(Reading time: 18 - 36 minutes)

"நீ அவன் கூட சந்தோஷமா இருக்க மாட்டேன்னு எனக்கும் தோணுது. ஆனாக்கா நா ஒன்னு யோசிச்சிப் பாத்தேன். இவ்ளோ நாள் நீ சந்தோஷமா இருக்கனுன்னு தான், எனக்கு பிடிக்காத விஷயத்த பண்ணும்போதெல்லாம் நா கம்முனு இருந்தேன். இல்லேன்னா ஸ்டைலுங்கற பேருல ஒரு நாய் பேர கைல பச்ச குத்திட்டு வந்தப்போவே உன் கைய்ய அம்பியூட் (ampute) பண்ணியிருப்பேன். டாட்டூ-வ கண்டாலே எனக்கு பிடிக்காது. (சில நொடிகள் மௌனம்) நாளைக்கு அந்த 'லேசர் டாட்டூ (tattoo) ரிமூவல்' அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு. நீ காதலிச்ச பையனோட பேர தான் பச்ச குத்தியிருக்கன்னு நெனைக்கறாங்க அவங்க. கல்யாணத்துல சொந்தக்காரங்க பாத்துடப்போறாங்கன்னு பயம் அவங்களுக்கு. அது மட்டுந்தா அவங்க போட்ட ஒரே கண்டிஷன். ஸ்கார் (scar) ஹீல் (heal) ஆறதுக்கு ஃபியூ வீக்ஸ் ஆகும், பரவாயில்ல கல்யாணத்துல ட்ரெஸ்ஸிங் பண்ணி இருந்தாக்கா" - அப்பா.

"நா இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கலேன்னா என்ன பண்ணுவீங்க டாடி. என்ன அடிச்சி ரூம்ல பூட்டி வெப்பீங்களா?" - ஜோதி

"எனக்கு தெரியும்...உன்னப்பத்தி எனக்கு நல்லாவே தெரியும்...அந்த மாதிரி பண்றதுக்கு நா என்ன லூசா! யாரையும் பூட்டி வெக்க முடியாது. நீ இந்த மாதிரி நிலைமைக்கு என்னக்கொண்டுவந்து நிறுத்துவேன்னு தான்....லுக் அட் திஸ்....என் பேக் லியே வெச்சிருக்கேன். ஸ்டராங் காக்டெயில் ஆப் ட்ரக்ஸ் (cocktail of drugs). நா சும்மா சொல்றேன்னா, நீயே ஆன்லைன்-ல போயி பாரு, யூத்தநைஸ் (euthanize) பண்றதுக்கு யுஸ் பண்ற மெடிசின்ஸ்...எக்ஸாக்ட்லீ தீஸ் மெடிசின்ஸ். பர்டிகுலர் டோஸேஜ் ல மிக்ஸ் பண்ணினா, வலியில்லாம முப்பது செகண்ட்-ல போய்டுவேன்." அப்பா.

(ஆச்சர்யத்துடன்) "கமான்...தட் இஸ் சோ சீப் சினிமாட்டிக் பிளாக்மெயில் டாடி. யு ஆர் கோயிங் சோ லோ (so low)"

"ஐ நோ தட். யு டூ ஜோதி..யு டூ வெண்ட் சோ லோ. நீ என்ன ஏமாத்திட்ட" - கத்தினார்

(காதுகளை இரு கைகளால் மூடியபடி) "ஐயோ கத்தாதீங்க டாடி....உங்கள இந்த மாதிரி நா பாத்ததே இல்ல..ப்ளீஸ் டாடி" - அழுதாள் ஜோதி

(நிதானமாக) "ஜோதி...நீ இந்த மாதிரி பண்ணுவேன்னு நா நெனச்சி கூட பாக்கலம்மா. உனக்கு எவ்ளோ ஃபிரீடம் (freedom) குடுத்தேன். நீ கேட்டதெல்லாம்.... காரு, ஒண்ணுக்கு மூணு பைக்கு (bike) ன்னு எல்லாம் வாங்கிக்குடுத்தேன். எல்லா அப்பா மாதிரி நா இருந்துடக்கூடாதுன்னு உனக்காக நா ரொம்ப கஷ்டப்பட்டேன். இப்ப என்ன அந்த மாதிரி இருக்க வெச்சிட்ட.  எதுக்கு நீ இந்த மாதிரியெல்லாம்.... " - அப்பாவும் அழுதார்.

