(Reading time: 37 - 73 minutes)

ன்னங்க சொல்றீங்க.. அவனுக்கு இன்னும் கல்யாணம் ஆகலங்க.. அவனுக்கு சீக்கிரம் ஒரு கல்யாணம் நடக்கனும்னு எங்க அண்ணி வேண்டாத தெய்வம் இல்ல.. நீங்க இப்படி சொல்றீங்களே..”

“நான் சொல்லலம்மா.. உங்க பையன் ஜாதகம் அப்படி சொல்லுது.. உங்க பையனுக்கு 25 வயசுல தான் கல்யாணம் நடக்கும்னு கட்டம் சொல்லுது.. அதுவும் ஸ்டார்ங்கா இருக்கு.. உதாரணத்துக்கு சொல்லனும்னா, இப்போ நம்ம பொண்ணுக்கோ பையனுக்கோ கல்யாணம் பண்ண நினைச்சு எல்லாம் ரெடியா வச்சிருப்போம்.. ஆனா நல்ல வரன் அமையாது.. கையில் காசு இல்லாம இருப்போம், ஆனா நல்ல வரன் கூடி வந்து, எப்படியோ கல்யாணத்தை முடிச்சிருப்போம்.. இப்படியெல்லாம் நடக்கறதுக்கு காரணம், அந்த பொண்ணுக்கோ பையனுக்கோ கல்யாண யோகத்தை பொறுத்து இருக்கு..

அப்படித்தான் உங்க பையனுக்கும் 25 வயசுல கல்யாண யோகம் ஸ்ட்ராங்கா இருக்கு.. கண்டிப்பா அப்போ கல்யாணம் முடிஞ்சிருக்கனும்.. ஆனா நீங்க இன்னும் கல்யாணம் நடக்கலன்னு சொல்றீங்க.. ஆனா அந்த வயசை தாண்டினா அவருக்கு திரும்ப கல்யாண யோகம் இல்லம்மா.. நீங்க எவ்வளவு முயற்சி செஞ்சாலும் கல்யாணம் நடக்கறது கஷ்டம்..”

“இப்படி சொன்னா எப்படி ஜோசியரே.. எங்க பையன் இப்போ தான் கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்கான்.. ஆனா நீங்க அவனுக்கு கல்யாணமே நடக்காதுன்னு சொல்றீங்களே..”

“நான் உள்ளதை உள்ளப்படியே தான்ம்மா சொல்வேன்.. அதான் இப்பவும் என்கிட்ட தான் ஜோசியம்  பார்க்கனும்னு வர்றவங்க அதிகம்.. உங்க பையனோட ஜாதகத்தை ஒன்னுக்கு ரெண்டு முறை பார்த்தாச்சு.. நான் சொல்ற மாதிரி தான் இருக்கு.. ஏம்மா உங்கப் பையனுக்கு 25 வயசுல ஏதாச்சும் கல்யாணம் ஏற்பாடு செஞ்சு நின்னுப் போயிருக்கா.. ஒருவேளை அப்படி இருந்தா, ஒருவேளை வேற ஏதாவது கிரகபலன் அதை தடுத்திருக்கலாம்.. அப்படி ஏதாச்சும் நடந்திருக்காம்மா..??”

“இல்லங்க.. எங்க சொந்தக்கார பொண்ணுக் கூட கல்யாணம் செய்யலாம்னு பேசி தான் வச்சிருந்தோம்.. ஆனா அது பேச்சளவுல முடிஞ்சுப் போச்சு.. அப்போ எங்கப் பையனுக்கு 24 முடிஞ்சு 25 நடந்துக்கிட்டு இருந்துச்சு.. ஒருவேளை நீங்க சொன்ன மாதிரி தான் இருக்குமோ..”

