(Reading time: 12 - 24 minutes)

“அவளோட அப்பா எங்க கல்யாணதுக்கு ஒத்துக்கிட்டதே, நாங்க யூ.எஸ்-ல செட்டில் ஆகனும்ங்கிற கண்டிஷனோடதா.  பாவம் சௌமி! அவங்க வீட்ல சம்மதம் வாங்குறதுக்கு ரொம்பவே கஷ்டபட்டுட்டா.  அவட்ட போயி எனக்கு பப்ளிக் செர்வீஸில் (Public service) தான் இன்ட்ரெஸ்ட் இருக்கு.  இஞ்சினியரிங்கே பெத்தவங்களோட விருப்பத்துக்காக படிச்சேன்னு சொல்ல முடியாது.  சௌமிய விட்டு கொடுத்துதா எனக்கு பிடிச்சத செய்ய முடியும்னா, அது எனக்கு வேணா மச்சா! ஆனா எல்லாரையும் பிரிஞ்சு தெரியாத நாட்டுல ஒரு ஐ.டி வேலைய செயனும்ங்கறத...” சொல்லிக் கொண்டிருந்ததை பாதியில் நிறுத்தியவனிடம் ஒரு பெரு மூச்செழுந்தது.     

அவன் சொல்லாதவைகளையும் ஓரளவுக்கு ஜெய்யால் புரிந்து கொள்ள முடிந்தது.  அவனை தன்னோடு அணைத்து, “உனக்கு நானிருக்க ரூபின்!  இத்தனை நாள் நீ எனக்கு செய்த கொடுமை எல்லாத்தையும் திருப்பி கொடுக்காம விட்றுவேனு நினைச்சுட்டியா? அது நடக்காது மச்சா! நீ எங்கயே இருந்தாலும் உன்னை தொந்தரவு செய்துட்டே இருப்பேன்” அவன் வயிற்றில் ஒரு குத்துவிட்டு, வேடிக்கையாக பேசி, அதில் ‘நானிருப்பேன் நண்பா’ என்ற நம்பிக்கையும் சேர்த்து கொடுத்தான் ஜெய்.

ஜெய்யிடம், மனதிலிருப்பதை பகிர்ந்து கொண்டது ஆறுதலாக இருந்தது.  அவனுடைய வார்த்தைகள் சற்று நம்பிக்கையையும் கூட்டியிருக்க இயல்புக்கு திரும்பியிருந்தான் ரூபின்.

“பார்த்தியா... பேசி பேசியே என் டைமை வேஸ்ட் செய்துட்டியே மச்சா! உனக்கென்ன பிஸ்னெஸ் பண்ண போற... நான் இந்த கேம்பஸ் இன்டெர்வியூல கோட்ட விட்டுட்டு சௌமி அப்பாட்ட போயி நிக்க முடியாது.  என்னதா அவர் என்னோட வேலைக்காக ஏற்பாடு செய்ய தயாரா இருந்தாலும், எனக்கு அதுல விருப்பமில்லை.  ஒழுங்கா இந்த இன்டெர்வியூ க்ளியர் செய்துட்டு அவர் முன்னாடி போயி மாப்பிள்ளை கெத்த மெய்டெய்ன் பண்ணனும்.  அடுத்த ரௌண்ட் இன்னும் பத்து நிமிஷத்துல இருக்கு, நான் கிளம்புற மச்சா!” என்று பரபரப்பாக எழுந்து கொண்டவனிடம், பழைய ரூபின் முழுதாக திரும்பியிருந்தான்.

“ஆல் தி பெஸ்ட் மச்சா!” என்று அவனுக்கு வாழ்த்து கூறி அனுப்பி வைத்தான் ஜெய்.

கேம்பஸ் இண்டெர்வியூவிற்காக பல கம்பெனிகள் காலேஜை படையெடுத்திருந்தன.  மற்றவர்களும் அதில் தங்கள் திறமைக்கான வேலையை கண்டிபிடிக்க சென்றிருந்தனர்.  தந்தையின் விசுவாசிகளிடமிருந்து பிஸ்னெஸின் பொறுப்புகளை தான் ஏற்பது என்ற முடிவிலிருந்த ஜெய், காலேஜுக்கு வர வேண்டிய அவசியமே இல்லாத போதும் நண்பர்களுக்காவும் சரயூவுக்காகவும் வந்திருந்தான்.