று மாதங்களுக்கு முன்பு...காரோட்டும் ஜோதியுடன், அவளின் அம்மா முன் இருக்கையிலும், நான் பின் இருக்கையிலும்....

"எத வெச்சிம்மா சொல்ற நா ஒரு பைய்யன லவ் பன்றேன்னு..."

"ஏண்டீ, என்னாதான் அம்மா அப்பா சொன்னவங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டாலும், நாங்களும் காதல், ரொமான்ஸ் எல்லாம் பண்ணியிருக்கோ...." ஜோதியின் அம்மா.

(இடைமறித்து) "கல்யாணத்துக்கு முன்னாடி பண்ணாதாம்மா காதல்" என்று கிண்டலடித்து சிரித்தாள். அம்மாவும் ஆமோதித்து கூடவே சிரித்தார்.

"பின்ன என்ன பண்றது. எங்க அம்மா அப்பா நாங்க உன்ன ஃப்ரீயா விட்ருக்கா மாதிரி எல்லாம் விடல."

(லேசான கோபத்துடன்) "என்னம்மா ஃப்ரீ ஃப்ரீன்னு எப்ப பாத்தாலும், நீயும் டாடியும் அதையே சொல்றீங்க அடிக்கடி. நாய் மாதிரி ஒரு கயிறு வெச்சா கட்டியா வெக்கறாங்க கல்யாணம் ஆகற வரைக்கும்?" - ஜோதி.

"நாங்க மத்த பேரன்ட்ஸ் மாதிரி கண்ட்ரோல் பண்றதில்லன்னு சொல்றேன். நா வளரும்போது, வீட்டுக்குள்ளேயே என்ன சுடிதார் போட விட மாட்டாரு தாத்தா. போன வாரம் ஹாஸ்பிடல் போறப்ப கூட 'பொண்ண எப்பிடி வளக்கறதுன்னு தெரில உங்க ரெண்டு பேருக்கும். எப்ப பாத்தாலும் டீ-ஷர்ட், ஜீன்ஸ், ஷர்ட்டுன்னு போட்டுகிட்டு. ச...ச...' ன்னு பொலம்பித் தள்ளிட்டாரு" - அம்மா.

"தாத்தா கிட்ட வேற என்ன எதிர்பாக்க முடியும். கோவில்ல அன்னைக்கு என் கிட்ட வந்து என்ன சவுரி முடி வெச்சிக்க சொன்னாரு (இருவரும் சிரித்தனர்..சில நொடிகளில்) இயற்கை சிந்தனைகள மனித செயற்கைக்கு கட்டுப்படாம செயல்படுத்தி வாழ முடியறது தான் சுதந்திரம்மா. எங்க அந்த மாதிரி இருக்க முடியுது சொல்லு?" - ஜோதி.

"சரி தான். அதுக்காக நம்மள சுத்தி இருக்கற ஜனங்கள கண்டுக்காம இருந்துட முடியுமா சொல்லு" - அம்மா.

(ஆதங்கத்துடன்) "சுத்தி இருக்கற ஜனங்கள கண்டுக்கிட்டு கண்டுக்கிட்டு தாம்மா நல்லத கூட வெளிய சொல்ல முடியாம, தேவையானத கூட பண்ண முடியாம ஆயிட்டோம். அதுவும் பாப்புலரான விஷயத்த தான் வெளிய தைரியமா பகிர்ந்துக்கறாங்க, ஏன்னா அதுக்கு தான் அங்கீகாரம் கிடைக்குது...இல்லேன்னா மூடி வெச்சி யாருக்கும் தெரியாமலேயே போயிடுது. இன்னும் சொல்லப்போனா நெறய விஷயத்துல நீங்க சொல்ற 'சுத்தி இருக்கற ஜனங்க' ஒன்னுமே சொல்றதே இல்ல பாவம், நம்மளா நெனச்சிக்கறது தான் (புன்னகைத்தாள்....சில நொடிகளில்) அம்மா இப்ப நீ ஏன் சுடிதார் போடக்கூடாது? சீரியஸா தான் கேக்கறேன்" - ஜோதி.

"ஆச தான் எனக்கும். உங்க அப்பாவும் எதுவும் சொல்ல மாட்டாரு. ஆனா ஆபீஸ் ல வீட்டாண்ட என்ன நெனப்பாங்களோ ன்னு ஒரு கூச்சம் ஒரு லேசான பயம்..." - அம்மா 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.