(Reading time: 12 - 24 minutes)

தன்னவளின் உற்சாக சாரலில் நனைந்தவனோ, இதற்கு முன் அவள் சென்றிறாத, அவளை ஈர்க்கும்படியான இடமாகாவும் ஒன்றை தேடும் வேட்டையில் இறங்கினான்.

“இந்த ஃபோட்டோல நீ ரொம்ப ஹாண்ட்சமா இருக்க சஞ்சு!”

“ஹே இங்க பாரேன்! ரூபின் சௌம்யாட்ட எப்படி வழியிறான்னு?”

“சஞ்சு! இந்த மோனி உன்னை பார்க்கற பார்வையே சரியில்ல.  ஒரு வேளை உன்னை லவ் பண்றாளோ? எதுக்கும் விசாரிச்சுக்கோ”

“இதுல நான் கூட அழகாயிருக்கே”

“வேதிக் பாரேன் லூசு மாதிரி முழிக்கிறா இங்க.... அவன் வந்தா இந்த ஃபோட்டோவ காட்டி, அவனை இன்னைக்கு ஒரு வழியாக்குறோம்”

“உன்னை போயி நல்லவன்னு நினைச்சனே சஞ்சு! நீ என்னடானா இப்படி வழியுற....யார பார்த்து ஜொள்ளு விடுற?” அவசரமாக ஃபோட்டோவை ஜூம் (Zoom) செய்து பார்த்தாள்.  அதற்கு முன்னும் பின்னுமான படங்களை தள்ளி பார்த்தும் யாரென கண்டுபிடிக்க முடியவில்லை. 

எப்படி முடியும்...அவன் தான் அடுத்தாக இருந்த அவள் படத்தை அழித்திருந்தானே!

“ச்சே.... உன்னை மட்டும் க்ளிக் செய்தவ கைல கிடச்சா, என்ன செய்வேன்னு தெரியாது”

“நான் பாட்டுக்கு பேசிட்டிருக்கே.... பதில் கூட சொல்ல மாட்டிங்குற சஞ்சு” சட்டென அவனை எதிர்த்து போருக்கு தயாரானாள் சரயூ.

இவ்வளவு நேரமாக அவள் சொன்ன எல்லாவற்றையும் கேட்டு கொண்டிருந்தாலும் தனது தேடுதல் வேட்டையில் தீவிரமாக இருந்த ஜெய், இப்போது புன்னகை ஒன்றை அவளுக்கு பதிலாக்கினான்.

தலையை அசைத்து கண்களால் அவளுடைய கைபேசியைச் சுட்டியவன் மீண்டும் அதில் கவனத்தை செலுத்தினான்.

“சரி...சரி...நீ எங்க போறதுன்னு கண்டுபிடி... நாம இதை அப்றமா டீல் செய்துக்கலாம்” தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்துவிட்டு மறுபடியும் ஃபோட்டோக்களை பார்ப்பதில் கவனமானாள்.

சிறிது நேரத்திற்கெல்லாம் தனது தேடுதல் வேட்டையை வெற்றிகரமாக முடித்த ஜெய், “சரூ! இங்க பாரு இந்த ரெஸ்ட்ராண்ட் நல்லாயிருக்கு.  உனக்கு பிடிக்கும்னு நினைக்குறேன்” என்றவனின் கண்களோ அந்த உணவகத்தின் தகவல்களில் பதிந்திருந்தன.

இத்தனை நேரமாக வள வளத்தவளிடமிருந்து பதிலில்லாமல் போகவும் அவளிடம் திரும்பினான் ஜெய்.

வைரமாய் கண்கள் மின்ன, தாமரையாய் ஈர இதழ்கள் மலர, பொன்னாய் மிளிரும் கன்னங்களில் புதிதாக புகுந்திருந்த சிவப்பு என அனைத்தும் அவள் மனதை பிரதிபலிக்க..... அவளுடைய மதி முகத்தில் கூடுதல் அழகு இந்த வெட்கம். 

அந்நேரம் தன்னயே மறந்திருந்தாள் சரயூ!

கற்பனையில் மட்டும் இவன் கண்டிருந்த அவளின் வெட்கம், இன்று கண் முன் காணவும், தன்னையும் அறியாது உதடுகள் பிரிய, அசந்து போனான் ஜெய்.  அப்படியொரு அழகு அவளின் வெட்கம் சூழ்ந்த முகம்.

அவளது வெட்கத்தில் சொக்கிப் போனவன், அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளும் ஆவலில், அவளை நெருங்கி, சற்று தலையை மட்டும் வலபுறமாக சரித்து கைபேசியை பார்க்க முயன்றான்.  இத்தனையிலும் அவள் கவனத்தை ஈர்க்காது மெதுவாக செயல்பட்டவன், கண்ட காட்சியில் மகிழ்ச்சியின் உச்சிக்கு சென்றிருந்தான்.

வானில் பறக்க இறக்கை இல்லையென்றால் என்ன? காதல் உண்டு! என்று கத்த வேண்டும் போல் இருந்தது.

தன் வைரக் கம்மலை, ஜெய்யின் காதில் பார்த்து, அவனை கட்டிக் கொண்டாளே.... அந்த காட்சி தான் அவளிடம் வெட்கமாக பிரதிபலித்தது இன்று. 

அய்யய்யோ! இத என்னால நம்பமுடியல! நான் பார்க்குறது நிஜமா இல்லை கனவா? சரூ வெட்க பட்றாளே! என்று ஆர்பரித்து, உடனேயே அவளிடமாக சருக்கியது மனது.  இவ்வளவு அழகா இருக்காளே இந்த சரூ.  என்னால முடியல....என்னை என்னமோ செய்றா! விட்டா இன்னைக்கெல்லாம் அவளை பார்த்துட்டே இருப்ப.  நீயும் அதையேதா செய்வனு எனக்கு தெரியும் ஜெய்.  ஆனா இதுக்காக தானே நாலு வருஷமா காத்திட்டிருந்த? இப்பவே சரூட்ட உன்னோட காதலை சொல்ற இல்லைனா நடக்குறதே வேற என்று மனம் ஜெய்யிற்கு மிரட்டலோடான கட்டளையை பிரப்பித்தது.

இமைக்கும் நேரத்தில், அங்கிருந்த சில மனோரஞ்சித பூக்களை எடுத்து தன்னுடைய ஹாண்ட் பேன்டை (Hand band) கொண்டு கட்டியிருந்தான்.  ஓரிரு இலை மற்றும் புற்கள் சேர்ந்து, அது ஒரு அழகிய குட்டி பூங்கொத்தாக மாறியிருந்தது அவன் கைவண்ணத்தில்.   

வருடக் கணக்கான அவனுடைய காத்திருப்பு அந்த நொடி முடிய, சுவாசிக்க வழிவிடாது தடதடத்த இதயத்தை அடக்கி, நெஞ்சில் சுமந்த காதலோடு கண்கள் அவளை வருட, அவளின் உயிரின் ஆழத்தை தொட்டுவிடும் வேகத்தோடு,

“ஐ லவ் யூ!”

வலது காலை தரையில் ஊன்றி மறுகாலை மடித்து தன்னிடமாக பூங்கொத்தை அவன் நீட்டிக் கொண்டிருக்க, மலர்ந்த முகத்தோடு துள்ளி எழுந்தாள் சரயூ.

 

Episode 18

Episode 20

முத்து ஒளிரும்…

{kunena_discuss:1038}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.