தயக்கம், மறைமுக கேள்வி என எதுவுமில்லாமல் நந்திதா நேரடியாக அந்த கேள்வியை கேட்ட விதம், அவனுக்கு தெரிந்த பழைய நந்திதாவை நினைவுப் படுத்த, அவனின் தயக்கம் மறைந்து போனது.
“தெரியும் பாஸ்... உங்க ஹஸ்பன்ட் ஆச்சே... எனக்கு தெரியாமல் போகுமா?”
“ஜெய், உண்மையை சொல்ல போறீயா இல்லையா?”
“என்ன பாஸ் போலீஸ்காரனையே இப்படி கேள்வி கேட்டு மிரட்டுறீங்க?”
“நான் உன் கிட்ட பேசனும் ஜெய்... அன்னைக்கு நாம சந்திச்ச காபி ஷாப்புக்கு வர முடியுமா?”
சந்தித்தால் நந்திதா என்ன மாதிரியான கேள்விகள் கேட்பாள் என்பதை அனுமானிக்க முடிந்ததால்,
“கொஞ்சம் பிஸியா இருக்கேன் பாஸ்... இன்னொரு நாள் மீட் செய்வோமா...” என்று மழுப்பலாக பதில் சொன்னான் ஜெய்.
“நீ பிஸியா இருந்தா, நானே உன் ஆபிஸ்க்கு வரேன்... உன் ஆபிஸ் எங்கே இரு
...
This story is now available on Chillzee KiMo.
...
்டு தான் இருந்தது...!
“ம்ம்ம்... ஆமாம்... அப்புறம், போட்டோஸ் வாங்க போறது பத்தியும் சொன்னேன்... அவர் என்ன சொன்னார் தெரியுமா?”
நந்திதா என்ன என்பது போல அவனை பார்த்தாள்.
“என்ன ஆனாலும் சரி நந்திதா சின்னதா கூட எந்த விதத்திலும் ஹர்ட் ஆகாம இதை ஹாண்டில் செய்யனும்னு சொன்னார்...”