(Reading time: 18 - 36 minutes)

"ரு வருஷம் வெச்சிருந்தா என்னா...நீ எப்போ எனக்கு கிஃப்ட்டா குடுத்துட்டியோ, நா எப்பிடிவேண்ணா பேர மாத்திக்கலாம். gazzette-ல எல்லாம் போய் மாத்தத்தேவையில்ல (சிரித்தாள்)"

"........"

"வைரமுத்து சூப்பர் பேரு, யாரு இல்லன்னு சொன்னா. அந்த பேர வெச்சிருக்கியின்னா, உன்னுடைய தமிழ் பற்றுக்கு இத விட ஒரு ஃப்ரூப் (proof) தேவையா? வைரமுத்து கேள்விப்பட்டா ரொம்ப சந்தோஷப்படுவாரு. ஆனா எனக்கு ஒரு கிக் வேணுமில்ல. (சிரிப்பு) பாபி-ன்னு கூப்டா தான் எனக்கு ஜாலி. வீட்லயும் பாபி-ன்னு தான் எல்லாரும் கூப்புட்றாங்க...ஸோ உன்ன எல்லாரும் எங்க வீட்ல ஏத்துக்கிட்டா மாதிரி எனக்கு ஒரு சந்தோஷம். (சிரிப்பு) நீ சொன்னா மாதிரியே பாபி இஸ் வெரி ஸ்மார்ட், பாபி. எல்லாம் புரியுது." என்று என்னைப்பார்த்த படி கூறினாள்.

அன்று ஜோதியின் அந்தத் தொலைபேசி உரையாடலைக் கேட்டதும் இதுவரை கிடைக்காத ஒரு நம்பிக்கை எனக்கு கிடைத்தது. நான் இந்த மனிதர்கள் மத்தியில் கண்டவை-கேட்டவை எல்லாம் சேர்ந்து என் மனதில் பல முறையீடுகளை, பல புகார்களை, ஆதங்கத்தை தேக்கியுள்ளன. அதை அம்மனிதரிடமே தெரிவிக்கும் வாய்ப்பு சாத்தியமே என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. டாக்டர் டூலிட்டில் என்கிற அந்த கதாபாத்திரத்தை நிஜ வாழ்வில் சந்திப்பது தான் இனி என் வாழ்வின் குறிக்கோள்!

ரி, ஜோதியின் மணமேடைக்கு வருவோம்...

என்னைக் கட்டி வைத்திருந்த முதல் வரிசை இருக்கையில் அமர்ந்திருந்த ஜோதியின் தாத்தா தன் மகளிடம் "எத்தன பிரெண்ட்ஸ் நம்ம ஜோதிக்கு, யாரும் வரலியா" என்றார்.

"நம்ம எங்கப்பா டைம் கொடுத்தோம், ரெண்டு வாரத்துக்குள்ள பய்யன் வீட்ல கல்யாணத்த வெச்சுக்கணுன்னு சொல்லிட்டாங்க. அதுவு இல்லாம வீக்-டேஸ்-ல எல்லாருக்கும் ஆபிஸ், வேல, அது இதுன்னு" - என்று சமாளித்தார் அம்மா.

"நீ மேடைக்கு போ. என்கூட என் உக்காந்திருக்கற" என்றார் ஜோதியின் தாத்தா.

"புகை ரொம்ப இருக்கு மேல, கொஞ்ச நேரத்துல போறேன்" என்ற அம்மாவின் போன் அலறியதும் 'ஹலோ' சொன்னார். "பாவனா...சொல்லுமா...எத்தன வருஷமாச்சு உன்னப் பாத்து...எங்க போன....எங்க இருக்க நீ...ஒ, அப்பிடியா...வா வா வா...சீக்கிரம் வா...தாலி கற்ற நேரமாச்சும்மா...அந்த ஹோட்டல் தான்...சான் பிரான்சிஸ்கோ (san francisco) ஹால்...வா சீக்கிரம்..." - போனை வைத்தார்.

