(Reading time: 12 - 23 minutes)

2017 போட்டி சிறுகதை 22 - செல்(வி)வன் தொடங்கி திரு(மதி) வரை - ஸ்ரீ

This is entry #22 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - காதல் / திருமண வாழ்க்கை

எழுத்தாளர் - ஸ்ரீ

marriage

ன்யா சொல்றத புரிஞ்சுக்கோ கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்குறதுக்குள்ள எவ்ளோ ப்ரச்சனை ஆச்சு ஒரு வழியா இவ்ளோ தூரத்துக்கு வந்துருக்கோம் இந்த ஒரு விஷயத்தை அட்ஜெஸ்ட் பண்ணிக்க முடியாதா???

கேட்டுக் கொண்டிருந்தவளின் மனதில் கோபம்,ஆற்றாமை,வருத்தம் எல்லாமே..

இல்ல சர்வேஷ் இதுக்கு மேல எங்க வீட்ல நா எதையும் டிமண்ட் பண்ண முடியாது..பெத்த பொண்ணு காதலிக்கிறேன் இவரதான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொன்னவுடடனே கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணாம ஏத்துக்குற மனசு எத்தனை பேருக்கு வரும்..இதுதுல உங்க வீட்ல போடுற எல்லா கண்டிஷனுக்கும் தலையாட்டியாச்சு இன்னும் கல்யாணமும் நீங்க சொல்றதுபடி தான் நடக்கனும்னா எப்படி??கல்யாணம் நடக்க போறது என் ஊர்ல 30 வருஷமா வாழ்ற இடத்துல எங்க முறைப்படி பண்ணாம விட்டா என்ன பேச்சு வரும்??அதுக்குதான் சென்னைலயே கல்யாணம் வச்சுக்கலாம்நு சொன்னோம் அதுக்கும் ஒத்துவரல..என காரமாய் பேச..

இதபாரு தன்யா நடந்து முடிஞ்சதபத்தி பேசி யூஸ் இல்ல..இப்போ என்ன நடக்கனுமோ அதப்பத்தி பேசு..நீ சொல்றது எல்லாம் கரெக்ட்தான் ஆனா என் நிலைமையை கொஞ்சம் யோசி ரெண்டு பக்கமும் மாட்டிட்டு முழிக்குறேன்..எல்லாம் என்தலையெழுத்து..எதுக்குடா லவ் பண்ணி தொலச்சோம்னு இப்போ பீல் பண்றேன்..ச்சச என்றவாறு அழைப்பை துண்டித்துவிட்டான்..

காதிலிருந்து போனை எடுத்தவளுக்கு கண்களில் நீர் தானாய் கோர்த்தது..அறைக்குள் நுழைந்த அவளது தோழி,ஆரம்பிச்சாச்சா இன்னைக்கு கோட்டாவ ஏண்டி உனக்கு கல்யாணம் பிக்ஸ் ஆனாலும் ஆச்சு டெய்லி சண்டை போடுறதுதான் வேலையா உங்களுக்கு..இதுக்கு நீங்க லவ் பண்ணிட்டேயிருந்து ஸ்ட்ரைட்டா 60ம் கல்யாணம் பண்ணிருக்கலாம்..

இல்ல ரேவதி நா லவ்வே பண்ணிருக்க கூடாது என தேம்பி அழ ஆரம்பிக்க அவளை ஆதரவாய் அணைத்து கொண்டாள் அவளின் தோழி..

ஹே என்னடி இதெல்லாம்..கல்யாணம்னா சும்மாவா ஒரு சொந்தகாரன சமாளிக்குறதே கஷ்டம் இதுல கல்யாணம்னா ரெண்டு ஜென்மத்துக்கு முன்னாடி விட்டுபோன சொந்தத்தல்லாம் கூப்ட்டு சமரசம் பண்றேன்னு இல்லாத ஏழரையை எல்லாம் கூட்டுவாங்க..அப்பறம் அங்க ப்ரச்சனைக்கு பஞ்சமா சொல்லு??இதெல்லாம் கண்டுக்காம கடகடநு கல்யாணத்தை முடிச்சோமா ஹனிமூன் போய் சமாதானம் ஆனோமாநு இருக்கனும்டா..இதுக்கே இப்படி அழுதுட்டா இன்னும் கல்யாணத்துக்கு அப்பறம் மாமனார் மாமியார் நாத்தனார் கொழுந்தனார்நு எல்லாரும் நம்மள நார் நார் ஆக்கம பாத்துக்கனுமே அப்போ என்ன பண்ணுவ சியரப் மை டியர்..என கூறி சிரிக்க துக்கம் மறந்து சிரித்தாள் தன்யா..

