அப்படியே அவ அப்பா மாதிரி.
மகளை நினைத்த உடனே அவளது தந்தையின் நினைவும் கூட வர அவள் முகம் மகிழ்ச்சியில் திளைத்தது.
“என்னப்பா? வீட்டு நினைவா?”
அங்கே வந்திருந்த கமலா கேட்டாள்.
அவள் புன்னகையுடன் ஆமோதித்தாள்.
“ஆமா! இன்னிக்கு உன் கணவரோட பிறந்தநாள். அதனால் உன் குடும்பத்தோட இருக்கனும்னுதானே நேத்திக்கு நைட் டியூட்டி கேட்டு வந்தே? இன்னும் கிளம்பாம இருக்கே?”
அவளுக்கு பதில் சொல்லாமல் உதட்டைப் பிதுக்கினாள்.
“ஓ! உன்னை மாத்திவிட ஸ்டெல்லா வரனும்ல. இன்னிக்கும் சொதப்பிட்டாளா?”
பதிலாய் புன்னகைத்துக்கொண்டாள்.
“எல்லாம் நீ கொடுக்கிற இடம். சரி. எனக்கு நேரமாயிடுச்சு. நான் வர்றேன்.”
அவள் சென்றுவிட்டாள்.
ஸ்டெல்லா வருவதற்குள் மற்றவர்களுக்கு ஏதாவது வேண்டுமா?
...
This story is now available on Chillzee KiMo.
...
ter;">
தொடரும்...
{kunena_discuss:1154}