கட்டப்பட்டிருந்த என்னால் மேடை மற்றும் முதல் வரிசைப்பக்கம் தவிர எதையும் காண இயலவில்லை. அந்த அறையின் வாசலைக்காணத் தவித்தேன், முடியவில்லை. மேடைக்கு கீழே எங்கள் முன் நின்றிருந்த பெரிய தொலைகாட்சித் திரையில் நேரடி ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த காட்சிகளிலும் அரை வாசல் தெரியவில்லை. சில நிமிடங்களில் பட்டுப்புடவை உடுத்தி மணப்பெண் போல எனக்கு மிக விருப்பமான பாவனாவும் அவளின் அம்மாவும் முதல் வரிசையில் ஜோதியின் அம்மாவின் முன் தோன்றினார்கள். ஜோதியின் அம்மா பாவனாவைக் கட்டி அணைத்து கண்ணீரோடு "எத்தன நாள் ஆச்சு பாவனா. போம்மா, மேல போம்மா. அவ கூட யாருமில்ல தனியா இருக்கா பாரு." மேடைக்கு செல்லும்போது என்னைக்கண்ட பாவனா குனிந்து சிரித்து, மகிழ்ச்சியோடு என்னைத் தடவி, தன் வாயில் விரல் வைத்து காண்பித்து மேடைக்கு ஓடினாள். சோகத்தில் தலை குனிந்திருந்த ஜோதி பாவனாவை இதுவரை கவனிக்கவில்லை. பாவனா ஜோதியின் பின்னால் போய் மண்டியிட்டு அமர்ந்து அவளின் இரு தோள்களை ஆட்டினாள். ஜோதியின் முகம் மலர்ந்து, திரும்பி பாவனாவைத் தழுவினாள்.

முதல் வரிசையில் ஜோதியின் அம்மாவிடம், பாவனாவின் அம்மா "நாங்க பதினஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடியே வந்துட்டோம். எட்டாவது ஃபிளோர் ன்னு நெனச்சி போய்ட்டோம். அங்க லிப்ட் வேற லேட் ஆயிடிச்சு..." என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது எங்கள் முன் இருந்த திரையில் ஜோதியும் புவனாவும் தோன்றினர். ஜோதியின் அம்மா அந்தத் திரையை பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது பாவனாவின் வலது முன்னங்கையில் பச்சை குத்தப்பட்டிருந்த இரண்டு அங்குல எரியும் அகல் விளக்குப் படம் திரையில் பெரிதாக நன்றாக தெரிந்தது. அதையே விடாமல் வெறித்துப் பார்த்தார் ஜோதியின் அம்மா. 

அப்போது அவரிடம் பாவனாவின் அம்மா "ஒரு மாசம் சிங்கப்பூர் ட்ரிப் முடிஞ்சி காலைல பிலைட்ல தான் வந்தா பாபி. வந்தவுடனே ஜோதிக்கு கல்யாணம்னு, என்னைக் கிளப்பி..." என்றவரை ஜோதியின் அம்மா இடைமறித்து சுருங்கியா கண்களுடன் "பாபி-ன்னு...!". "பாவனா பாபி-ன்னு வீட்ல செல்லமா கூப்புடுவோம். வெளிய பாவனா தான்" என்று கூறி பாவனாவின் அம்மா ஜோதியின் அம்மாவிற்கு ஞான-ஜோதியைக் காண்பித்தார்கள்.

கண்கள் பெரிதாகி இருக்கை நுனியில் அமர்ந்து ஆச்சர்யத்துடன் ஜோதியின் அம்மா மேடையில் இருந்த ஜோதியையும் பாவனாவையும் வெறித்துப் பார்த்தார்கள். திடீரென திரும்பி என்னைக் கண்டார்கள். இதுவரை இங்கே என்னைப் பார்க்காத பாவனாவின் அம்மாவும் இப்போது என்னைப்பார்த்து "அட நம்ம வைரமுத்து... எவ்ளோ பெரிசா வளந்துட்டான்.." என்று சிரித்தார்கள். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.