(Reading time: 22 - 43 minutes)

தொடர்கதை - விழிகளிலே காதல் விழா - 32 - தேவி

vizhikalile kadhal vizha

ஹாய் .. பிரெண்ட்ஸ். லாஸ்ட் எபிசொட் கடைசியில் உள்ள டயலாக் சில தவறுகள் இருந்தது.. அதை சரி செய்து அதில் இருந்து இந்த எபிசொட் ஆரம்பிச்சு இருக்கேன்.. படிச்சுட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க .. நன்றி 

ப்போது வேலன் முன்னே வந்து

“செழியன் சார் அம்மா , அப்பாவா நீங்க..? ரொம்ப நல்ல பையன் மா. உங்க புள்ள “

செழியனின் பெற்றோர் முகம் விகசிக்க வேலனிடம் கை கொடுத்து நட்பாகி கொண்டனர்.

அப்போது செழியன் அம்மா,  வள்ளியிடம் “உங்க பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்கறீங்களா? என்று வினவ, அதற்கு பதில் சொல்ல விளைந்த வள்ளியை பேச விடாமல் பாட்டி கிளம்ப சொன்னாள்.

ஆனால் செழியன் அப்பா “தம்பிக்கு ஏற்கனவே பொண்ணு ரெடி ஆக இருக்கும்மா.. “ என்ற பதிலில் மலரின் அம்மா மனம் சுருங்கி விட்டு இருந்தாலும், ஏனோ அவரால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை.

வேலன் எதையும் வெளிக் காட்டிக் கொள்ளாமல் “ரொம்ப சந்தோஷம் அண்ணாச்சி.. சீக்கிரமே நல்ல சேதி சொல்லுங்க..”

அதுவரை ஒரு விறைப்பு தன்மையுடன் இருந்த சிவஞானம் , அவர் பேசிய பாஷையில் “ கண்டிப்பா.. உங்களுக்கு எல்லாம் சொல்லமலா.. நம்ம வீட்லேயும் சீக்கிரம் நல்லது நடக்கும்.. எங்களுக்கும் சேதி சொல்லுங்க..”

இப்போது மலரின் பாட்டி “நாங்களும் அதத்தான் எதிர் பார்த்துட்டு இருக்கோம் தம்பி.. உங்கள மாதிரி பெரியவுக ஆசீர்வதத்துலே புள்ளைக்கு சீக்கிரம் விஷேசம் வரணும்”

இப்போது இரு பெண்களும் மனமார சிரித்து விடை பெற்றனர்.

செழியன் பெற்றோரோடு செந்திலின் மனைவியும் அமர்ந்து இருந்தாள். அவள் திருமணத்தின் போது எல்லோரையும் பார்த்து இருந்தாலும் , பழக்கம் இல்லை..

செழியன் ஏற்கனவே உறவுக்காரன் என்பதோடு பொங்கலுக்கு சென்று இருந்த போது செந்தில் , செழியன் வீட்டிற்கு அவன் மனைவியை அழைத்து சென்று இருந்ததால் அவர்களிடம் போய் அமர்ந்து கொண்டாள்.

மலரின் வீட்டினருக்கு அவளை அறிமுகபடுத்தி வைத்தார் செழியனின் அப்பா.. விழா முடியவும், செந்தில் மனைவியை வீட்டில் கொண்டு விடுவதாக இருந்ததால் உடனே கிளம்பி விட்டனர் செழியன் அப்பா , அம்மா.  

கிளம்பும் போது வடிவு ஆச்சி “ஐயா. வேலா.. பேச்சிய வர சொல்லு.. பார்த்துபுட்டு புறப்படலாம். “

“அம்மா.. என்ன இது.. காலேஜ்லே வச்சு பேச்சிங்க... மலரு கேட்டா.. உன்னிய ஏச போறா பார்த்துக்கோ..”