“இல்லம்மா கிட்டத்தட்ட கல்யாணம் வரைக்கும் வந்திருக்கனும்.. ஏம்மா உங்க பையன் இவ்வளவு நாள் கல்யாணம் வேண்டாம்னு சொன்னதுக்கு நீங்க சொன்னது தான் காரணமா?? இல்ல காதல் அப்படி ஏதாவது இருக்கா?? ஒருவேளை உங்களுக்கு தெரியாம அவர் அந்த பொண்ணை கல்யாணம் செஞ்சுக்கிட்டு இருந்திருக்க போறாரு” என்று ஜோசியர் சொன்னதும், விஜிக்கு கோபம் வந்தாலும், ஒரு நிமிடம் கங்காவின் முகம் அவர் கண்முன்னே வந்துப் போனது.. ஆனால் அது வேறு கதையல்லவா?? அதனால் அதைவிடுத்து ஜோசியரிடம் பேச ஆரம்பித்தார்.

“நீங்க சொல்ற மாதிரி எங்க ராஜா கிடையாதுங்க.. வீட்டுக்கு தெரியாம கல்யாணமெல்லாம் செஞ்சுக்கமாட்டான்.. அப்படியே இருந்தாலும் எங்கக்கிட்ட அதுக்கப்புறம் சொல்லியிருப்பான்.. நீங்க தெரியாம ஏதாச்சும் பேசாதீங்க.. எங்க மகனுக்கு கல்யாணம் நல்லப்படியா நடக்குமா?? நடக்காதா?? இந்த வரனை எங்கப் பையனுக்கு முடிக்கலாமா??”

“அதான் சொன்னேனேம்மா.. உங்க பையனுக்கு இனி கல்யாண யோகம் கிடையாது.. அவருக்கு கல்யாணம் நடக்க வாய்ப்பில்ல.. ஆனா நான் ஒன்னும் கடவுள் கிடையாது.. இதுதான் நடக்கும்னு உறுதியா சொல்ல, உங்கப் பையனோட ஜாதகத்துல என்ன இருக்கோ அதை சொன்னேன்.. ஒருவேளை கடவுள் என்ன நினைச்சிருக்காரோ..

மத்தப்படி இந்த ரெண்டு ஜாதகமும் பொருந்தியிருக்கு.. இந்த பொண்ணுக்கும் கல்யாண நேரம் வந்தாச்சு.. பொண்ணோட பலன்படி உங்க மகனுக்கு கல்யாணம் நடக்கலாம். ஆனா அதுக்கு பத்து சதவீதம் தான் வாய்ப்பிருக்கு…. மீதி 90 சதவீதம் உங்க மகனுக்கு கல்யாணம் இனி நடக்கறது கஷ்டம்னு தான் சொல்லுவேன்.. ஒருவேளை என்னோட ஜோசியத்துல நம்பிக்கை இல்லைன்னா.. நீங்க வேற ஒரு ஜோசியரை கூட பாருங்க..” என்றார் தீர்மானமாக..

ஓரளவுக்கு பிரபலமான ஜோசியர் என்று தான் இவரிடம் வந்தது.. இவரே சொல்லும்போது விஜியால் இது பொய்யாக இருக்க வாய்ப்பிருக்கு என்று ஒதுக்கமுடியவில்லை.. துஷ்யந்திற்கு இனி திருமணம் நடப்பது கஷ்டம் என்று அவர் சொன்னது விஜிக்கே அதிர்ச்சியாக இருந்தது.. இதை எப்படி கோமதி தாங்கிக் கொள்வார்.. தன் மகனது திருமணத்தை குறித்து கோமதி எத்தனை எதிர்பார்ப்புகளோடு இருக்கிறார் என்பதை கூட இருந்தே பார்ப்பவராயிற்றே.. அவரிடம் ஜோசியர் சொன்னதை அப்படியே சொல்ல மனம் வரவில்லை.. எனவே மனதில் ஒரு முடிவெடுத்தவராக ஜோசியரிடம்..

