(Reading time: 14 - 27 minutes)

மாமா, அவங்க தமிழ்நாடு போலீசு மாமா, தமிழ்நாடு போலீசு என உற்சாகமாக கைநீட்டி மாமாவிடம் சொல்ல, அந்த போலீஸ்காரர் திரும்பி என்னைப் பார்த்து முறைத்தார்.

‘டே, இங்க எதுவும் பேசாத உள்ள போய் பேசிக்கலாம’; என்றார் மாமா.

எல்லோரும் சோதனை செய்யப்பட்ட பின், ஜெயிலுக்குள் அனுப்பப்பட்டோம். எங்களை வரவேற்க வெள்ளை உடை அணிந்த நான்கு பேர் கையில்; லத்தியுடன் தயாராக இருந்தார்கள். எங்களை பற்றி அதட்டலும், மிரட்டலுமாக விசாரித்தார்கள். பிறகு எங்களுக்கு தலா இரண்டு கம்பளிகளை கொடுத்து ஒரு வார்டில் அடைத்தார்கள். அந்த அறையில் சுமார் இருநூறு பேருக்கு மேல் இருந்தார்கள். நானும் மாமாவும் மூலையில் கிடந்த கொஞ்சமான இடத்தில் கம்பளியை விரித்து படுத்தோம். அக்கம் பக்கதிலிருந்த கைதிகள் நலம் விசாரித்தனர். ஆக்ஸிடண்ட் கேஸ் என்பதால் குறைந்தபட்சம் பத்து நாளுக்குள்ள ரிலீஸ் ஆகிருவீங்க என்று ஆறுதல் சொன்னார்கள்.

‘டே! என்னமோ தமிழ்நாடு போலீசா கேவலமா பேசுன. இப்ப பாத்தியா இவ்வளவு பெரிய திகார் ஜெயில்ல தமிழ்நாடு போலீசும் இருக்காங்க.’

‘சரி மாமா ஒத்துக்குறேன். இந்தியாவில் இருக்குற மத்த எந்த மாநில போலீசையும் போடாம தமிழ்நாடு போலீச திகார் ஜெயில்ல போட்டிருக்காங்கனா எவ்வளவு பெருமையா இருக்கு.’

‘இது சாதாரண விசயமில்லடா நம்ம தமிழ்நாட்டுக்காரனோட நேர்;மைக்கும் திறமைக்கும் கிடச்ச பரிசுடா..’

‘ஆமா மாமா நானும் ஒரு நாள் தமிழ்நாடு போலீசாவேன்’.

‘முயற்சி பண்ணுடா கண்டிப்பா ஆயிருவ…’

 மறுநாள் அதிகாலை ஆறு மணிக்கு எழும்பி, வெளியே மரத்தடியில் உள்ள குப்பைகளை கூட்ட சொன்னார்கள். பிறகு அங்குள்ள பூச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றினோம். காலை உணவாக டீயும், பிரட்டும் குடுத்தார்கள்.

   புpன்பு எங்களை சக்கர் என்று சொல்லப்படும் அலுவலகத்திற்கு அழைத்துப் போனார்கள். போகும் வழியில ஒரு வார்டை சுற்றி அடர்த்தியான முள் வேலி இருந்தது. அதுமட்டுமல்;லாமல் உயரமான குட்டி கோபுரங்கள் அதில் துப்பாக்கியுடன் போலீஸ்காரர்கள். வார்டின் மொட்டை மாடிப்பகுதியிலும், பின் பகுதியிலும் ஒரு போலீஸ்காரர் என பலத்த பாதுகாப்பாக இருந்தது.

‘மாமா பாத்தியா, அந்த வார்டுக்கு மட்டும் எவ்வளவு பாதுகாப்பு போட்டிருக்காங்க?’

‘ஆமாண்டா, ஏன்னு தெரியலயே. இரு விசாரிப்போம்’ என மாமா எங்களுடன் வந்த நன்னடத்தை கைதியிடம் விசாரித்தார்.

‘அது   ரிஸ்க் வார்டு (உயர்ரக பாதுகாப்பு பிரிவு). அங்கதான் பெரிய பெரிய குற்றம் செய்தவர்கள்,  கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் வழக்குகளில் கைது செய்யப்பட்டவங்க. அதுமட்டுமில்லாமல் நாட்டையே நாசமாக்கிய தீவிர வாதிகள், மாவேயிஸ்ட்டுகள், வெளிநாட்டு கைதிகள் எல்லாருமே அங்க தான் தமிழ்நாடு போலீசோட பாதுகாப்பு இருக்காங்க’ என்றார்.

அதற்கு பின் சக கைதி ஒருவர் சொன்ன விசயம் இன்னும் ஆச்சர்யமாக இருந்தது.

‘நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட அப்சல் குரு, தூக்கிலிடும் வரை தமிழ்நாடு போலீஸ் பாதுகாப்புல தான் இருந்திருக்காரு, அதுமட்டுமில்லாம நிர்பயா வழக்கு முக்கிய குற்றவாளிகள்இ இன்னும் பல்வேறு வகை மிக முக்கிய தீவிரவாதிகள் என எல்லோரும் நம்ம தமிழ்நாடு போலீசின் இருபத்தி நான்கு மணி நேர கண்காணிப்பில் இருக்கிறார்கள்’; என்று அவர் சொல்லும் போதே எனக்கும் அவ்வளவு பெருமையாக இருந்தது.

‘மாமா, ஆசியாவிலே மிகப்பெரியது திகார் ஜெயில் தான். இந்தியாவில் மொத்தம் 32 மாநில போலீஸ் இருக்கு. எவ்வளவோ ஸ்பெ~ல் போலீஸ் இருக்கு. ஆனால் அவங்களுக்கு யாரும் கிடைக்காத அங்கீகாரம் சிறப்பு தமிழ்நாடு போலீசுக்கு கிடைச்சிருக்குன்னா சும்மாவா.. அது நம்ம நேர்மைக்கும் திறமைக்கும் கிடைச்ச பரிசு;;;;; ;’

‘ஆமாண்டா.. நாம இதெல்லாம் புரிஞ்சுக்காமல் தமிழ்நாடு போலீஸ்காரங்கனாலே பொறுக்கிங்க, புடுங்கி திங்கிறவங்க, அரசியல் அடியாளுங்கன்னு சொல்லிட்டு இருக்கோம.; இனிமேலாவது அந்த தப்பான எண்ணத்த மாத்தனும்.’

‘ம்ம்…. சரி மாமா நான் ரீலிஸ் ஆன உடனே தமிழ்நாடு போலீசுக்கு அப்ளிகேசன் போட போறேன்.’

‘ம்ம்… கண்டிப்பா அப்ளிகேசன் போடு……

25 ஆண்டுகளுக்கு மேலாக தலை நகர் டெல்லியில் உள்ள திகார் சிறையில் தமிழ்நாடு போலீஸ் சிறப்பாக பணி செய்து வருவது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.