மனோரஞ்சித பூக்களின் மணம் அவன் மனதை நிறைத்த நொடி சரயூவின் முகம் மனக்கண்ணில்.  அவளை தினமும் பார்த்து, பேசி, பழகிய இத்தனை நாட்களில் சாதிக்க முடியாத எதையும் இந்த கல்லூரியிலிருந்து வெளியேறிய பின்னர் செய்திட முடியுமா?!

உற்சாகத்தில் துள்ளி குதித்து ஓடி வந்து இவனருகில் உட்கார்ந்தாள் சரயூ.

தன்னுடைய குழப்பங்ககளை ஒதுக்கிவிட்டு ‘எதுக்கு இவ்வளவு சந்தோஷம்?’ என்று யோசித்தவனுக்கு, உடனேயே பதிலும் கிடைத்திட அவளுக்கு சற்றும் குறையாத உற்சாகத்தோடு

“ஹேய் சரூ! வேலை கிடைச்சிருச்சா?” பதில் தெரிந்த கேள்வியை அவளிடம் கேட்டான்.

“ஆமா சஞ்சு!” துள்ளி எழுந்து அவன் முன்னால் வந்து நின்றிருந்தாள்.

“கங்க்ராட்ஸ் சரூ!” விரிந்த புன்னகையோடு, அவள் கரத்தை பிடித்து குலுக்கினான்.  என்னவோ அவனுடைய பல நாள் ஆசை நிஜமாகி, அதில் வெற்றியும் கண்டவனை போல் மகிழ்ந்தான் ஜெய்.  சற்று முன் மனதிலிருந்த சஞ்சலத்தை அவளின் மகிழ்ச்சி அலைகள் அடித்து தூரத் தள்ளியிருந்தன.

இவன் முன் சற்று குனிந்து கையை குலுக்கியவள், “உங்க எல்லாருக்கும் இன்னைக்கு என்னோட ட்ரீட்.  உனக்கு எங்க போகனும் சொல்லு சஞ்சு... அங்கேயே போகலாம்” ஆர்பரித்து அவன் மகிழ்ச்சிக்கு இன்னும் இனிப்பு கூட்டினாள்.

பொதுவாக நண்பர்கள் அனைவரும் எங்காவது போகலாம் என்று சொன்னாலே, அது இவள் தேர்ந்தெடுக்கும் இடமாக தான் இருக்கும்.  எல்லோரையும் பேசி, கொஞ்சி, கெஞ்சி என எதையும் செய்து முடிவை தனக்கு சாதகமாக்கியிருப்பாள்.  காரணம், சென்ற இடத்துக்கே திரும்ப செய்லவது அவளுக்கு பிடிக்காது என்பது தான்.  அதே சமயம், அவள் தேர்ந்தெடுக்கும் இடமும் எல்லோரும் ரசிக்கும் படியாகவே இருந்திடும்.

இன்றோ! அவளின், ‘உனக்கு எங்க போகனும் சொல்லு சஞ்சு’ வில், அவனுடைய விருப்பத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அவனை வியப்பில் ஆழ்த்தினாள்.

அவனால் இன்னும் நம்பமுடியாமல் கேட்டுவிட்டான், “சரூ! நீ நிஜமாதா கேக்குறியா? நான் தான் போற இடத்தை சூஸ் செய்யனுமா?” முகத்தில் அப்பியிருந்த ஆச்சரியத்தோடு அவளை ஏறிட்டான் ஜெய்.

“என்ன இப்படி கேக்குற, சஞ்சு?! பிடி என் ஃபோனை, எங்க போகலாம்னு ப்ரௌஸ் (Browse) பண்ணி சொல்லு” கைபேசியை அவன் கையில் திணித்துவிட்டு

“உன்னோட ஃபோனை கொடு... நம்ம ஃபேர்வெல் பிக்சர்ஸ் பார்க்கனும்” கைபேசியை பறித்து கொண்டு அவனருகே உட்கார்ந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.