(Reading time: 18 - 36 minutes)

"...அத தான் சொல்றேம்மா. சுடிதார் போட்டுக்கணுமுன்னு நீங்க நினைக்கறது இயற்கையான ஒரு தாட் (thought) உங்க 'சுத்தி இருக்கற ஜனங்கள' நெனச்சி நீங்க அத செயல்படுத்த மாட்றீங்க. சுடிதார் போடுறது சின்ன விஷயம் உங்களுக்கு அதனால அத நீங்க நெனச்சி கவலப்படல. ஏதோ ஒரு காரணத்தால இப்போ திடீர்னு என்னையோ அப்பாவையே நீ பாக்கக்கூடாதுன்னுட்டா நீ 'சுத்தி இருக்கற ஜனங்கள' பத்தி கவலையே பட மாட்ட. ஏன்னா அது உனக்கு ரொம்ப சீரியசான விஷயம்" - ஜோதி.

"புரியுது நீ சொல்றது. ஆனா அத ஃபீல் முடியல. எனக்குன்னு ஏதாவது வந்தா தான் தெரியும்ன்னு நினைக்கறேன்" - அம்மா.

"நீங்க ஏம்மா ரெண்டாவது கொழந்த பெத்துக்கல"

(புன்னகையுடன்) "பொறக்கல...என்ன பண்றது. ஆனா அப்பாக்கு பையன் வேணுன்னு ரொம்ப ஆசை. அதுக்கின்னா பண்றது. நம்ம கிட்ட கண்ட்ரோல் இல்லயே. (சில நொடிகள் மௌனம்) இப்ப மருமகனத்தான் ரொம்ப எதிர் பாத்துட்டு இருக்காரு. அவருடைய மெடிக்கல் ப்ராக்டிஸ், அவரோட கிளினிக்கல் ட்ரியல்ஸ் எல்லாத்தையும் யாராவது கண்டின்யு பண்ணனுன்னு அவருக்கு ஆச. நீயும் டாக்டர் ஆகல. மருமகனாவது டாக்டரா வருவான்னு எதிர் பாக்கறாரு. அவருடைய பார்ட்னர்ஸ் பசங்க எல்லா டாக்டருங்க, அப்பா ஒரு வார்த்த சொன்னா போதும், இன்னைக்கே உன்ன கல்யாணம் பண்ணிக்க ரெடி. நீ என்னடான்னா நீ லவ் பண்ற பையன் போட்டோ-வ கூட காட்ட மாற்ற, அவனப்பத்தி எதுவும் சொல்ல மாற்ற...என்கிட்ட கூட. மணிக்கணக்கா குசுகுசுன்னு போன்-லியே இருக்கற, கண்ட நேரத்துல போற வர்ற. உன் பிரெண்ட்ஸ்-ங்க கிட்டயாவது நைசா கேட்டு பாக்கலான்னா அவளுங்களும் வீட்டுக்கே வர்றதில்ல ரொம்ப நாளா. எல்லாத்துலயும் ஓப்பனா இருக்கற நீ இத மூடி மூடி வெக்க எனக்கு பயமா இருக்கு ஜோதி. நீ கொண்டு வரப்போற ஆளு எந்த பாஷ பேசப்போறானோ, இல்ல பேறே பாஷா ன்னு சொல்லப்போறானோ, ஒருவேள சர்ச்சுக்கு போறவனோ! என்னா குண்டு வெச்சிருக்கியோ தெரில!"

(ஜோதி தன் முன் இருந்த பின்-கண்ணாடியில் 'இது எங்க போய் முடிய போகுதோ!' என்ற அர்த்தத்தில் ஒரு கூட்டாளியைப் பார்ப்பது போல என்னைப்பார்த்தாள். சொல்வதற்கு எத்தனையோ இருந்தும் சொல்வதறியாமல் என் தலையை திருப்பி காருக்கு வெளியில் வேடிக்கை பார்த்தேன்.)

ரண்டு வருடங்களுக்கு முன்பு...வீட்டில் ஜோதியும் நானும் மட்டும்...ஜோதி தொலைபேசியில்...

"லவ் இஸ் எ யூமன் டச் வித் கெமிஸ்ட்ரி ஈவென் வித்தவுட் பிஸிக்கல் ஆர் பயோலாஜிக்கல் டச் (Love is a human touch with chemistry even without physical or biological touch)"

"........"

"தெரியும் தெறியும்..தமிழ் தமிழ்..இரு சொல்றேன்..(சில நொடிகளில்) உயிரியல் வேண்டாம், இயற்பியல் வேண்டாம்...வேதியியல் தேவை உண்மைக்காதலுக்கு.....(சத்தமாக சிரித்தாள்) வெயிட் பாபி (bobby) வெயிட் வெயிட், வேற மாதிரி சொல்றேன் இப்போ 'காதலுக்கு இயற்பியல் தேவை, உயிரியல் அவசியம், ஆனால் வேதியல் இன்றியமையாதது' (சிரிப்பு)"

"........"

"நன்றி. எல்லாம் தங்கள் ட்ரைனிங் (சிரிப்பு) நீ என்ன கவிஞர் ஆக்கிடுவேன்னு நெனக்கிறேன் சீக்கிரம்"

"........"

"எல்லா ஒண்ணு தான் போ... சரி சரி..கவிதாயினி..போதுமா...ஒரு டாக்டரா இருந்து கிட்டு தமிழ்-ல உனக்கு இருக்குற இன்ட்ரெஸ்ட் ரொம்ப ஆச்சர்யந்தாம்போ. இப்பெல்லாம் எல்லா நாயும் இங்கிலீஸ் தான் பேசுதுங்க"

"........"

"ஸோ வாட்! அதுக்கும் டாக்டருக்கு தானே படிச்ச. என்னா வேற காலேஜ் (சிரிப்பு) அவளோ தான். மனுஷங்களுக்கு வைத்தியம் பாக்கறத விட அதுங்களுக்கு பாக்கறது வெரி ஹானரபிள் (honorable) பாபி"

"........"

"இல்ல இல்ல வேற யாரா இருந்தாலும் அப்பிடி தான் சொல்வேன்...சரி சரி நிறுத்து (சில நொடிகளில்) பாபி 'டாக்டர் டூலிட்டில் (Dr. Dolittle) படம் பாத்துருக்கியா?...ஓகே..நல்ல இருக்கு, பாரு. மூணு பார்ட்ஸ் இருக்கு. உன்ன மாதிரி ஒரு டாக்டர். அவனுக்கு எல்லா விதமான அனிமல்ஸ் (animals) பேசறதும் புரியும். ஸோ அவனோட கிளினிக்-ல எல்லா அனிமல்சும்  வந்து அந்த வலி, இந்த வலின்னு கம்பளைண்ட் பண்ணுதுங்க. அவங்க கொறையெல்லாம் கொட்டித் தீக்குதுங்க (சிரிப்பு) வெரி நைஸ் மூவி. உனக்கு பிடிக்கும் கண்டிப்பா"

"........"

"சரி நீ பேஷண்ட்ட பாரு. நாளைக்கு மீட் பண்லாம்."

"........"

"குட் நைட்...ஐ மிஸ் யு டூ...இல்ல இல்ல..ஐ டோண்ட் மிஸ் யு. நீ எப்பயும் என்கூட தானே இருக்க. என் கூட தான் தூங்கற (என்னைப்பார்த்து சிரித்தாள்)"

"........"

"நீ வேண்ணா அப்பிடியே கூப்பிடு, நா பாபி ன்னு கூப்பிடுவேன்."

"........"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.