(Reading time: 9 - 18 minutes)

பலமுறை கேட்டு பாடிய பாடல்தான் .இன்று அவனுக்கு புதிதாக பல அர்த்தங்களை உணர்த்திக் கொண்டிருந்தது. முதன் முதலில் தன் காரை வழிமறைத்து அவள் சண்டை போட்ட விதம்.

அடுத்ததாக அந்த ஃபோன் கலாட்டா.. அதன்பின் அவளால் கீழே விழுந்தது.;

“அப்போவே அவக்கிட்ட விழுந்துட்டியா தமிழ்?” உள்மனம் கேலி செய்தது, எப்போது என்று சொல்லத் தெரியாமல் தானே இத்தனை நாளாக அமைதியாக இருந்தான் தமிழ்? ஆனால் அவளை நினைக்காமல் இருக்கவில்லையே.. அவளின் பெயரை உச்சரிக்க மறந்தது இல்லையே. மருத்துவமையில் “Thank You” கார்ட் கிடைத்தபோதெல்லாம் யாருக்கும் தெரியாமல் “T மற்றும் Y எழுத்துக்களுக்கு அருகில் இதயம் வரைந்து ரசித்த அவனது சிறுப்பிள்ளைத்தனத்தை என்னென்பது? சிரித்துக் கொண்டான்.

ஆனால்..ஆனால்..ஆனால்.. யாழினியின் தற்போதைய மனநிலை என்ன? அவ்வப்போது கோவிலில் அவளது புலம்பல்களை ஒட்டுக்கேட்டத்தின் மூலம்,அவள் தன்மீது கொலைவெறியில் இருக்கிறாள் என்பதை அறிந்தே வைத்திருந்தான் தமிழ்.

“சோடாபுட்டி, எனக்கு யெஸ் சொல்லுவியா?” மானசீகமாக அவனைக் கேட்டான்.

நான் கேட்கும் பதில் இன்று வாராதா?

நான் தூங்க மடி ஒன்று தாராதா?

தாகங்கள் தாபங்கள் தீராதா?

தாளங்கள் ராகங்கள் சேராதா?

வழியோரம்விழி வைக்கிறேன்!”.

தமிழின் கார் சேர்ந்த இடம் புகழின் வீடு தான் ! (அங்கத்தான் புவியின் டச்சு.. பட் அதை பார்க்குறதுக்கு முன்னாடி நம்ம மாமா.. அஹெம் அஹெம் ஐ மீன் தமிழின் அப்பாவை பார்க்க போவோம்).

சில நொடிகள் அமைதியின் சிகரம் போல அப்படியே நின்றிருந்தார் சுதாகர். தந்தையாக, கணவனாக மட்டுமின்றி வீட்டுத்தலைவர் என்ற முறையிலும் அவரது மனம் கலங்கி போனது. அந்த கலக்கம் வழக்கம்போல கோபமாகத்தான் வெளிவந்தது.

“இந்த வீட்டுல என்னத்தான் நடக்குது மனோ?” உரக்க ஒலித்தது அவரின் குரல். அவரது கோபத்தை எதிர்ப்பார்த்தே தான் இருந்தார் தமிழின் அன்னை மனோன்மணி.

“ ஆரம்பிச்சு வைச்சதே நீங்கதானே.. தமிழ் என்ன கைக்குழந்தையா? அவனுக்குனு ஒரு வாழ்க்கைய அவனால அமைச்சுக்க முடியும்.. நம்ம கைக்குள்ளயே பிள்ளைகளை வெச்சுக்கிறது பேரு நல்ல வளர்ப்பு இல்லைங்க.. அவனுக்கு எது பிடிக்கிதோ அதுக்கும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுங்க..”

“அதுக்காக யாரு என்னனு தெரியாத பொண்ணை நான் எப்படி ஏத்துப்பேன்னு நீ நினைக்கிற?” என்றார் சுதாகர். யாழினி மோகனின் மகள் என்ற விவரத்தை தமிழ் இன்னமும் அன்னைக்கு சொல்லாமல் இருந்திருந்தான். அதனால் யாழினியைப் பற்றி அறிந்தவரை ஒன்று விடாமல் ஒப்பித்தார் மனோன்மணி.

“படிக்கிற பொண்ணா? உனக்கும் தமிழுக்கும் பைத்தியம் பிடிச்சிருக்கா? தனக்குன்னு ஒரு அடையாளமே இல்லாத பொண்ணை கொண்டாடிட்டு இருக்கீங்க..”

“பைத்தியம் எங்களுக்கு இல்லை. நீங்கத்தான் டாக்டர் மகனுக்கு டாக்டர் மருமகள் வேணும்னு அந்த காலத்து கதைய பேசிட்டு இருக்கீங்க..”

“அந்த காலத்து மனுஷன்னு எதை வெச்சு சொல்லுற? பொண்ணு அழகா இருந்தால் போதும்.. நல்ல வரதட்சனை கிடைக்கிதான்னு கேட்டா முடிவெடுக்குறேன் நானு?”

“அதுக்காக நீங்க சொல்லுறது சரி ஆகிடாதுங்க… உங்க அக்கறை எனக்கு புரியுது,.. ஆனா அதை நீங்க வெளிப்படுத்துற விதம் சரி இல்லை. யாழினியை பார்த்து பேசுங்க. அப்பறமும் உங்களுக்கு இஷ்டம் இருக்கா இல்லயான்னு சொல்லுங்க.” என கறார் குரலில் சொன்ன மனோ எங்கெ அங்கு நின்று கொண்டிருந்தால் இன்னும் விவாதங்கள் தொடருமோ என்ற எண்ணத்தில் அங்கிருந்து நகர்ந்தார். குழப்பமான மனநிலையில் இருந்தார் சுதாகர்.  தன் மனைவி சொல்வதை எதிர்க்க முடியவில்லை. அதே நேரம் முழுமனதுடன் எதிர்க்கவும் முடியவில்லை. காலம் தான் விடை தர வேண்டும் என்று தனக்கே சொல்லிக்கொண்டார். காலம் சொன்ன பதிலென்னவோ?

“மணமகனே மணமகனே வா வா

உன் வலது காலை எடுத்து வைத்து வா வா” தன் வாசலில் அசடு வழிய நின்ற தமிழை இப்படித்தான் பாடி வரவேற்றான் புகழ்.

“ யெப்பா.. போதும்பா.. ஆளை விடு”என்று தமிழ் கைக்கூப்பிட

“நான்தான் எப்பவோ சொன்னேனே தமிழ், உங்க தலையெழுத்து என் யாழி கையில்தான்னு நம்புனீங்களா? லவ்வை சொன்னோமா, லவ் பண்ணோமான்னு இல்லாமல் சாரும் மேடமும் சுவிங் கம் மாதிரி இழுத்துக்கிட்டே போறீங்க.. இப்போ மட்டும் இந்த டியூப் லைட் மண்டைக்குள் யாரு ஸ்விட்சு தட்டினது?”என்று கேட்டான் புகழ். அவனது கேலியும் கிண்டலும்,மகிழ்ச்சியின் பிரதிபலிப்பாகவே தமிழுக்கு தெரிந்தது. இதற்கு முன் இப்படியெல்லாம் வாய்ப்பேசி அவனுக்கு பழக்கம் இல்லாததினால்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.