(Reading time: 10 - 20 minutes)

ரண்டரை வருடங்களுக்கு முன்பு!!!

சிங்கப்பூரில் நடந்த தமிழ் சொற்பொழிவு நிகழ்ச்சி!! முதன் முறை விமான பயணத்தை பயத்துடனும் குதூகலத்துடனும் அனுபவித்தவாறு சிங்கப்பூரில் கால் பதித்திருந்தாள் இனியா!! சிங்கப்பூரின் தமிழ் சங்கத்திலிருந்து அவளுக்கு உதவிகள் செய்ய நியமிக்க பட்டிருந்த நபர் தான் கமல்!! முதன் முதலாய் கமலை பார்த்தபோதே ஏதோ இனம் புரியாத ஸ்நேக உணர்வு உண்டாவதை அவளால் தடுக்க முடியவில்லை.

அங்கிருந்த ஒரு வாரமும் கமலுடன் தங்கி ஊர் சுற்றி கதைகள் பல பேசி, இருவரும் எழுதிய கதைகளை பற்றி அலை ஆராய்ந்து என நேரம் சென்றது தெரியாமல் சிங்கப்பூரில் இருந்து விடைபெற்று இந்தியா வந்தாள் இனியா. ஆனால் அவர்களிடையே துளிர்த்த நட்பு விடைபெறவில்லை!!

நாளுக்கு நாள் வளர்ந்து இருவரும் பிணைந்து நட்பு ஆழமான அன்பாய் மாறும் அளவு ஒரு புரிதலுடன் இருந்தது பலருக்கும் ஆச்சர்யம். தொலைதூர உறவாய் இருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் உதவியாய் பக்கபலமாய் இருந்தது என்னவோ அவர்களுக்கும் வியப்பு!!

இரண்டு வருடம் அந்த அன்பின் சுவையை அன்பவித்து மகிழ்ந்து உணர்ந்து உறவை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் போது தான் வந்தது ஒவ்வொன்றாக பிரச்சைனைகள்!!

மல் மிகவும் பொறுமைசாலி.. எதிலும் சற்றே நிதானம் இருக்கும்.. மற்றவர்களிடத்தில் எப்படியோ ஆனால் 'ம்ம்ம்' எனும் முன் முகம் வாடி போகும் இனியாவிற்கு கமல் மிகவும் பொறுமைசாலி தான். கமல் என்றால் இனியா.. இனியா என்றால் கமல்.. என்று மற்றவர் பேசும் அளவு நிஜமாகவே அவர்கள் உறவு இருந்தது தான் குறையோ என்னவோ? எவர் கண்பட்டதோ?

இனியாவிற்கு கமல் வேறு தோழிகளிடமோ தோழர்களிடமோ கொஞ்சம் உரிமையாய் நெருக்கமாய் பேசினால் கூட தாங்கி கொள்ள முடியாது..!! கமலின் அன்பு முழுவதும் அவளுக்கே உரியது என்ற எண்ணம் அடிமனதில் விதையாக விழுந்தது என்று என அவளும் அறியவில்லை.. கமலுக்கும் தெரியவில்லை.. அது போல அவளும் யாரையும் கமலுக்கு முன்னதை வைத்து பார்த்ததில்லை.. யாராக இருந்தாலும் அது கமலுக்கு பின் தான்!!!

சிறு சிறு பிரச்சனைகளை ஆரம்பித்த இனியாவின் பிடிவாதம் கூட கமலின் அன்பில் அவ்வப்போது ஆட்டம் கண்டு வீட்டுக் கொடுத்து விடும். இதை பற்றி வெளிப்படையாய் அவள் கமலிடம் கூறியும் கூட, ஒரு அழகான சிரிப்பில் அதை புறம் தள்ளிவிட்டு அன்பை செலுத்த தவறியிருக்கவில்லை!! அப்படிப்பட்ட அன்பை இழக்க நேரிடுமோ? மற்றவரிடம் பங்கு போடா நேரிடுமோ? என்ற அச்சத்தில் ஆழமான அன்பினால் வந்த வினை..

மற்றவர் வந்து, 'கமல் இப்போ எல்லாம் உன்கூட அதிகம் பேசறதில்லயா?'

'ஹே இதை எனக்கு கமல் தான்பா சொன்ன, உனக்கு சொல்லலையா? ஐயையோ மனசுல எதுவும் வெச்சுக்காத.. சரி ஆகிடும்?'

'கமலுக்கு அவங்க தான் 'க்ளோஸ் ப்ரெண்ட்ஸ்' சாரி நீயும் தான.. கேள்வி பட்டிருக்கேன்.. ஆனாலும் அவங்க தான் எப்பவும் முதல்ல'

'கமலுக்கும் உனக்கும் ஏதாவது சண்டையா? ஏன் உனக்கு இது கூட தெரியலை? அப்போ கமல் வாழ்க்கைல என்ன நடக்குதுன்னு கூட தெரியாத?'

இது போல கேட்கும் போதும் ஜாடை மாடையாக பேசும் போதும் அவளால் சும்மா இருக்கமுடியவில்லை. ஆனாலும் கமலின் அன்பில் எந்த மாற்றமும் இல்லாததை கண்டு சற்றே மனம் தெளிந்தாள் இனியா.

அருகில் இல்லை என்றாலும் இனியா எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்குமாறு கமலும் பார்த்துக் கொண்டதால் ஓரிரு மாதங்கள் எதுவுமே தெரியவில்லை.. அடுத்து கமலின் பிறந்தநாள் வர மனம் மிகுந்த மகிழ்ச்சியில் இதை எல்லாம் அவள் மறந்தே போயிருந்தாள். உள்ளுக்குள் ஒரு நிம்மதியும் கூட 'என் கமல் எனக்கு மட்டும் தான் ' என்ற எண்ணம்..

ஆனால் அடுத்த இரு மாதத்தில் இனியாவின் பிறந்த நாளை அமர்க்களமாய் கமல் கொண்டாடும் வரையில் தான் நீடித்தது.. அதன் பிறகு ஒரு கமலின் நடவடிக்கைகளில் சற்றே மாற்றம் காண, கோபம் கண்ணை மறைக்க ஒரு வழியாய் இவ்வளவு நாள் மனதில் இருந்ததை எல்லாம் போட்டு உடைத்து விட்டு,

"ஆனாலும் பரவாயில்லை கமல் ஸ்டில் ஐ லவ் யூ" என்று முடிக்கும் போது தெரியவில்லை இனியாவிற்கு கமல் இதைவேறு விதமாய் எடுக்க கூடும் என்று..!! சரியாக ஒரு மாதத்திற்கு பின்னர் இன்று மதியம் நடந்த உரையாடலில் தான் இவ்வளவும் பேசி விட்டு கமல் விட்டு சென்றது..!!

இனியா தவறாக நினைத்து விட்டாளாம்.. கமல் நடித்துக் கொண்டிருந்ததாக நினைத்தும் அதை வெளியே சொல்லாமல் இருந்து விட்டாளாம்.. பிறந்தநாள் கொண்டாடும் போது..' ஐ லவ் யூ' என்று சொல்லும் போதும் கூட மனதிற்குள் இத்தனையும் வைத்துக் கொண்டு தான் பேசி கொண்டிருந்தாளாம்.. சந்தேக பட்டு விட்டாளாம்.. இனி ஒட்டாது சரி வராது போதும்..

இவ்வளவு கேட்ட பின்னர் எளிதில் உணர்ச்சிவசப்படும் இனியா வழக்கம் போல் எதுவும் தேவையில்லை போய் விடு என்று கத்தியது யார் தவறு?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.