“ஜோசியரே.. தன்னோட மகனுக்கு இனி கல்யாணம் நடப்பது கஷ்டம்னு சொன்னா எங்க அண்ணி தாங்கிக்க மாட்டாங்க.. ஏற்கனவே அவங்க உடம்பு சரியில்லாம இருந்து இப்போ தான் தேறியிருக்காங்க.. அதனால கடவுள் மேல பாரத்தை போட்டுட்டு இந்த கல்யாணத்தை நடத்தலாம்னு ஒரு எண்ணம்.. ரெண்டு ஜாதகமும் பொருந்தியிருக்குன்னு சொன்னீங்கல்ல.. அதனால அதை மட்டும் வீட்டுக்கு வந்து எங்க அண்ணிக்கிட்ட சொல்லி, கல்யாணத்துக்கு தேதி குறிச்சு தர்றீங்களா??” என்றுக் கேட்டார்.

“இங்க பாருங்கம்மா.. உள்ளதை உள்ளப்படியே சொல்லி தான் எனக்கு பழக்கம்.. வேணும்னா என்னோட அஸிஸ்டென்ட அனுப்புறேன்.. அவன் நீங்க சொல்ற மாதிரி சொல்லுவான்.. ஒருவேளை என்னோட பலன் தப்பாகி உங்க மகனுக்கு கல்யாணம் நடந்தா நானும் சந்தோஷப்படுவேன்.. ஆனா கல்யாணம் நின்னா.. திரும்ப திரும்ப நீங்க முயற்சி செஞ்சாலும் பலன் இல்ல.. இப்பவே சொல்லிட்டேன்..”

“புரியுதுங்க.. உங்க உதவிக்கு ரொம்ப நன்றி..ஆனா இதுக்கு ஏதும் பரிகாரம் இல்லையா??”

“நான் முன்ன சொன்ன மாதிரி, எல்லாம் முடிவு செய்யறது அந்த கடவுள் தான்.. அவரை நம்புங்க.. எல்லாம் நல்லப்படியா நடக்கனும்னு வேண்டிக்கோங்க.. மத்தப்படி பரிகாரம்னு எதுவும் இதுக்கில்ல.. மேல ஆக வேண்டிய காரியத்தை பாருங்க.. சாயந்தரமா என்னோட அஸிஸ்டென்ட்டை அனுப்புறேன்..” என்று கூறி அனுப்பி வைத்தார்.

“ஜோசியர் சொன்னதை உங்கக்கிட்ட சொல்லக் கூடாதுன்னு நினைச்சேன் அண்ணி.. நீங்க தாங்கிக்க மாட்டீங்கன்னு தெரியும்.. இருந்தாலும் ஜோசியர் சொன்னது என்னோட மனசை உறுத்திக்கிட்டே இருந்துச்சு.. அவர் சொன்ன மாதிரி இல்லாம இந்த கல்யாணம் நல்லப்படியா நடக்கனும்னு நினைச்சேன்.. அதான் எந்த பிரச்சனையாலும் இந்த கல்யாணம் நின்னுடக் கூடாதுன்னு பயந்தேன்.. கடைசியில அந்த ஜோசியர் சொன்னது உண்மை ஆயிடுச்சு.. நம்ம ராஜா கல்யாணம் நின்னுப் போச்சு… அப்போ இனி அந்த ஜோசியர் சொன்ன மாதிரி அவனுக்கு கல்யாணம் நடக்க்காது அண்ணி.. அதை நினைச்சா மனசுக்கு கஷ்டமா இருக்கு..” என்று விஜி வருத்தமாக சொன்னதும், கோமதிக்கு என்ன சொல்லவென்று தெரியவில்லை..

தன் மகனுக்கு திருமணம் நடக்காதென்று ஜோசியர் சொன்னது அவருக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது.. அதிலும் அவர் சொன்ன மாதிரி நடந்ததில் கொஞ்சம் பயந்தே போனார்.. ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.. இப்போது விஜியை சரிப்படுத்துவது தான் முக்கியம் என்பது போல, தன் வருத்தத்தை உள்வாங்கிக் கொண்டவர், விஜிக்கு சமாதான வார்த்தைகள் கூறினார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.