(Reading time: 37 - 73 minutes)

ங்க கல்யாணத்தை ஊர்க்காரங்க முழுசா ஏத்துக்கல.. சிலப் பேர் சரின்னு சொன்னாங்க.. ஆனா நிறையப் பேர், அவங்க வீட்ல தங்கி இருந்த என்னை மீனா மயக்கி கல்யாணம் செஞ்சுக்கிட்டான்னு பேசனாங்க.. அவ நடத்தையையே தப்பா பேசினாங்க.. அதனால மீனாவால என் கூட சகஜமா பழக முடியல.. அதனால அவங்க அப்பா எங்களை வேற ஊருக்குப் போய் வாழ்க்கையை ஆரம்பிக்க சொன்னாரு..

அப்புறம் தான் இந்த எஸ்டேட்ல எனக்கு வேலை கிடைச்சு மீனாவை இங்க கூட்டிட்டு வந்தேன்.. கொஞ்ச நாள் எங்க வாழ்க்கை சந்தோஷமா தான் போய்கிட்டு இருந்துச்சு.. ஆனா எப்போ முரளி கண்ணுல இவ பட்டாளோ அப்பவே எங்களுக்கு பிரச்சனை ஆரம்பிச்சுது..

என்கிட்ட அவ உண்மையை மறைச்சு கல்யாணம் செய்துகிட்டதா அந்த முரளி நினைச்சுக்கிட்டான்.. அதை என்கிட்ட சொல்லிடுவன்னு மீனாவை மிரட்டி அவக்கிட்ட தொடர்பு ஏற்படுத்திக்க நினைச்சான்.. எனக்கு முன்னாடியே விஷயம் தெரிஞ்சிருந்தாலும், இப்போ முரளிய பார்த்தா நான் எப்படி நடந்துக்குவேனோன்னு அவ பயந்து அவனோட மிரட்டலை சொல்லல.. அப்படியே சமாளிக்கப் பார்த்தா.. இருந்தும் அவன் தொல்லை ஓவரா போகவும் முரளிய பத்தி என்கிட்ட சொல்லிட்டா.. எனக்கு எல்லாம் தெரியும், அதனால மீனாவை தொந்தரவு செய்யாம ஒதுங்கிடச் சொல்லி முரளிக்கிட்ட சொன்னேன்..

எனக்கு விஷயம் தெரிஞ்சிருந்தாலும் இங்க குவாட்டர்ஸ்ல இருக்க மத்தவங்களுக்கு எங்க விஷயமெல்லாம் தெரியாதில்ல… அதை வச்சு திரும்ப மிரட்டியிருக்கான்.. இங்க இருக்கவங்களும் அவளை தப்பா பேசிடக்கூடாதுன்னு மீனா பயந்து, ஊரை விட்டு போலாம்னு அழுதா.. அதுக்கு மேல நான் சும்மா இல்ல.. முரளிக்கிட்ட நேராவே பார்த்து பேசிட்டேன்.. நீ ஊர்ல இருக்கவங்கக்கிட்ட மீனாவை பத்தி தப்பா பேசினா.. நான் உன்னோட மனைவிக்கிட்ட மீனாவை ஏமாத்தினத பத்தியும், இப்போ அவளை மிரட்டறதையும் சொல்லிடுவேன்.. மீனாக்கிட்ட வம்பு வச்சிக்காதன்னு சொன்னேன்..

அதுல இருந்து வேலை விஷயத்துல எனக்கு தொந்தரவு கொடுத்தான்.. போக வர மீனாவை பார்த்தா ஏதாச்சும் தப்பா பேசுவான்.. பேசாம இந்த வேலையை விட்டுடலாம்னு தோனும்.. ஆனா ஒரு நல்ல வேலை கிடைக்கற வரைக்கும் அந்த முரளிய சமாளிக்கனும்… எனக்கு அவனை பார்த்து பயம் இல்ல.. ஆனா மீனா அசிங்கப்பட்டுடக் கூடாதேன்னு தான் பொறுத்துப் போயிட்ருக்கேன்.. எனக்கு வேலையில கஷ்டம் கொடுத்தாக்கூட பொறுத்திருப்பேன்.. ஆனா மீனாக்கிட்ட அவன் வம்பு வச்சிக்கிறத விரும்பல.. அதான் குவார்ட்டர்ஸ விட்டு காலி செஞ்சிட்டு இங்க வந்தோம்… ஆனா இன்னிக்கு மீனாவை பார்த்தவன், இப்படி நடந்துக்கிட்டு இருக்கான் சார்.. இனி அவனை சும்மா விடக் கூடாது… அவன் மனசுல என்ன நினைச்சிக்கிட்டு இருக்கான்… நான் அடங்கிப் போறதால, என்னை கோழைன்னு நினைச்சானா..?? இப்படியே அவன் செஞ்சுக்கிட்டு இருந்தா அவனை வெட்டிட்டு நான் ஜெயிலுக்குப் போக கூட தயாராயிருக்கேன்..” என்றதும் மீனா பதறியப்படி அவன் அருகில் வந்தாள்..

