(Reading time: 10 - 20 minutes)

ணி மூன்றை தாண்டியிருக்க, உறங்காமல் அனைத்தையும் நினைத்து அழுத கண்ணீர் தடம் காய்ந்து போயிருக்க இப்போது கண் மூடினாள் இனியா.

சரியாக இரண்டு நிமிடத்தில் அலைபேசி ஒலிக்க, யார் என்று பார்க்காமல் 'ஆன்' செய்து காதுக்கு கொடுத்தவள், சிறு மௌனத்தின் பின் கேட்ட அந்த குரலில் வாரி சுருட்டி எழுந்தாள்..

"குட்டிமா"

"....."

"குட்டிமா தூங்கலையா நீ?"

"............"

"க..கமல்" , வார்த்தைகள் தடுமாற அவள் போராடுவது சகிக்காமல் கமலே தொடர,

"சாரி டா.. நான்.. நீ போய் என்னை இப்படி நினைச்சுட்டியே ன்னு தான் மனசு கேட்காம"

"நான்.. நான் போய் எப்படி உன்ன தப்ப நினைப்பேன் அப்படியா நான் உன்ன நினைச்சிருந்தேன்? எத்தனையோ பேர் வந்து சொன்னாலும் ஒரு வார்த்தை உங்கிட்ட கேட்டிருப்பேனா? அன்னைக்கு ஏதோ கோபம் நீ எனக்கு தான் முதல் உரிமை கொடுக்கணும் அப்படின்னு ஏதோ புரியாம"

"ப்ச் விடு டா கண்ணம்மா.. நானும் கொஞ்சம் பொறுமையா போயிருக்கணும்"

"இல்லை என் தப்பு நான் முதல்லயே இதை பத்தி பேசிருக்கணும்.. இதை பேசுனா பிரச்சனை வருமோன்னு பயந்து பேசாம விட்டு இப்போ.. ஆனால் எல்லாம் முடிஞ்சுது ன்னு சொல்லிட்டு போயிட்ட இல்ல?" இதை சொல்லும் போதே குரல் தடுமாற, அழுகை வெடித்தது இனியாவிற்கு.

அவள் அழுவதை கேட்ட கமலும் கண்கள் கலங்க பதில் கூற முயல,

"நீ..நீ..யும்.. தான சொன்ன?"

"நீ தான் முதல்ல சொன்ன"

"நீ தான்..." அழுகையும் அன்பும் போட்டி போட,

"போடி எருமை உன்னை என்ன பண்றேன் பாரு மறுபடியும் சிங்கப்பூர் வரும் போது" என்று இனியா சிரித்துக் கொண்டே கூறினாள்.

அவ்வளவு தான் படங்களில் கதைகளில் வருவதை போன்ற பெரிய விவாதமோ நாடக பாணியில் இருக்கும் வசனங்களோ தேவை இருக்கவில்லை.. சில நிமிட அழுகைக்குரலும் 'உன்னை விட்டு போக முடியாது' என்று சொல்லாமல் சொல்லும் வார்த்தை திணறலும் போதுமானதாய் இருந்தது அவர்கள் சேர

"ஹாஹாஹா வந்து என்னை கட்டி பிடிச்சு ஒரு உம்மா கொடு டார்லிங்" என்று மலர்ந்து கூறினாள் கமலிகா. இனியாவின் உயிர்த்தோழி..!!

தோள் கொடுத்து

தலை சாய்த்துக் கொள்ளும்

அருகில் உள்ள உறவு

ஆயிரம் என்றாலும்

தொட்டுவிட்டு செல்லும் காற்றில்

அன்புடன் காதலையும்

சொல்லி தூது விடும்

தொலைதூர தொடர்பில்

நேசத்துடன் நெருங்கி

நெகிழும் நிலவுகள்..!!

காதலுக்கிடையே இருக்கும் நட்பை பற்றி பேசும் பலரிங்கே நட்புக்குள் ஒளிந்து அடங்கி அன்புக்கு கட்டுப்பட்டு கிடைக்கும் அழகான காதலைபற்றி பேசுவதில்லை ஏனோ எனக்கு என்றுமே புரிந்தது இல்லை!! நட்புக்குள் இருக்கும் காதல்கள் என்றுமே என்னை ஈர்த்து விடுகின்றன.. இனம் மொழி மனம் மட்டும் இல்லாமல் பாலினம் கூட வேறுபாடாய் கருதாமல் காதல் செய்ய நட்பினால் மட்டுமே முடியும்.. காதல் என்றாலே எதிர் பாலினத்தின் மேல் மையல் கொண்டு கல்யாணத்திலோ அல்லது கல்லறையிலோ முடிவது என்றாகிவிட்ட இந்த சமுதாயத்தில்.. கள்ளம் கபடமில்லாமல் நட்புக்குள் வாழும் காதலுக்கும் அதை உணர்ந்து போற்றும் தோழர்களுக்கும் தோழிகளுக்கும் இந்த கதை சமர்ப்பணம். நன்றி

 

This is entry #01 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு  - கரு சார்ந்த கதை - நட்பு

எழுத்தாளர் - ப்ரியா

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.