அம்மா!!!!!!!! போதுமா…. நீங்க கிளம்புங்க.
எல்லாம் நீயா தேடிகிட்டது. நல்லா அனுபவி என்று மேலும் அவள் மனதை காயப்படுத்திட்டுவிட்டு சென்றார்.
லட்சுமி நானும் வரேன். சீக்கிரம் ஒரு குழந்தையை பெத்துக்கொடு. இல்லனா எல்லாரும் இப்படி தான் உன்னையும் உன் கணவரையும் தவறா பேசுவாங்க. நான் வரேன் மா என்று தன்யாவை பார்த்து கூறிவிட்டு கிளம்பினார் பார்வதி.
தன்யா மாமியாரை பார்த்தாள். அவரும் இவளை தான் கோபமாக பார்த்துகொண்டுஇருந்தார்.
எல்லாம் நீ சொன்ன மாதிரி உங்க அம்மா பேசினாங்களா?
அத்தை!!!!!!!
பின்ன உனக்கு குழந்தை இல்லாததுற்கு என் பிள்ளை தான் காரணமா? சொல்லு.
இல்ல அத்தை.... அவர் என் உயிர் அத்தை. அவரை பத்தி நான் இப்படி பேசுவேனா அத்தை? என்று அழ ஆரம்பித்துவிட்டாள்.
மாலையில் விக்ரம் கோபமாக வீட்டிற்கு வந்தான்.
தன்யா..... தன்யா..... என்ன நடந்தது?
ஒன்னும்மில்ல... நீங்க முகம் கழுவிட்டு வாங்க... நான் காஃபி கொண்டு வரேன்.
தன்யா.... என்கிட்ட மறைக்காத.... எல்லாம் பார்வதியம்மா மகன் எங்கிட்ட போன் பண்ணிச் சொல்லிட்டான்.
என் அம்மா பேசுனது தப்பு தான் விக்ரம். ஏதோ என் மேல உள்ள அன்பால் உங்களை அப்படி பேசிட்டாங்க. தயவு செய்து அவர்களை மன்னிச்சுடுங்க.
உன் அம்மா பேசுனது தப்புனா அதுக்கு காரணமா இருந்த என் அம்மா செஞ்சதும் தப்பு தான். நான் அம்மா கிட்ட பேசிட்டு வரேன்...
வேண்டாம் விக்ரம்.... அவங்க பெரியவங்க ஏதோ பேரப்பிள்ளை இல்லையெனு இப்படி எல்லாம் பேசிட்டாங்க. நமக்கு குழந்தை பொறந்தா எல்லாம் சரியா போயிடும்.
பின்பு கடுமையாக விரதம் இருக்க ஆரம்பித்தாள். தினமும் கோவில் செல்லாமல் இருக்கமாட்டாள்.
ஒரு நாள் கோவிலில் மயங்கிச் சரிந்தாள். கண்விழித்து பார்க்கும்பொழுது மருத்துவமனையில் இருந்தாள்.
டாக்டர்... எனக்கு என்ன ஆச்சு?
ஏன் மா நீங்க படிச்சவங்கதான? இப்படியா காலையிலிருந்து ஒன்னும் சாப்பிடமா இருப்பீங்க....
தன்யா அமைதியாக இருந்தாள். அப்பொழுது அறைக்குள் நுழைந்த விக்ரமும் அதே கேள்வியை டாக்டர்யை பார்த்து கேட்டான்.
திருப்பவும் டாக்டர் விக்ரமை திட்ட ஆரம்பித்துவிட்டார். அப்பொழுதான் விக்ரமிற்கு தன்யா விரதம் இருப்பது தெரியவந்தது. எல்லாம் குழந்தைக்காக என்று புரிந்துகொண்டான்.
சரி... சரி... புருஷனும் பொண்டாட்டியும் ரொம்ப கவலைப்படாதீங்க... எல்லாம் நல்ல விஷயம் தான்.... உங்க பொண்டாட்டி கர்ப்பமா இருகாங்க... இனிமே இந்த மாதிரி விரதம் எல்லாம் இருக்கக்கூடாது... என்ன சரியா?
விஷயம் கேள்விப்பட்ட விக்ரமின் தாய் மிகவும் மகிழுச்சி அடைத்தார். அவளுக்கு மிகவும் பிடித்த பாயாசம் செய்ய சென்றார்.
சார்!!! சார்!!!!
என்ன ஆச்சு சிஸ்டர்?
உங்களுக்கு பெண் குழத்தைப் பிறந்திருக்கு சார்..... என்றார் டாக்டர்.
ரொம்ப நன்றி டாக்டர்..... தன்யா எப்படி இருக்கா?
எனக்கு ஏன் சார் நன்றியெல்லாம்... கடவுளுக்கு சொல்லுங்க சார்.... தன்யா இன்னும் மயக்கமா இருக்காங்க... ரூம்க்கு வந்த உடன் நீங்க போய் பார்க்கலாம்.
சரிங்க டாக்டர்....
தன்யா கண்விழித்தவுடன் விக்ரமை தான் முதலில் பார்த்தாள்.
விக்ரம்....
தன்யா..... ரொம்ப வலிக்குதா?
கொஞ்சம் மா... குழந்தை எங்க? என்ன குழந்தை?
பெண் குழந்தை தனுமா .... ரோஜா குவியலைப் போல் தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை காட்டினான்.
குழந்தை உங்கள மாதிரியே இருக்கு விக்ரம்.... ஐ லவ் யு விக்ரம் ….நம்ப காதல்ப் பரிசு எப்படி இருக்கு விக்ரம்?
தன் மனைவியை கண்டு பூரித்தான்... காதல் என்பது சொல்லால் மட்டும் வெளிப்படுத்துவது அல்ல... இன்றும் என்றும் தன் மனைவி அவள் செயல் மூலமாகவே காதலை வெளிப்படுத்துகின்றாள்....
சூப்பர் தனுமா.... இந்த உலகத்திலேயே நான் தான் அதிர்ஷடசாலி... என்று அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
நீ மட்டும் அதிர்ஷடசாலி இல்ல விக்ரம் கண்ணா.... என்ற குரல் கேட்டு விக்ரமும் தன்யாவும் திரும்பிப்பார்த்தார்கள்.
இப்படி ஒரு மருமகள் கிடைத்த நானும் இப்படி ஒரு அம்மா கிடைத்த என் பேத்தியும் தான் ரொம்ப ரொம்ப அதிர்ஷடசாலி...... என்று கூறினார் விக்ரமின் தாய்.
அதை கேட்டு நால்வரும் புன்னைகைத்தனர்.... குழந்தை உட்பட.....
This is entry #113 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - காதல் / திருமண வாழ்க்கை
எழுத்தாளர் - அனிதா தேவராஜ்
{kunena_discuss:1083}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.