“தெரியாம வாயிலே வந்துடுச்சு.. அதுக்கு ஏன் இந்த குதி குதிக்கிற.. அவ தான் சாமியாடுவான்னா நீ அவ காலிலே சலங்கைய கட்டி வுடுவ போலிருக்க.. “

“சரி. .சரி.. இத சொல்லிட்டு நீ இங்க சலங்கை இல்லாம ஆட ஆரம்பிசுராதம்மா.. இப்போ அவளை வர சொல்ல முடியாது.. அங்கன வந்துருக்கிற விருந்தாளிங்கள எல்லாம் அனுப்பிட்டு, காலேஜ் புள்ளங்களையும் பத்திரமா அனுப்பிட்டு இங்கயே சாப்பிட்டு அவுக ஏற்பாடு செஞ்சுருக்கிற பஸ்லே வந்துடுவா.. சொல்லிட்டு தான் வந்தா..”

“எல்லாம் சரிதா.. ஆனா நம்மூட்டு புள்ள இவ்ளோ அறிவா வேலை பார்க்குது. அத பார்த்து நாலு நல்ல வார்த்தை சொல்லிட்டு போலாம்னா.. இப்படி சடஞ்சிகிடுத”

“ஆத்தா.. இங்கே எத்தனை பேர் கலந்துகிட்டாங்க.. அவங்க வீட்டிலே எல்லாம் வந்துருக்காங்க.. இப்படி ஒவ்வொருத்தரும் நின்னு பார்த்துட்டுதான் போவோம்னா.. எப்போ எல்லாரும் கலையுறது.. அப்புறம் அவுக எப்போ புறப்பட்டு வீடு போய் சேருறது.. நம்ம புள்ள வீட்டுக்கு தான வரும்.. அங்கன பார்துகிடலாம்.. இப்போ வாங்க .. “

“அதுவும் சரிதான்.. இந்தா வள்ளி.. மறக்காம புள்ள வந்ததும் அதுக்கு சுத்தி போடு.. என்ன அம்சமா.. அந்த மேடையிலே நின்னு பேசுச்சு.. “ என்று பேசிக் கொண்டே.. சென்றார்.

லர், செழியன் மேடையில் இருவரும் இருந்தாலும் அவர்கள் கண்கள் முழுக்க தங்கள் பெற்றோரிடமே நிலைத்து இருந்தது.

செழியன் மலரின் பெற்றோரிடம் தன் பெற்றோர்களை அறிமுகபடுத்தி , அவர்கள் வீட்டோடு ஒரு இணக்கமான சூழ்நிலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணியிருந்தான்.

அவன் அறிமுகபடுத்தும் முன்னமே இருவரின் பெற்றோரும் பேசிக் கொண்டு இருந்தது கண்டு மகிழ்ச்சியாக இருந்தவன், நடுவில் அவர்களிடையே சிறு முகசிணுக்கமும் கண்டான். அதன் பின் சிரித்து சென்றதையும் பார்த்தான். அவர்கள் என்ன பேசி இருப்பார்கள் என்ற யோசனை உள்ளூர ஓடியது.

விழா முடிந்து காலேஜ் பேராசரியர் அனைவருக்கும் அங்கேயே டின்னெர் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதே போல் அவர்கள் வீடு திரும்புவதற்கும் பஸ் தயாராக இருந்தது. இது எல்லாம் ஏற்கனவே தெரியும் ஆதலால் இருவரின் பெற்றோரும் கிளம்பி விட்டனர்.

விழா நல்லபடியா முடிந்ததும் அவர்கள் காலேஜ் வாட்ச்மன் கரஸ்பாண்டன்ட் ஆரம்பித்து காலேஜ் ப்யூன் வரை அனைவரையும் நிற்க வைத்து பூசணிக்காய் சுற்றி போட்டு தான் அனுப்பி வைத்தான்.

பப்பே முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த விருந்தில் எல்லோரும் விழாவை பற்றின நிறைவோடு பேசிக் கொண்டே சாப்பிட்டனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.