(Reading time: 9 - 18 minutes)

துக்குப்பிறகு, அவனோட பிரண்ட் விஜய் ஆஸ்பிட்டலில் சேர்த்துட்டு எனக்கு போன் பண்ணினான். பதறிஅடிச்சிட்டுப் போனேன். உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை ஆனா அவன் குடிச்ச மருந்து அவனோட தொண்டைக் குழியையும், வயிற்றையும் புண்ணாக்கிவிட்டதாம். அதை விட வீரியமான மருந்துகள் கொடுத்தால் இன்னும் அதிகம் புண்ணாகும். எனவே காலப்போக்கில் தான் சரியாகும் என்று டாக்டர் சொல்லிட்டார். மாயா தனக்கு இல்லைங்கிற சோகத்திலேயே அவன் புத்தியும் பிசகிடுச்சு, கிட்டதட்ட ஆறுவருஷமா அவனை ஒரு குழந்தையைப் போல நான் பார்த்திட்டு வர்றேன். ஆசையா வளர்த்த பையன்,

ஒவ்வொரு முறை அவன் சாப்பிடும் போதும் படற அவஸ்தை , ஒரேயொரு சோற்றுப்பருக்கை போய் மாட்டிக்கிட்டா போதும் வலி உயிர் போகும். அது என்னன்னும் சொல்லத் தெரியாம அவன் அழுவான் மரணவலி ஸார், அவனைப் பார்த்து பார்த்து நான் இதை தினமும் அனுபவிக்கிறேன். பெரும் குரலெடுத்து அழுதான் துரை,

பாண்டி... என்று வீரா மெல்ல அவன் தோளில் கைவைத்தார். அதை மனதில் வைத்துதான் இப்போ மாயா​வை  கொன்னுடீங்க இல்லையா ?

அய்யோ சத்தியமா இல்லை ஸார். மாயா மேடமை கொல்லணுமிங்கிறது என் நினைப்பு இல்லை, ஆனா அவங்களால என் தம்பியோட வாழ்க்கையே குலைஞ்சி போச்சு அவங்க மட்டும் எப்படி கல்யாணம் பண்ணி நிம்மதியா வாழலாம் அதனால தான் இங்கே பொய்யா நடிச்சு வேலைக்கு சேர்ந்தேன், மாயாம்மா இறக்கிறதுக்கு முன்னாடி இங்கே பெரிய சண்டையே நடந்தது. அப்போ  தோட்டத்துப் பக்கம் ரொம்பவும் யோசனையோட இருந்தவங்களை  நான்தான் அரைமணி நேரம் ஏதும் தெரியாதபடி இருக்க ஒரு இன்ஷக்ஷன் போட்டேன், ஒரு​கோவத்தி​லே ஊசி​போட்​டே​னே தவிர தப்பு என் தம்பி​மேலயும் தா​னே அவங்க மட்டும் என்ன​செய்வாங்க யாருக்கும் தண்ட​னை தர்ற​அதிகாரத்​தைfகடவுள்நமக்குத் தரவில்​லை அதற்குபிறகு என்ன​ செய்றதுன்னு ​தெரிய​லை அங்​கேயிருந்து உட​னே கிளம்பி ​போயிட்​டேன் அதற்கு மறுநாள் தான் அவங்க தற்கொலை பண்ணிட்டாங்க.

நீதோட்டத்திலே இன்ஷக்ஷன் பாட்டிலை தேடியதையும் அதை கொண்டு வந்து கமல் தந்ததுமே தெரிந்திட்டது மாயா இறக்கிறதுக்கு முன்னாடி ஏதோவொரு மருந்து செலுத்தப்பட்டு இருக்குன்னு சொன்னதை நான் பார்த்தேன். அப்போதான் எனக்கு உன்மேல சந்தேகம் வந்தது?!

உன் தம்பிக்காக நீ மாயாவைக் கொன்னுட்டே அப்படித்தானே ?

அய்யோ ஸார் மாயா மேடமிடம் என் தம்பி படற பாட்டை சுட்டிக்காட்டுவதற்காகத்தான், அவங்களோட மறுப்பை கொஞ்சம் மனசு வறுத்தப்படாம சொல்லியிருக்கலான்னுதான் கேட்க நினைத்தேன. பாண்டியை அந்த நிலைமையிலே மாயாம்மா பார்த்தாங்கன்னா நிச்சயிம் அவங்க மனசு மாறும் பாண்டிக்கும் ஒரு வழி பிறக்குன்னு நினைச்சேன். ஆனா நடந்தது வேற மாதிரியிருந்தது. மருந்து ஏத்தின அரைமணிக்கள் நாம என்ன சொன்னாலும் அந்த மருந்தை செலுத்திகிட்டவங்க கேப்பாங்க, ஆனா நான் மருந்தை செலுத்தி கொஞ்ச நேரத்தில சந்துரு வந்திட்டாரு என்னாலே மாயாமேடமை வெளியே கொண்டு வர முடியலை, என் தோல்வியை ஒப்புக்கொண்டு நான் வந்திட்டேன்.

நான் துரையை என் கஸ்டடியில் எடுக்கிறேன் அதுக்குப் பிறகு மேற்கொண்டு நடக்கும் விசாரணையில் மற்றவை வெளியாகும்.

வீரா மணியை அழைத்துப் போகும் போதே இன்னும் சிக்கல் அவிழலை, இப்போது மணி அடுத்து நீங்கதான் மிஸ்டர் சந்துரு, மாயாவோட இறப்புக்கு ஒரு மணிநேரத்திற்கு முன்னாடியே நீங்க அங்கே இருந்ததா மணியோட வாக்குமூலம் அப்போ

சார் அங்கே சுத்தி இங்கே சுத்தி என்னையே குறை சொல்றீங்க நான் அன்னைக்கு என்ன நடந்ததுன்னு உண்மையைச் சொல்லிடறேன்.

நீங்க என்ன கதை அளக்கப்போறீங்க

இது கதையில்லை ? உண்மைதான்,

ம்.. சொல்லுங்கள் அதையும் கேட்போமே ?!

அதேநேரம் வீராவின் கைப்பேசி சிணுங்கியது. அப்படியா நல்லவிஷயம் நான் உடனே வர்றேன்

என்னாச்சு

நாம உடனே இங்கிருந்து புறப்படணும் பெங்களூருக்கு !

பெங்களூரு எதுக்கு ? சந்துரு வாய்திறந்தான்.

போயிட்டு வந்து சொல்றோம் இப்போதைக்கு டிரைவர் மணியை நான் கைது செய்யறேன். நீங்க இரண்டு பேரும் என்கூட வாங்க எதையுமே தெளிவாக உரைக்காமல் அவர்கள் கிளம்பிச்சென்றதும் சந்துருவுக்கு என்னமோ போல் ஆகிவிட்டது. வேறு வழியின்று அவனும் விஜயாவுடன் கிளம்பினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.