(Reading time: 9 - 17 minutes)

அமிர்தா, நம் வீடு சேலம் ஏற்காடு பகுதியில்  நந்தவனத்தில் உள்ளது. உன் அப்பாவோட அப்பா, ஐ மீன் உன் தாத்தா பேரு ஆறுமுகவேல். மிகப்பெரிய நிலக்கிழார்,எஸ்டேட் நிறையா இருக்கு, மேற்பார்வை மட்டும் அப்பப்போ பார்ப்பார்.செம ஜாலி பெர்சன்... பாட்டி வள்ளிநாயகி அதுக்கு ஆப்போசிட், தப்பு பண்ணா தொலஞ்சோம், பட் க்யூட் பாட்டி, குடும்பத்த அழகா வழி நடத்துவாங்க. அவங்களோட சிறப்பே, நாம எதாவது குழப்பத்துல இருந்தா நல்ல தீர்வு சொல்வாங்க, அவங்க கணிப்பு என்றும் பொய்யானதுஇல்ல தெரியுமா? என்றான்.,அப்புறம் உன் அப்பா ஆதிநாதன், சாரி இப்போ அவர் இல்ல.. என வருந்தினான்.. அவர் கண்டிப்பானவர், நியாயமானவரு, தப்புனா தப்பு, சரினா சரி. தப்பு யார் செஞ்சாலும் தண்டனை உண்டு, ஆனா உதவி என்று வந்தால் அது உண்மையா என்று தெரிந்து கொண்டு கணக்கில்லாமல் செய்வார். பட் கோபம் அதிகம் வரும்,அதுவும்  நியாயமான கோபமாக தான் இருக்கும்.. அப்புறம் உன் அம்மா நகநந்தினிதேவி சாஃப்ட்டான மனசு, வீட்டு நிர்வாகம் அவங்கதான்.அத்தைய எனக்கு ரொம்பவும் பிடிக்கும்..

 “ஆமாம்மா, உன் அப்பா அம்மா உண்மையாலுமே மேட் ஃபார் ஈச் அதர், உன் அப்பா உன் அம்மாவ ராணி மாதிரி பாத்துக்கிட்டாரு. அவர் இருந்தவரைக்கும் உன் அம்மா இந்த  ஊருக்கே மகாராணி, இந்த ஊருக்கு உன் பேரன்ட்ஸ் நிறையா செஞ்சிருக்காங்க. இப்பவும் தான்.. ஊர்மக்கள் உன் அப்பாவ தெய்வமா வணங்கினாங்க. நீ 8 மாசம் உன் அம்மா வயிற்றில இருக்கும் போது தான் உன் அப்பா இறந்தது, அப்ப உன் அம்மா உடைஞ்சவ தான், இன்னவரைக்கும் உன் அம்மா முகத்துல சிரிப்பில்ல. அப்பப்ப விக்கி முகத்துக்காக சிரிப்பா,அவ்ளோதான், இப்போ உன்ன நினச்சி நினச்சி உடம்ப கெடுத்துகிட்டா, என வருத்தத்துடன் பேசிய வாசுதேவன், பின்,

உன்ன பார்த்தா கண்டிப்பாக குணமாகிடுவா, நீ வருவது அவளுக்கு தெரியாது, ஏன் வீட்டுல யாருக்கும் தெரியாது, தமிழுக்கு கூட உன்ன பார்த்ததுக்கு அப்புறம் தான் நான் அவன என்ன வேலயா கூப்பிட்டுக்கிட்டு வந்தேனு தெரிந்துருக்கும், என்ன தமிழ், அப்படிதான? என்றார் வாசு.

உடனே,

ஆமா பெரியப்பா, இப்படியா ஷாக் நியூஸ் தருவீங்க! என வினவினான் தமிழ்.

