(Reading time: 21 - 41 minutes)

ருநாள் வாசவனுக்கு நல்ல காய்ச்சல், அப்போது அவனோடு இருந்து லயா அவனை நன்றாக கவனித்துக் கொண்டாள்... அப்போது அரை மயக்கத்தில் இருந்த வாசவன்... "நீயும் என்னை விட்டு போய்டுவியா லயா..?? நீயும் போய்ட்டா எனக்கு யார் இருக்கா..??" என்று பிதற்றிக் கொண்டிருந்தான்...

அப்போதிலிருந்தே லயா நிறைய யோசிக்க ஆரம்பித்துவிட்டாள்... அதுவும் வாசவனுக்காக தான் அவள் மனம் அதிகம் யோசித்தது... அப்படின்னா, விஸ்வேஷை விட்டுட்டு வசியை காதலிக்க ஆரம்பிச்சிட்டியா..?? என்று அவள் மனசாட்சி கேட்டதுக்கு அவளிடம் விடை இல்லை... உனக்கு ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் விஸ்வேஷ்க்கு நீ முக்கியமானவளாக இல்லாததால் தான் நீ மாறிப்போனாயா..?? என்று கேட்டாள் அதற்கும் இவளிடம் விடை இல்லை...

அந்த சமயத்தில் விஸ்வேஷ் அப்படி செய்தான் என்றால், சுயநலத்துக்காக தானே வாசவன் இவளை மணந்துக் கொண்டான்... ஒருவேளை வாசவனுடன் இத்தனை நாட்கள் இருந்ததில் இவளை அவன் தவறாக ஒரு பார்வை பார்க்காத காரணத்தால் தான் இவளுக்கு அப்படி தோன்றுகின்றதோ என்று யோசித்தால், இந்த காலகட்டங்களில் இவர்களின் உறவை விஸ்வேஷும் ஒருபோதும் தவறாக நினைக்கவில்லையே...??

இப்படி பலவிதமாக யோசித்து முடிவில் ஒரு காரணத்தையும் அறிந்தாள்... ஆரம்பத்தில் இருந்தே இந்த வாழ்க்கை முறை அவளுக்கு உறுத்தலாக தான் இருந்தது... ஆனால் அதன்பின் வாசவனும், விஸ்வேஷும் நடந்துக் கொண்ட முறையில் இது தவறில்லையோ என்று நினைக்கத் தோன்றியது...

ஆனால் இப்போது தீவிரமாக யோசிக்கும் போது இவள் செய்வது தவறு என்று புரிந்தது.... விஸ்வேஷை விட்டு வாசவனை மணந்துக் கொண்டதே தவறு... இதில் வாசவனை விட்டுவிட்டு திரும்பவும் விஸ்வேஷை மணப்பதா..?? என்னத்தான் சட்டப்படி பிரிந்தாலும், அதன்பிறகு இவளை எல்லோரும் எப்படி பார்ப்பார்கள்... விஸ்வேஷ் இவளை ஏற்றுக் கொள்வான், ஆனால் அவனின் குடும்பத்தார் இவளை ஏற்றுக் கொள்வார்களா..??

இப்படி பல கேள்விகள் அவள் மனதில் இருந்தது... திரும்பவும் இவள் விஸ்வேஷோடு செல்லக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்... ஆனால் இதனால் விஸ்வேஷ் காயப்படுவிடுவானே... எப்படி அவனிடம் சொல்வதென்று குழம்பினாள்... அப்படியே விஸ்வேஷ் பிரச்சனைக்கு தீர்வு வந்தாலும், வசியோடு இவளால் சேர்ந்து வாழ முடியுமா...??

என்னத்தான் வசி மனதில் இவள் இடம்பிடித்திருந்தாலும், நான் உங்கக் கூட தான் சேர்ந்து வாழ ஆசைப்பட்றேன்.. என்று அவனிடம் சொன்னால், அவன் இவளை என்னவாக நினைப்பான்.. இப்படியெல்லாம் இவள் குழம்பிக் கொண்டிருந்த போது தான் விஸ்வேஷ் இந்தியா வரப்போகும் தகவல் கிடைத்தது...

இனி நீ வேலைக்கு வரவேண்டாம் லயா.. நான் நம்ம விவாகரத்துக்காக ஒரு நல்ல வக்கீலைப் பார்க்கிறேன்... என்றெல்லாம் வாசவன் சொன்னபோது இவளால் எதுவும் பேச முடியாமல் போனது...

இப்படியெல்லாம் இவள் தவித்துக் கொண்டிருந்த போது தான் இன்று இவளைக் காண விஸ்வேஷின் அக்கா வந்திருந்தார்... இவர்கள் இருவரின் காதல் பற்றி தன் அக்காவிடம் மட்டுமே தெரிவித்திருப்பதாக, விஸ்வேஷ் கூறியிருக்கிறான்... அதாவது இப்போது வாசவனுடனான் இவளது திருமணம் வரைக்கும், எல்லாம் அவருக்கு தெரியும்..

