(Reading time: 38 - 75 minutes)

கேதார கௌரி நோன்புக்காக பகல் முழுவதும் விரதம் இருந்து, மாலை வந்ததும் கங்கா கோவிலுக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். ஆனால் முழு மனதாய் கோவிலுக்கு செல்ல கங்காவால் முடியவில்லை.. அதற்கு காரணம் வாணி தான்.. இப்படி அவள் விரதம் மேற்கொள்ளும் போது, விரதம் முடியும் வரை பச்சை தண்ணீர் கூட அவள் அருந்த மாட்டாள்.. பொதுவாக இந்த விரத சமயத்தில் பால், பழம் உண்ணலாம்.. ஆனால் கங்கா அப்படி எதுவும் சாப்பிட மாட்டாள்.. இருந்தும் வாணி அமைதியாக இருக்க மாட்டார்.. அவளுக்கு பால் வேண்டுமா? பழம் வேண்டுமா? என்று அடிக்கடி கேட்டுக் கொண்டிருப்பார்.. கோவிலுக்கு செல்லும்போது உடன் வருவார்..  ஆனால் இன்று அவர் நடவடிக்கையே மாறுதலாக இருந்தது… ஒரு பிடித்தமில்லாதது போல் நடந்துக் கொண்டார்.. அவருக்கு இப்போது எனனதான் பிரச்சனை? தெரிந்துக் கொள்ளாமல் கோவிலுக்குச் செல்ல கங்காவுக்கு மனம் வரவில்லை.. நேரடியாகவே அவரிடம் என்ன பிரச்சனை என்ன என்று கேட்டாள்..

“நீ இந்த விரதம் இருக்கறது எனக்கு பிடிக்கல கங்கா..”

“ஏன் வாணிம்மா?? இரண்டு வருஷத்துக்கு முன்ன நீங்க தானே இந்த விரதத்தை இருக்க சொன்னீங்க??”

“ஆமாம் சொன்னேன்.. உன்னோட கழுத்துல இருக்க தாலிக்கு ஒரு அர்த்தம் கிடைக்கனும்னு சொன்னேன்.. ஆனா உன் கழுத்துல அந்த தாலி இருக்கறதே தேவையில்லைன்னு தோனுது.. அது உன் கழுத்துல இருக்கறதால உன் வாழ்க்கைல எந்த மாற்றமும் ஏற்படாதுன்னு எனக்கு புரிஞ்சுப் போச்சு.. அப்புறம் எதுக்கு இந்த விரதமெல்லாம்? உனக்கு நடந்த கல்யாணமே ஒரு நாடகம் தானே? அப்புறம் ஏன் அதை சுமக்கனும்.. பேசாம அதை கழட்டிடு..”

“நான் ஏன் இதை கழட்டனும்? என் கல்யாணம் முறைப்படி நடந்தது.. அக்னி சாட்சியா.. அம்மன் சாட்சியா இந்த தாலி என் கழுத்துல ஏறியிருக்கு.. என்னோட கல்யணத்துக்கு நீங்களும் ஒரு சாட்சி.. நீங்களே இப்படி சொல்லலாமா?”

“அப்போ உனக்கு நடந்த கல்யாணம் உண்மைன்னா.. நீ ஏன் ஒதுங்கி இருக்க.. உனக்கான உரிமையை ஏன் எடுத்துக்க மாட்டேங்குற..??”

“நான் தான் சத்தியம் செஞ்சு கொடுத்திருக்கேனே!! மனைவிங்கிற உரிமையை எடுத்துக்க மாட்டேன்னு சத்தியம் செஞ்சிருக்கேனே? அப்புறம் எப்படி வாணிம்மா..??”

“மத்தவங்களுக்காக மனைவிங்கிற உரிமையை விட்டு கொடுக்கலாம்.. ஆனா மனைவி நீதான்னு உன்னோட புருஷனுக்கே சொல்லாட்டி எப்படி? இந்த கொடுமை இன்னும் எத்தனை நாள் தொடரப் போகுது..  நீ யாருக்கு சத்தியம் செஞ்சுக் கொடுத்தியோ.. அவரே இப்போ உயிரோட இல்லையே?? அப்புறம் எதுக்கு இன்னும் இப்படி இருக்கனும்?”

“நான் யார் மேல சத்தியம் செஞ்சேனோ அவங்க உயிரோட இருக்காங்களே!! இதைப்பத்தி நாம நிறைய பேசிட்டோம்.. இதுக்கு மேல இதைப்பத்தி நான் பேச விரும்பல.. நான் கோவிலுக்கு போயிட்டு வரேன்..” என்று கங்கா விடைப்பெற்று கொண்டு கிளம்ப,

அந்த அம்மன் உன்னை ஏன் இப்படி சோதிக்கிறா?? இந்த முறையாவது உன்னோட விரதத்துக்கு அவ மனமிறங்கட்டும்..” என்று வாணி மனம் உருகி வேண்டினார்.

தடைப் படாத என் சுவாசத்திற்காக...

என் ஜீவன் காத்திருக்கிறது...!!

Episode # 26

Episode # 28

{kunena_discuss:1078}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.