(Reading time: 10 - 19 minutes)

ண்களை பார்த்து கேட்டான் “நேரடியாகவே சொல்லிட்றேன் வந்தனா, எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு, ஐ.லவ்.யு.” என்றான் ரகு.

அவன் சட்டென சொன்னதும், சற்றே அதிர்வுற்று, பின் சுதாரித்து

“என்ன ரெண்டு நாள் பின்னாடி சுத்திட்டு உடனே ஐ.லவ்.யு சொல்றீங்க” என்று அவனுக்கு பதிலடி கொடுத்துவிட்டு சிரித்துக்கொண்டே நகர்ந்தாள்.

அவள் சிரிப்பும், பேச்சும், பார்வையும் ரகுவின் காதலை மேலும் வளர்த்தன.

ஆனாலும் அவளை பின் தொடர்ந்து பேசிப்பேசி அவள் மனதை கரைத்து காதலிக்க சம்மதிக்க வைத்தான்.

பொழுதொரு வண்ணமாய் வளர்ந்தது காதல். மெல்ல தன் காதலை சில மாதங்களுக்கு பிறகு தன் பெற்றோரிடம் சொன்னான் ரகு.

அவன் அப்பா கருணாகரன், “ரகு, மொதல்ல ஒரு நல்ல வேலைய தேடிக்கோடா, படிப்புக்கு ஏத்த வேலை இல்லன்னா பரவால்ல, ஆனா வேலை, சம்பளம் இரண்டும் முக்கியம்”. என் கூட வா, என் கம்பெனில நான் வேலை வாங்கி தரேன்” என்றார்.

ஆனால் ரகு ஒரு வாரத்தில் அலைந்து திரிந்து உள்ளூர் வங்கியில் பகுதிநேர வேலைக்கு ஊர் தலைவர் சிபாரிசில் வேலைக்கு சேர்ந்தான்.

ரு வாரம் கழித்து..

வந்தனாவிடம் விஷயத்தை சொல்ல, அவள் கல்லூரி அருகில் காத்திருந்தான்.

வந்தனா வரவில்லை, அவள் கல்லூரிக்கு வந்தே ஒரு வாரம் ஆனது என்றும் கேள்விப்பட்டான்.

வந்தனா வீடு இருக்கும் ஏரியாவிற்க சென்றான். அவள் வீட்டை சுற்றி ஆட்கள் இருந்தார்கள். உறவினர்கள் என்பது நன்றாக தெரிந்தது.

அந்த நேரம் ரகுவிற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

இரவு எப்படியாவது அவளை சந்திக்க நினைத்தான்.

ஆனால் அன்று இரவு அவள் வருவதற்கு முன்பே வீடு காலியாக இருந்தது. பேரதிர்ச்சி அடைந்தான் ரகு.

ஏங்கு தேடி அலைந்தும் வந்தனாவை பற்றி ஒரு சிறு செய்தியும் கிடைக்கவில்லை,

உறைந்து போய் இருந்தான் .

அவன் அப்பாவும் அவனிடம் எப்படியெல்லாமோ பேசிப் பார்த்தார்.

ரகு தவிர்த்தான். வந்தனாவை மறக்க முடியாமல் தவித்தான்.

ரகுவின் மாமன் மகள் ஒருத்தி இருந்தாள், ஒரு கால் சற்றே தாங்கி நடப்பாள். அதனால் கூட அவள் திருமணம் தள்ளிப் போனது.

“மாமா, நீ கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லு, நான் எவ்ளோ நாள் வேணும்மானாலும் காத்திருக்கிறேன் என்றாள்.

ரகு அந்த அன்பில் நெகிழ்ந்து போனான்.

ஆனாலும் ரகு வந்தனாவை மறக்க மடியாமல் புலம்பியபடியே இருந்தான்.

அப்படியே வருடங்கள் நகர்ந்தது. உள்ளூர் கூட்டுறவு வங்கி அதிகாரியின் சிபாரிசில் சென்னையில் இந்த பன்னாட்டு வங்கியில் பல்வேறு நேர்முக தேர்வுகளுக்கு பிறகு சேர்ந்தான்.

எல்லாம் சினிமா காட்சி போல் இருந்தது.

ப்போது செல்போன் அடிக்கவும், ரகு தன் நினைவுக்கு வந்தான்.

ஹலோ.. ரகு?

ஆமாம், ரகு தான், நீங்க?

வந்தனா…..

வந்..த….னா…….. சொல்லு வந்தனா…… பதட்டமானான்.

எங்க இருக்க ரகு?

இங்கதான் அண்ணாநகர் ஒரு ஃபிரண்ட பாக்க…

எனக்கு தெரியம் ரகு, நீ அண்ணா நகர் வருவேன்னு, வீடு தெரியும்ல, வா ரகு, என்றாள்.

ரகு கிட்டதட்ட ரோபோ மாதிரி ஆனான்.

அவள் வீடு இருக்கும் தெருவுக்கு வந்ததும் கொஞ்சம் நடுக்கமாகவே இருந்தது.

அவள் வாசலில் காத்திருந்தாள்.

வா, ரகு உள்ளே வா”

ரகு வீட்டுக்குள் நுழைந்தான்.

உட்கார் ரகு, என்ன சாப்பிடற, ம்….இல்ல காபி சாப்பிடற என்றாள்;.

ஒன்னும் வேண்டாம், வந்தனா,“வந்தனா பிரேம்குமார்””

என்றான்.

பெரிதாக ஒரு சிரிப்பு சிரித்தாள்,

பரவாயில்ல ரகு, நீயும் இந்த கார்ப்பொரெட் உலகத்துக்கு சீக்கிரம் பழகிட்ட,

காபி கொடுத்தாள். ரகு இன்னும் என்னை லவ் பன்னிட்டு இருக்கியா? என்றாள்.

மெல்ல நிமிர்ந்து, வேதனையம் வலியையும் வெளிக்காட்ட முடியாத ஒரு முகத்தோடு அவளை பார்த்தான் ரகு,

அவளே தொடர்ந்தாள்.

“உனக்கு கல்யாணம் ஆய்டுச்சா ரகு?

எத்தன பசங்க?

இல்ல வந்தனா, இன்னும் ஆகல, உன்ன விட்டு யார நான் கல்யாணம் பண்ணிக்கறது சொல்லு?

என்னை தேடினியா ரகு….?

ஆமா வந்தனா,… மெல்ல தலையசைத்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.