வந்தவர் என்ன சொல்ல வேண்டுமோ.. அதை மட்டும் பேசிவிட்டு சென்றுவிட்டார்... தன் தம்பி இப்படி ஒரு முடிவெடுத்தபோது அது சரி வராது என்று மறுத்தாராம்.. ஆனால் அப்போது விஸ்வேஷ் அதை ஒத்துக் கொள்ளவில்லையாம்... நடந்தது நடந்துப்போச்சு... என் தம்பி வாழ்க்கையை விட்டு விலகிடு... 3 வருஷம் ஒரு ஆணோட குடும்பம் நடத்துன பொண்ணை கல்யாணம் பண்ணி வச்சா.. சொந்தபந்தமெல்லாம் எப்படியெல்லாம் பேசுவாங்க தெரியுமா..??

சொந்தபந்தங்களை விடு, எங்க அம்மாக்கே இந்த விஷயம் தெரிஞ்சா, என் தம்பியை விலக்கி வச்சிடுவாங்க, அவன் இல்லன்னா எங்க குடும்பம் என்ன நிலைமைக்குப் போய்டும்னு உனக்கே தெரியும்... அதனால நீயா என்னோட தம்பியை விட்டு விலகிடு... அது தான் எல்லோர்க்கும் நல்லது என்றார்...

அவர் அப்படி பேசியபோது இவளுக்கு கோபம் வரவில்லை... ஏனென்றால் இதெல்லாம் இவள் யோசித்தது தான்... இப்போது விஸ்வேஷின் குடும்பத்துக்காக, அவனை பிரிவதாக ஒரு காரணத்தை வசியிடம் சொன்னால், இவளை அவன் தவறாக நினைக்கமாட்டான்... ஆனால் அதன்பின் வசியோடு சேர்ந்து வாழ முடியுமா..?? என்று தெரியவில்லை... அதை பிறகு யோசிக்கலாம் என்று முடிவெடுத்தாள்.

வாசவன் வீட்டுக்கு வந்ததும் விஸ்வேஷ் அக்கா பேசியதை கேள்விப்பட்டு கோபப்பட்டான்... அவங்க எப்படி உன்கிட்ட அப்படி பேசலாம்... எதுவா இருந்தாலும் விஸ்வேஷ்கிட்ட பேச வேண்டியது தானே... நீ அவங்க பேசினத பெருசுப்படுத்தாத, விஸ்வேஷ் வந்ததும் அவங்க குடும்பத்தை சரிப்பண்ணிடுவான் என்று ஆறுதல் சொன்னான்...

ஆனால் இவள் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை... விஸ்வேஷ் அவன் குடும்பத்தோடு சேர்ந்திருப்பதற்காக, இவள் அவன் அக்கா சொன்ன முடிவை தான் எடுக்க வேண்டுமென்றும், அதனால் விஸ்வேஷ் வரும்போது, தாங்கள் இருவரும் சேர்ந்து வாழ முடிவெடுத்து விட்டதாக அவனிடம் பொய்யுறைக்க வேண்டுமென்றும் கூறினாள்...

இந்த முடிவில் ஒருபக்கம் வாசவனுக்கு சந்தோஷம் இருந்தாலும், விஸ்வேஷை பற்றி நினைத்து பார்க்கும்போது லயா சொன்னப்படி செய்ய தயங்கினான்...பின் லயா கெஞ்சிக் கேட்ட போது அவனும் விஸ்வேஷிடம் அப்படி பேச ஒப்புக் கொண்டான்...

விஸ்வேஷ் வந்ததும் இவர்களின் முடிவை எப்படி எடுத்துக் கொள்வானோ..?? என்று போன நான்கு நாட்களாக லயா கவலைப்பட்டுக் கொண்டிருக்க, தன் ஏமாற்றத்தை ஒரு விரக்தி புன்னகையாக சிந்திவிட்டு, இருவருக்கும் கைகுலுக்கி வாழ்த்து சொல்லிவிட்டு அவன் சென்றதை, இன்னும் நம்பமுடியாமல் அமர்ந்திருந்தாள் லயா... பின் வாசவனின் அறைக்கு சென்று பார்த்தபோது அவனும் சிந்தனையில் தான் இருந்தான்...

"வசி.." என்று அவனை அழைத்து அவன் சிந்தனையை கலைத்தாள்...

அவன் "ம்ம்.." என்றதும்...

"வசி... விஸ்வேஷ் இவ்வளவு சாதாரணமா இந்த முடிவை ஏத்துப்பாருன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை... எல்லாம் நல்லதுக்கு தான்...

அப்புறம் வசி... இந்த முடிவால, இன்னும் என்னை உங்கக்கூட வச்சிருக்கனும்னு அவசியமில்ல.. நீங்க சொன்னமாதிரி நாம விவாகரத்து வாங்கிக்கலாம்... அப்புறம் ஒரு நல்ல பொண்ணாப் பார்த்து, நீங்க கல்யாணம் செஞ்சுக்கோங்க.." என்று அந்த நல்ல என்ற வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்து.. சொல்ல வந்ததை சொல்லிவிட்ட திருப்தியோடு, அவனுடைய பதிலுக்குக் கூட காத்திராமல், அவளது அறைக்குச் சென்றுவிட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.