“இதுக்கு தான் மாமா நான் சொன்னேன்… நாம இந்த ஊர்லயே இருக்க வேண்டாம்.. நாம எங்கேயாச்சும் போய்டலாம்.. வேலை கிடைக்கற வரை பட்டினி இருந்தாக் கூட பரவாயில்ல..” என்று அழுதாள்.

“என்ன சுந்தர்.. வெட்டுக் குத்து தான் பிரச்சனைக்கு தீர்வா..?? பிரச்சனையை வேற மாதிரி சால்வ் பணணலாம்.. ஆனா அதுக்கு முன்னாடி உங்கக் கிட்ட ஒன்னு கேக்கனும்.. என்ன இருந்தாலும் முரளிக்கும் உங்க மனைவிக்கும் மேரேஜ் நடந்திருக்கு.. அதை வச்சு அவன் உங்களை கார்னர் செஞ்சா என்ன செய்வீங்க.. சட்டப்படி முதல் கல்யாணம் விவாகரத்து வாங்காம ரெண்டாவது மேரேஜ் செஞ்சுக்க முடியாதில்லையா??”

“எது சார் சட்டப்படி கல்யாணம்… எங்களுக்கு நடந்த கல்யாணம் தான் சட்டப்படி நடந்தது.. அந்த கல்யாணம் ஒரு நாடகம்.. அது அவன் நடத்துன நாடகம்.. அதை வச்சு என்னை அவன் கார்னர் செய்ய முடியாது.. அதுவும் இல்லாம அவன் ஒன்னும் நல்ல விஷயத்துக்காக இவளை அணுகல.. அவனுக்கும் கல்யாணம் ஆகி குடும்பம் இருக்கு… இருந்தும் இப்பவும் இவளை தப்பா யூஸ் செஞ்சுக்க தான் அவன் நினைக்கிறான்.. அப்படி இருக்கும்போது அந்த விஷயத்தை வச்சு அவன் என்னை எப்படி சார் கார்னர் செய்ய முடியும்..??”

“புரியுது சுந்தர்.. முரளியோட எண்ணம் தப்பு தான்.. ஆனா நான் இங்க வந்து எத்தனை நாள் ஆகுது.. உங்க விஷயம் முழுசா என்கிட்ட சொல்லலன்னாலும், முரளியோட தப்பான எண்ணத்தை என்கிட்ட சொல்லியிருக்கலாமே..??”

“முரளியோட அப்பாவும் இங்க மேனேஜரா இருந்ததுல இருந்து, அவங்க சொல்றதை தான் நீங்க கேப்பிங்களாம்.. உங்களால இங்க வர முடியாததால தான், அவனுக்கு இங்க பவர் கொடுத்து வச்சிருக்கீங்களாம்.. அதான் அவனை பத்தி உங்கக்கிட்ட சொன்னா நீங்க நம்பமாட்டீங்கன்னு நினைச்சேன் சார்…”

“முரளியோட அப்பாவும், எங்க மாமாவும் ரொம்ப க்ளோஸ், ரொம்ப வருஷமாகவே எங்க மாமா தான் இந்த எஸ்டேட் விஷயங்களை கவனிச்சிக்கிட்டு இருந்தார்… அவர் தான் அடிக்கடி இங்க வருவார்.. முரளியோட அப்பா இறந்ததுக்குப் பிறகு முரளிக்கு இந்த வேலையை போட்டு கொடுத்ததெ எங்க மாமா தான்… 3 வருஷத்துக்கு முன்னாடி அவர் இறந்ததுக்கு பிறகு, என்னாலாயும் என்னோட தம்பியாலயும் இங்க வர முடியவில்லை.. அதனால முரளிக்கிட்ட பொறுப்பை கொடுத்திருந்தோம்.. இருந்தும் அவனோட நிர்வாகத்துல எங்க ரெண்டுப்பேருக்கும் திருப்தி இல்ல.. ஆனாலும் பெரிய அளவுல அவனை பத்தி எந்த புகாரும் வராததால நாங்களும் அமைதியா இருந்தோம்..