அதை கேட்ட அவர் மெல்லியதாக சிரித்தார்…

“உனக்கு 2சித்தப்பா இருக்காங்கமா, அவங்கதான் எஸ்டேட் எல்லாம் பாத்துக்கிறாங்க. ஆதிமூர்த்தி- சங்கரிதேவிக்கு ஒரு பையன்,இரட்டை பொண்ணுங்க, பேரு அபியுக்தன் விவசாயம்  படிச்சிருக்கான், எம்பிஏ கூட படிச்சிருக்கான் , பொண்ணுங்க காலேஜ் பர்ஸ்ட் இயர்,பேரு மின்விழி,மீன்விழி. 2வது சித்தப்பா ஆதிகேசவன்-சிவச்செல்வி, இவங்களுக்கு ஆதினினு ஒரு பொண்ணு +2 படிக்கறா, பையன் சந்திரன் டென்த். 2-ம் செம வாலுங்க". அப்புறம் ஒரு அத்தை, அவதான் என் மனைவி அனுபாமா, எனக்கு யாரும் கிடையாதுமா, நானும் தம்பியும் தான், சின்ன வயசுலயே என் அப்பா அம்மா இறந்துட்டாங்க, அப்புறம் நான் படித்து இப்போ இன்போர்ட்& எக்ஸ்போர்ட் பிஸ்னஸ் பண்ணேன், அப்போதுதான் உன் தாத்தா என்னை அனுக்கு கல்யாணம் பண்ணி வெச்சாரு. ஆனா அப்புறம் எங்ககூடதான் இருக்கனும்னு சொல்லிட்டாரு. இந்த அன்பான குடும்பத்தில் என்னையும் என் தம்பியையும் ஏத்துக்கிட்டது எங்க புண்ணியம்...என் தம்பி இப்போ மும்பைல இருக்கான். அவன் பையன் தான் தமிழ், இவன் இப்போ காலேஜ்ல எம்பிஏ படிக்கறான். ஒரு பொண்ணக்கூட லவ் பண்றான் என்றார் வாசு.

அதுவரை அமைதியாக கேட்டு வந்த தமிழ் “பெரியப்பா” என புலம்பவும், அவர் சிரித்துக்கொண்டே

ஓகே ஓகே இனி உன் சீக்ரெட்ட சொல்லல என்றார்.

அதான் சொல்லிட்டீங்களே! என தமிழ் முணுமுணுத்தான்.

அமிர்தா அதைக்கேட்டு புன்னகைத்தாள். பின், கார்கதவு வழியே வெளிபுறம் பார்த்தாள். கொண்டைஊசி வளைவு ஆரம்பித்தது, கார் வளைந்து வளைந்து சென்று கொண்டு இருந்தது. அதை கவனித்த வாசுதேவன்

“அவ்வளவுதானம்மா, வீடு வந்துவிடும்” என்றார்,

சிறிது நேரத்திற்கு பின் கார் மிகப்பெரிய கேட் அருகே வந்தது. யமுனா முழித்துக்கொண்டாள், பின் அமிர்தாவிடம்

 “அம்மு நாம வீட்டுக்கு வந்துட்டோமா” என கேட்டாள்.

ஆமா யம்மு என பதிலலித்தாள் அமிர்தா.

கேட் திறந்ததும் உள்ளே நுழைந்தது, அமிர்தா மிகப்பெரிய மாளிகை சாரி அரண்மனை கண்முன்னே தெரிந்ததை பார்த்தாள், யமுனாவும் ஆர்வத்துடன் கண்கள் விரிய பார்த்து,

ஐ! ஜாலி. வீடு சூப்பரா பெருசா இருக்கு, நான் நல்லா ஓடிப் பிடிச்சு விளையாடுவேனே என மகிழ்ச்சியுடன் கூறினாள்.

அமிர்தாவும் கவனித்தாள். வீடு பிரமாண்டமாகத்தான் இருந்தது.அதனோடு அழகிய  தோட்டம் அருமையாக பராமரிக்க பட்டிருந்தது.  ஆனாலும்  அதில் லயிக்க ஏனோ மனம் வரவில்லை, அடுத்து என்ன நடக்கபோகிறதோ என்ற எண்ணம் தான் வந்தது, ஏனெனில், இரு வருடமாகவே அவள் வாழ்க்கையில் அவள் எதிர்பாராத நிகழ்வுகள்தானே நடந்து கொண்டிருக்கிறது, என நினைத்தவாறு காரை விட்டு இறங்கினாள் அமிர்தா என்கிற அமிர்ததரங்கிணி.

தொடரும்

Episode # 02

{kunena_discuss:1158} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.