(Reading time: 10 - 19 minutes)

னக்கு என்ன ஆச்சுன்னு தெரிஞ்சுக்கனுமா ரகு?

சொல்லு வந்தனா..என்றான்

சொல்லத் தொடங்கினாள்.

கடைசியா உன்ன பாத்துட்டு வந்தபிறகு, அப்பாக்கு எப்படியோ விஷயம் தெரிஞ்சு, என்னை வீட்ல வெச்சு பூட்டிட்டாரு ரகு, அன்னைக்கு வேற எனக்கு பீரியட் டைம், ஆனா அம்மா எவ்வளோ சொல்லியும் அப்பா மறத்துட்டார். அவ்வளவு பிடிவாதம். மூனுநாள் சோறு தண்ணி இல்லாம, ஒரே ட்ரஸ்,ரத்த ரத்தமா தரையில் இருந்தேன் ரகு. என்னால முடியல அவர் சொல்றவர கட்டிக்கனும்னு ஒத்தகால்ல நின்னார். எனக்கு வெற வழி தெரியiலை

சரின்னு சொல்லிட்டேன் ரகு.

சம்மதம் சொன்ன இரண்டாவது நாளே, சென்னை எண்ணூர்ல வெச்சு கல்யாணம், பிரேம்குமார் தூரத்து சொந்தம், போர்ட்ல சூப்பர்வைசர் வேலை.

ஆரம்பத்துல நல்லாதான் இருந்தார். திடீர்னு குடிக்க ஆரம்பிச்சார்.

மாசம் ஒருமுறைன்னு இருந்தவர், அடிக்கடி குடிச்சி அப்படியே அதுக்கு அடிமையா ஆகிட்டாரு ரகு. அவர் யார் பேச்சையும் கேட்கல, அவர திருத்தவே முடியல.

இதுக்கு இடையில எனக்கு ரெட்டைபுள்ள பிறந்தது, ரெண்டும் பொண்ணுங்க, மாசமா இருக்கும்போது கரஸ்ல படிப்ப முடிச்சேன், எங்க அம்மாவுக்கும் ஒடம்பு முடியாம அவங்களும் செத்து போட்டாங்க.

அவள் பேசப் பேச அவளையே பார்த்திருந்தான் ரகு.

அப்பா ரொம்ப வருத்தப்பட்டார், என் வாழ்க்கை இப்படி ஆகிடுச்சேன்னு, நான் ஒன்னும் சொல்லல. இதுல இருந்து வெளில வரனும்னு முடிவு பன்னினேன் வேலைக்கு போனேன். ஆனா வீட்டுக்காரர் இப்படின்னு தெரிஞ்சாலே ஒரு மாதிரி நடக்க ஆரம்பிச்சாங்க, ஆனா நான் வைராக்கியத்தோட இருந்தேன் ரகு.

என் பெண்ணுங்க வாழ்க்கை நல்லபடியா இருக்கனும்னா நான் ஒழுக்கமாக இருக்கனும்னு முடிவு பண்ணினேன்.

கொஞ்சம் கொஞ்சமா முன்னேறினேன்.

இதோ இப்போ இந்த கம்பெனில, இங்கேயும் அதே பிரச்சனைதான் ரகு,

உன்னை தெரியும்னு சொன்னா நீயும் அப்படி நடந்துப்பியோன்னுதான் உன்ன தெரியாத மாதிரி இருந்தேன்

“போதும் வந்தனா,” ரகு இடை மறித்தான். என்னையும் தப்பாவே நெனச்சுட்ட இல்ல,

இல்ல ரகு, எனக்கு இங்க எல்லாமே அப்படித்தான் நடந்தது அதான்…

விடு வந்தனா, போகட்டும், உன் வீட்டுகாரர் எங்க இப்போ..

அவர ஒரு மனநல காப்பகத்துல சேர்த்திருக்கோம் ரகு, குடிய மறக்க ட்ரீட்மென்ட் எடுக்குறார்.

ரகு அதிர்ச்சியாய் பார்த்தான்.

ஆமா ரகு, நடுவுல ஒரு நாள் தற்கொலை பன்னிக்க பார்த்தார், அதான் ட்ரீட்மெண்ட்க்கு, இன்னைக்கு லீவு பொண்ணுங்கள கூப்பிட்டுட்டு அப்பா போய் இருக்கார்.

ரகு கண்ணீரோடு எழுந்தான், நான் கெளம்புறேன் ..வந்தனா,

ரகு, நான் ஏன் இதெல்லாம் உன்கிட்ட சொன்னேன் தெரியுமா, நாளைக்கு நீயும் ஆபிஸ்ல, இல்ல என்னை பாக்க வீட்டுக்கு வர கூடாதுன்னுதான்…என்றாள்.

ரகு சிரித்தபடியே எழுந்து” நிச்சயமாய் வரமேட்டான் வந்தனா, வந்தனா பிரேம்குமார்; என்று சொல்லிட்டு சட்டென்று புறப்பட்டான்,

டுத்த வாரம், திங்கட்கிழமை, ஆபிஸ் ட்ரெயினிங் ஹாலில்..

வந்தனா, ரகுவை தேடினாள், அவன் இல்லை ,மறுநாளும் வரவில்லை.

அவன் செல்போனுக்கு தொடர்பு கொண்டாள். சுவிட்ச் ஆஃப் என்றது.

மேலும் இரண்டு நாட்கள் கழித்து, வெள்ளிக்கிழமை ரகு எண்ணிற்கு தொடர்பு கொண்டாள்,

சிறிது நேரம் கழித்து யாரோ எடுத்தார்கள்.

ஹலோ, ரகு..?

அவர் இல்லைங்க, வேலைக்கு போய் இருக்காரு செல்போன மறந்து வெச்சுட்டு போய்ட்டாரு, அவர் வந்ததும் சொல்றேன். நீங்க யாருங்க..?

நா… நான்.. வந்தனா,,. வந்தனா பிரேம்குமார் ன்னு சொல்லுங்க அவர்க்கு தெரியும்,

ஓ..சரிங்க,.. வெச்சுரட்டுமா…?

ஆமா…. நீங்க யாரு பேசுறது? என்றாள் வந்தனா.

நான்… சங்கீதா, சங்கீதா ரகு,

செல்போன் கட் ஆனது,

வந்தனா ஏதோ தொலைத்தவளை போல் அப்படியே அமர்ந்திருந்தாள்,

சிறிது நேரத்தில் செல்போன் அலறியது. ரகுதானோ என்று பரபரப்பாய் எடுத்தாள்.

அவள் அப்பா பேசினார், அம்மா, வந்தனா…. நாம மோசம் போய்ட்டோம்மா

மாப்ள மறுபடியும் தற்கொலைக்கு முயற்சி பண்ணி தூக்கு போட்டுகிட்டார்மா,

நம்மள விட்டு போய்ட்டாரும்மா, என்று புலம்பினார்.

என் பிடிவாதத்தால உன் வாழ்க்கைய பாழாக்கிட்டேனே என கதறி அழுதார்.

வந்தனாவின் செல்போன் நழுவியது., அவள் அழவில்லை.

ஒரே ஒரு கண்ணீர் துளி மட்டும் தரையில் பட்டு சிதறி உடைந்தது.

உடைந்த ஒரு துளியில் தெரிந்தது தனக்காக காத்திருந்த ரகுவின்

காதல்..உண்மை காதல்..!!!

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.