ஆனா இது பெரிய தப்பு.. இது உங்களோட பர்சனலா இருக்கலாம்.. இருந்தாலும் இப்போ மீனா உங்க மனைவி, அவங்கள தப்பான எண்ணத்தோட முரளி பார்க்கிறது தப்பு.. இன்னைக்கு மீனான்னா நாளைக்கு இதே எஸ்டேட்ல வேலைப் பார்க்கும் வேற ஒரு பொண்ணுக்கிட்டயும் அவன் அப்படி நடந்துக்கலாம்.. அதனால இதை நீங்க என்னோட பார்வைக்கு கொண்டு வந்திருக்கனும்… இருக்கட்டும் பரவாயில்ல.. இப்போ தான் எனக்கு அந்த முரளியப்பத்தி தெரிஞ்சிடுச்சே… கண்டிப்பா அவன் மேல ஆக்‌ஷன் எடுப்பேன்… அப்புறம் நீங்க ரெண்டுப்பேரும் என்ன படிச்சிருக்கீங்க..??”

“ரெண்டுப்பேரும் டிகிரி முடிச்சிருக்கோம் சார்..”

“நல்லது… அப்போ ரெண்டுப்பேரும் மதியம் உங்க சர்டிஃபிகேட்டோட என்னை வந்து பங்களால பாருங்க.. நீங்க தான் இனி இந்த எஸ்டேட்க்கு மேனேஜர்.. அப்புறம் உங்க வைஃப் தான் இந்த எஸ்டேட்டோட சூப்பர்வைஸர்..” என்றதும் மீனா பதறினாள்.

“அய்யோ இதெல்லாம் வேண்டாம் சார்.. முரளி இனி எங்களை தொல்லை செய்யாம இருந்தா போதும்.. மத்தப்படி அவனை விலக்கிட்டு எங்களுக்கு இந்த வேலையை கொடுக்க வேண்டாம்.. அப்புறம் அவன் பெரிய பிரச்சனை செய்யப் போறான்..”

“Mrs. மீனா.. நீங்க பயப்பட வேண்டிய அவசயமில்லை.. எனக்கு இங்க பெரிய லெவல் ஆளுங்களை தெரியும்.. இனி உங்க ரெண்டுப்பேர்க்கிட்டேயும் அவன் வாலாட்ட மாட்டான்.. இனியும் அவனோட பொறுப்புல இந்த எஸ்டேட்டை விட நான் தயாராய் இல்ல.. அதான் உங்க ரெண்டுப்பேரையும் வேலைக்கு வச்சேன்.. ஒரு லேடி சூப்பர்வைசரா இருந்தா.. இங்க வேலை செய்யற மத்த லேடிஸ்க்கும் ஹெல்ப் ஃபுல்லா இருக்கும்னு நினைக்கிறேன்.. அதானால தான் இந்த முடிவுக்கு வந்தேன்.. இது தீர்மானமான முடிவு… சர்டிஃபிகேட் எடுத்துட்டு வரச் சொன்னது ஒரு ஃபார்மாலிட்டிக்கு தான்.. நீங்க மதியம் சர்டிஃபிகேட்டோட வாங்க.. உங்க ப்ராப்ளம்க்கு மதியம் சொல்யூஷன் கிடைச்சிடும்..”

“ரொம்ப நன்றி சார்.. நீங்க எங்களுக்கு ரொம்ப பெரிய உதவி செஞ்சிருக்கீங்க.. உங்களை வாழ்நாள் முழுக்க மறக்கமாட்டோம்.. ரொம்ப நன்றி கடன் பட்ருக்கோம் சார்..”

“என்ன சுந்தர் பெரிய வார்த்தையெல்லாம் பேசறீங்க.. நான் எதுவும் பெருசா செஞ்சிடல.. உங்க மனசுக்கு எல்லாம் நல்லப்படியா நடக்குது.. உங்களை கிரேட்னு புகழ மாட்டேன்.. நீங்க இப்போ இருக்கற மாதிரி எப்பவும் இருங்க.. உங்க மனைவிக்கு நல்ல சப்போர்ட்டா இருங்க அதுபோதும்.. இன்னும் சொல்லப்போனா நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லனும்.. என்னோட ஒரு பெரிய குழப்பத்துக்கு ஈஸியா ஒரு தீர்வு சொல்லியிருக்கீங்க.. அதுக்கு நான் தான் உங்களுக்கு கடமைப் பட்ருக்கேன்..” என்றான்.. மற்ற இருவரும் அவன் எதற்காக இப்படி சொல்கிறான் என்ற கேள்வியோடு பார்க்க, “அது என்னோட பர்சனல், சாரி என்னால அதை உங்கக்கிட்ட ஷேர் செஞ்சுக்க முடியாது..” என்றவன் அவர்களிடம் இருந்து விடைப் பெற்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.