தோம் வண்டியில் எனக்கு எதிர்புறம் உட்கார்ந்திருந்த மாமாவை பார்த்து லேசாக சிரித்தேன்.

‘ஏன்டா சிரிக்கிற?’

‘அது ஒண்ணுமில்ல மாமா. அன்னைக்கு என்ன சொன்ன, அத்த கிட்ட இருக்கிறத விட திகார் ஜெயில்ல இருக்கலாம்னு சொன்னியே. அப்படியே நடந்திருச்சு பாத்தியா??’ என்றதும் மாமா லேசாக சிரித்தார்.

வண்டி ஓர் இடத்தில் நின்றது கதவு திறக்கப்பட்டு கீழே இறக்கப்பட்டோம். வேளிய மிகப் பெரிய கேட் ஒன்று இருந்தது. அதற்கு மேல் திகார் ஜெயில் நம்பர் நான்கு என எழுதியிருந்தது. அந்த பெரிய கேட்டில் ஒரு பகுதியில் குட்டி கேட் திறக்கப்பட்டது. டெல்லி போலீசார் உள்ளே அழைத்து போய், அங்கிருக்கும் சிறைத்துறையினரிடம் ஒப்படைத்தார்.

அங்கிருந்த போலீசார் ஒருவர்.

‘கீழ உட்காரு… கீழ உட்காரு..’ என சத்தமாக சொன்னார்.

மாமா சடக்கென்று தரையில் குத்த வைத்து உட்கார்ந்து எனது கையை பிடித்து இழுக்க நானும் உட்கார்ந்தேன். எங்களுடன் வந்ததில் ஒருவன்; மட்டும் உட்காராமல், வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான். அவனது முதுகில் டமால் என அடி விழ, இப்போது அவனாக கீழே உட்கார்ந்தான்.

அடுத்து எங்களை ஓர் அறைக்கு கூட்டிப்போய் உயரம், எடை கணக்கிடப்பட்டது.கைரேகை, புகைப்படம் கம்ப்யூட்டரில் பதிவு செய்தனர்.

அதற்கு பின்பு சோதனை செய்ய அனுப்பப்பட்டடோம். எங்களை சோதனை செய்ய போலீசார் தயாராக இருந்தனர். அந்த போலீசாரை எங்கயோ பார்த்தது போல இருந்தது.

‘மாமா அவங்க யாருன்னு தெரியுதா?’

‘தெரியலடா!!’

‘நல்ல பாரு மாமா, அன்னைக்கு ஜெயிலுக்கு வெளிய ஒருத்தன துரத்தி பிடிச்சாங்களே, அதுக்கப்புறம் கைதிகளுக்கு கடத்துற பொருட்களை கண்டு பிடிக்கிறாங்களே அந்த போலீஸ் மாமா..’

‘அதுக்கு இப்ப என்னடா?’

‘என்னவா… அவங்க எந்த போலீசுன்னு விசாரிக்க போறேன். விசாரிச்சு நானும் அந்த போலீஸ் மாதிரி ஆகப் போறேன்.’

‘டே இது உனக்கே ஓவரா தெரியலையா…? நாம என்ன நலம் விசாரிக்க சொந்தக்காரங்க வீட்டுக்கா வந்திருக்கோம். ஜெயிலுக்கு வந்திருக்கோம்டா.. அந்த நினைப்பே இல்லையா!!’

‘சும்மா சும்மா பயப்படாத மாமா…’

எங்களை ஒவ்வொருவராய் சில மெசின்கள் வழியாக வரச் சொன்னார்கள் செருப்புகளை ஸ்கேனர் மெசினில் போட்டு சோதித்தனர். பிறகு ஒரு காவலர் உடல் முழுவதும் கைப்பிடியுடன் கூடிய வட்ட வடிவமான கருவியில் உடல் முழுவதும் தடவினாh.; பிறகு ஒரு மறைவான தட்டிக்கு பின் ஒவ்வொருவராய் போனோம். அங்கே ஆடைகள் அகற்றப்பட்டு சோதிக்கப்பட்டோம்.

முதலில் வேறு கேசில் பிடிபட்ட ஒருவன் தட்டிக்குள் சென்றான். அவனது சட்டையை அங்கிருந்த போலீஸ்காரர் சோதித்துக் கொண்டிருந்தார். அந்த கைதியிடம் ஏதோ கேட்டுக் கொண்டிருந்தாh.; அவன் பயந்து பயந்து பதில் சொல்லிக் கொண்டிருந்தான். திடீரென்று அவர் பேசுவதை நிறுத்தி விட்டு, அவனது சட்டை பட்டன் பூட்டும் பகுதியில் கவனத்தை செலுத்தினார். உள்ளே தையற்பகுதியில் ஏதோ தென்பட, லேசாக தையலைக் கிழித்து உள்ளே இருந்த பொருளை எடுத்தார். அது துண்டு துண்டாக மடிக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் தாள் உடனே கன்னத்தில் ரெண்டு காட்டு காட்டி, உயர் அதிகாரியிடம் இழுத்துப் போய் விட்டு விட்டு வந்தார்.

அடுத்து நான் உள்ளே போனேன்.

‘பீடி, சிகரெட், புகையிலை, பணம், பிளேடு ஏதாவது வச்சிருக்கியா..?’ என ஒரு மிரட்டு மிடிட்டினார்

‘சார் ஏதும் இல்ல சார்..’ என்றேன்.

அவர் என்னை சோதித்துக் கொண்டிருந்தார் அப்பொழுது நான் கண்ட காட்சியை என்னால்; நம்ப முடியவில்லை. என்னையும் அறியாமல் உடல் சிலிர்த்தது. காரணம் அவரது பெயர் பலகை தமிழிலும், ஆங்கிலத்திலும் இருந்தது. அது மட்டுமல்லாமல் அவரது அடையாள அட்டை கயிற்றில் தமிழ்நாடு ஸ்பெசல் போலீஸ் என எழுதியிருந்தது.

‘சார், நீங்க தமிழ்நாடு போலீசா..?’

‘ம்ம்ம்…’ என்று சொல்;லிவிட்டு அவர் சோதனை செய்வதில் கவனமாயிருந்தார்.

‘சார் தமிழ்நாடு போலீஸ் எப்படி சார் திகார் ஜெயில்ல?’

‘டே, உன்ன மாதிரி ஆயிரம் கைதி வரான். எல்லாத்துக்கும் பதில் சொல்ல முடியாது’ என்று அதட்டினார் அதன் பிறகு நான் ஏதும் கேட்கவில்லை.

எனது மாமா சோதனை செய்து வந்த பின்பு,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.