ன்யா தனியார் கம்பெனியில் நல்ல பதவி வகிப்பவள் சொந்த ஊரைவிட்டு வேலை காரணமாக சென்னையில் ஹாஸ்ட்டலில் தங்கியிருக்கிறாள்..அங்குதான் அவள் சர்வேஷை சந்தித்ததும் வழக்கமான அறிமுகம் நட்பாகி காதலாகி இன்று திருமண ஏற்பாடுகளில் வந்து நிற்கின்றது..

முதலில் காதலை கூறியது என்னவோ நம்ம ஹீரோதான் தன்யா ரொம்ப யோசிச்சு அப்பறம்தான் சரிநு சொன்னாங்க..மூன்று வருட காதல் நீயில்லாமல் நானில்லை நானில்லாமல் நீயில்லை உனக்காக. எதுவும் செய்வேன்..இன்னும் எத்தனையோ ப்ளா ப்ளா ப்ளா..இவையனைத்திற்கும்முடிவுக்கட்ட தடால் என்ட்ரி தான் இருவீட்டு பெரியவர்களும்..கல்யாண பேச்சு ஆரம்பித்து வெவ்வேறு பிரிவினர்கள் என்பதற்காகவே ஏதோ ஒரு குறை கூற வேண்டும் என்பதே வாழ்நாள் கொள்கையாக கொண்டிருப்பார்கள்..என் பெரியப்பாவோட தாத்தாவோட தம்பிக்கு இது பிடிக்காது,என் அக்காவோட மச்சினர்க்கு காதல்னாலே பிடிக்காது ஏனோ பையன் ஆச பட்டுட்டானுதான் ஒத்துக்குறோம்நு அவங்களும் எவ்ளவோ பெரிய இடத்துல இருந்துலா பெண் கேட்டு வந்தாங்க ஆனா தன்யாவோட விருப்பத்துக்காகத்தான் இவ்ளோ இறங்கி வர வேண்டியிருக்குநு இவங்களும் இஷ்டத்துக்கு அள்ளி விட நடுல சிக்கினது வேற யாரு நம்ம காதல் புறாக்கள்தான்..அவங்க பங்குக்கு அவங்களும் அடிச்சுகிட்டாங்க..தொட்டதுக்கெல்லாம் சண்ட,பேசுறதெல்லாம் தப்புநு ஒரு உலகப் போரே நடக்குது ரெண்டு பேருக்கும்..

றுநாள் வழக்கமாக சந்திக்கும் இடத்தில் இருவரும் சந்திக்க..முந்தைய நாளின் கடுப்பிலேயே அமர்ந்திருந்தான் சர்வேஷ்..

சரிடா நா எதாவது பண்றேன் அதுக்காக ஏன் இப்படி முகத்த தூக்கி வச்சுட்டு இருக்க நாம பாக்குறதே எப்பவாவது இப்பவும் இப்படியிருந்தா நல்லாவாயிருக்கு..?லவ் பண்றப்போ எப்போடா இந்த ஒன் அவர் கிடைக்கும் மீட் பண்ணலாம்நு இருக்கும்..இப்போலா மீட் பண்ணாலே என்ன ப்ரச்சனை வருமோநுதான் பயப்பட வேண்டியிருக்கு என வருத்தமாய் அவள் கூற அதை தவறாய் புரிந்து கொண்டவனோ ஆமா நா தான் ப்ரச்சனை பண்ணணும்னே அலையுறேன் எனக்கு மட்டும் ஆசையா இப்படி வேலைவெட்டியெல்லாம் விட்டுட்டு உக்காந்து சண்டை போடணும்னு..பேசாம இனி கல்யாணம் வரைக்கும் நாம மீட் பண்றத குறைச்சுப்போம் அதான் உனக்கும் நல்லது எனக்கும் நல்லது..

ஏன்டா இப்படிலா பேசுற??நா என்ன சொன்னேன் நீ என்ன புரிஞ்சுக்குற??

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.