(Reading time: 38 - 75 minutes)

ம்பி தங்கைங்க தன்னைப் பிரிச்சு பார்த்ததுல ராஜா தாத்தாக்கும் மனசு விட்டுப் போச்சு.. ஆனா அப்பாவும் சித்தியும் பிரிஞ்சிருக்கிறத பார்க்க முடியாம, அவங்கக்கிட்ட பேசப் போயிருக்காரு.. ஆனா அவங்க இறங்கி வரல.. அவருக்கும் அங்க அவமானம் தான் கிடைச்சுது.. அதுக்குப்பிறகு அவரும் சமாதானத்துக்கு எந்த முயற்சியும் எடுக்கல.. கணவன் மனைவி ரெண்டுப்பேரும் சேராம கடைசி வரையும் வீம்பாவே இருந்து இறந்துட்டாங்க.. அவங்க தனி, ராஜாவோட தாத்தா தனின்னு ஆயிடுச்சு.. பிரிவுன்னு வந்ததுக்குப் பிறகும் அவங்க சும்மா இல்ல..

ராஜாவோட தாத்தா இங்க சென்னையிலேயே வியாபாரம் தொடங்க, அவங்களும் அவருக்கு எதிரா இங்க தொழில் தொடங்கினாங்க.. நிறையவிதத்துல அவருக்கு தொல்லை கொடுத்தாங்க.. ராஜாவோட கொள்ளு தாத்தா இறந்ததுக்குப் பிறகு திரும்ப கோர்ட்ல கேஸ் போட்டாங்க.. இருந்தும் அவங்களால ஜெயிக்க முடியல.. இப்படி அந்த குடும்பத்துல இருந்து பிரச்சனை எப்போ வரும்னே சொல்ல முடியாது.. அது ராஜா தலையெடுத்து தொழிலை கவனிக்க ஆரம்பிச்சப்பவும் தொடர்ந்தது..

அந்த குடும்பத்துல இருந்து பிரச்சனை வரப்பல்லாம், ராஜாவோட கொள்ளு தாத்தா, ராஜாவோட தாத்தா கூட இருந்து எல்லாம் பார்த்துக்கிட்டாரு.. அதேபோல ராஜா அப்பாக்கும் ராஜா தாத்தா கூட இருந்து பிரச்சனைகளை சமாளிச்சாரு.. ஆனா ராஜாக்கும் செல்வாக்கும் அப்படி அவங்க அப்பாவோட உதவி கிடைக்கல.. ராஜா படிச்சு முடிக்கிறதுக்கு முன்னாடியே அவர் இறந்துட்டாரு.. பசங்க படிக்கிறாங்கன்னு எந்தப் பிரச்சனையை பத்தியும் பசங்கக்கிட்ட அவர் சொன்னதில்ல.. படிச்சு முடிச்சதுமே ராஜா கம்பெனி பொறுப்புகளை எடுத்துக்க வேண்டியதா போச்சு.. அந்த குடும்பம் உறவு இல்லன்னு ஆனதுக்குப் பிறகு, இந்த குடும்பத்துல எல்லாரும் ஒத்த வாரிசாகவே பிறந்தாங்க.. எனக்கு தான் ரெண்டு பசங்க.. அதனால ராஜாக்கு உதவியா இருக்க, மாமாவோ, சித்தப்பா, பெரியப்பா இப்படி எந்த உறவும் அப்பா வழி சொந்தத்துல இல்லை.. என்னோட தம்பிக்கு தொழிலை கவனிச்சிக்கிற அளவுக்கு படிப்பு இல்லை.. செல்வாவோ அப்போ தான் காலேஜ்க்கு போய்க்கிட்டு இருந்தான்.. அதனால ராஜா தான் எல்லாம் பார்த்துக்க வேண்டியதா இருந்தது..

செல்வா தான் செல்லப் பிள்ளையா இருந்தாலும், ராஜா பத்தின கவலை எனக்கு எப்பவுமே உண்டு.. காரணம் அவன் வளர்ந்த சூழ்நிலை, முதல் பிரசவமே எனக்கு ரொம்ப சிக்கலா இருந்துச்சு.. நான் பிழைச்சதே பெரிய விஷயம்.. ஆனா குழந்தையை பார்த்துக்கிற அளவுக்கு எனக்கு தெம்பு இல்லை.. ராஜாவோட பாட்டியும் அப்போ உடம்புக்கு முடியாம இருந்தாங்க.. அதனால முழுக்க வேலைக்காரங்க பொறுப்புல தான் ராஜா வளர்ந்தான்.. அவனுக்கு என்னால தாய்ப்பால் கூட கொடுக்க முடியல.. அவனோட அப்பா தான் அடிக்கடி அவனை நல்லாப் பார்த்துப்பாரு.. ஆனா அவருக்குமே அவனோட நிறைய நேரம் ஒதுக்க முடியல..

ஒருப்பக்கம் தொழிலை பார்த்துக்கனும், ஒரு பக்கம் வயசான அப்பா, அம்மாக்கு தேவையானதை செய்யனும், ஒருப்பக்கம் உடம்பு முடியாம இருக்கும் மனைவியை கவனிச்சிக்கனும், ஒத்த ஆளா அவர் என்ன தான் செய்வாரு? அதான் வேலைக்காரங்க இருக்காங்களே, நமக்கு என்னன்னு இருக்கும் ஆள் இல்லை அவர்.. அதனால அம்மா நான் தான் ராஜா கூட இருக்க முடியலன்னா, அவனோட அப்பாக்கும் அவன் கூட இருக்க நேரம் கிடைக்கல..

நான் நல்லா தேறி வரவே 3 வருஷத்துக்கு மேல ஆச்சு.. இனி குழந்தையை நல்லா கவனிச்சிக்கனும்னு நினைச்சு ராஜாவை கவனிக்க ஆரம்பிச்சேன்.. என்னோட பிரசவத்துல எனக்கு ஆன நிலைமையை பார்த்த அவரோ, நமக்கு ராஜா மட்டுமே போதும்னு சொல்வார்.. ஆனா கடவுள் அப்படி நினைக்கலேயே!! திரும்ப நான் கர்ப்பம் ஆனேன்.. குழந்தை வேண்டாம்னு இருந்ததுல, நான் கர்ப்பம் ஆனதை கவனிக்கல.. கரு வயித்துல நல்லா வளர்ந்ததும் தான் எனக்கு தெரரிய வந்தது.. இந்த பிரசவமும் கொஞ்சம் சிக்கலா இருக்கும்னு டாக்டர் சொன்னாரு.. கரு நல்லா வளர்ச்சி அடைஞ்சதால அதை கலைப்பதும் கஷ்டம்னு சொல்லிட்டாங்க.. நான் நல்லா ஓய்வெடுத்துக்கனும்.. வேலையெல்லாம் செய்யக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க..

திரும்ப வேலைக்காரங்க பொறுப்புல எங்க ரெண்டுப்பேரையும் விட அவருக்கு மனசில்லை.. அதனால ஊர்ல கட்சிக்கு உழைக்கிறேன்னு சும்மா சுத்திகிட்டு இருந்த என்னோட தம்பி அண்ணாமலையையும் அவன் மனைவி விஜியையும் இங்க வரவச்சாரு.. என்னோட கல்யாணம் முடிஞ்ச ஒரு வருஷத்துலேயே அவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு, இருந்தும் இத்தனை வருஷம் அவங்களுக்கு குழந்தையில்லை.. எத்தனையோ டாக்டரை பார்த்து, எல்லாம் கடவுளிடமும் முறையிட்டு, இனி விதிவிட்ட வழின்னு ஒரு முடிவுக்கு விஜி வந்திருந்தா.. அவளுக்கு இந்த சூழ்நிலை நல்ல மாற்றத்தை கொடுத்துச்சு.. என்னையும், குழந்தை பிறந்ததும் செல்வாவையும் நல்லாப் பார்த்துக்கிட்டா..

ராஜாவையும் நல்லா பார்த்துக்கனும்னு அவளுக்கு ஆசை.. ஆனா அவன் விஜி கூட ஒட்ட மட்டான்.. விஜியோட கவனிப்புல நான் சீக்கிரமாகவே தேறி வந்தேன்.. இனியாவது பிள்ளையை நல்லா பார்த்துக்கனும்னு மனசுக்கு தோனுச்சு.. ஆனா என்கிட்ட கூட ராஜா ஒட்டல.. யார்க்கிட்டேயும் பேசமாட்டான்.. எப்பவும் அமைதியா இருப்பான்.. கேக்கற கேள்விக்கு மட்டுமே பதில் சொல்வான்.. மத்த குழந்தைங்க மாதிரி துறுதுறுன்னு இருக்கமாட்டான்.. எப்பவும் அவனோட அறையிலேயே அடைஞ்சு கிடப்பான்.. செல்வாவா அவன்கிட்ட போய் விளையாடினா கூட விளையாடுவான்.. எங்க எல்லாரையும் விட, அவனோட அப்பாக்கிட்ட கொஞ்சம் நெருக்கமா இருப்பான்... போக போக அதுவும் இல்ல.. சரி வீட்ல தான் இப்படி இருக்கான், ஸ்கூல்ல அவன் வயசு பசங்களோடயாவது நல்லப்படியா விளையாடுவானான்னு நாங்க எதிர்பார்த்தா? அங்கேயும் அவன் அமைதியா தான் இருப்பானாம்? அவனை மாதிரி அமைதியா இருக்க பசங்கக் கூட தான் பேசுவானாம்..

இவன் இப்படியே இருந்தா அப்புறம் எதிர்காலத்துல எப்படி இருக்கும்னு நான் ரொம்ப பயந்தேன்.. ஆனா அவனோட அப்பா எனக்கு தைரியம் சொல்வாரு.. போக போக காலேஜ், வேலைன்னு பார்க்கறப்போ அவன் மாறிடுவான்னு சொல்வாரு.. ஆனா அவன் காலேஜ் படிக்கும்போது கூட அவன்கிட்ட மாற்றம் இல்ல.. அப்பவே என் மனசுக்கு அடிக்கடி தோனும் விஷயம், அவனை அன்பா பார்த்துக்கும் ஒரு மனைவி கிடைக்கனும், குழந்தை, குடும்பம்னு அவன் சந்தோஷமா வாழனும்னு கடவுள்கிட்ட வேண்டாத நாள் இல்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.