(Reading time: 22 - 43 minutes)

“சரி.. சரி.. இனிமே இப்படி எல்லார் முன்னாடி சொன்னானு தெரிஞ்சுது .. உன்ன ஆச்சின்னு கூப்பிட மாட்டேன்.. பூச்சின்னு தான் கூப்பிடுவேன் பார்த்துக்கோ..”

“சரி கண்ணு” என்று அவர் இறங்கி வர, இதுதான் சரியான நேரம் என்று எண்ணியவளாக

“ஆச்சி.. நேத்திக்கு நாங்க எல்லாம் நல்லா விழாவ நடத்திக் கொடுத்தோம்லே ..அதுக்கு பரிசா எங்க எல்லாரையும் டூர் கூட்டுட்டு போறாங்களாம்.. நானும் போய்ட்டு வரேனே “

அவள் அப்பாவும், அம்மாவும் திகைத்து விழிக்க, அவள் ஆச்சியோ

“அதெல்லாம் வேண்டாம் மலரு.. உனக்கு எங்கியும் போகனுமா .. உன் அப்பன், ஆத்தாவோடு போயிட்டு வா.. இப்படி எல்லாம் போக கூடாது..”

“ஏன் ஆச்சி..? நான் இன்னும் சின்ன புள்ளையா.. இப்போ எல்லாம் ஸ்கூலில் டூர் கூட்டிட்டு போறாங்க.. இன்னும் சொல்ல போனா இந்த வருஷம் இந்த விழான்னாலே காலேஜ் படிக்கிற பசங்களுக்கு டூர் இல்லை.. அப்படி இருந்தா அவங்கள பாதுகாக்க நான் போகணும்.. நீ என்னடான்னா என்னைய அனுப்ப மாட்டேன்குற..”

“என்னைய பத்திதான் தெரியுமில்ல.. நீயே வரலன்னு சொல்லிட்டு வர வேண்டியதுதானே..”

“க்கும்.. நான் அப்படி சொனந்துக்கு தான் மொத்த கூட வேலை பாக்குறவங்களும் உன்கிட்ட வந்து பேசறேன்னு சொன்னாங்க.. செழியன் சார் கூட வரேன்னு சொன்னாரு.. இப்போ நான் வரலன்னு போன் பண்ணினால் அவங்க எல்லோரும் இங்க வந்து நிப்பாங்க.. அது நல்லா இருக்குமா சொல்லு ?”

“நான்தான் அனுப்ப மாட்டேன்னு சொல்றேன்லே..”

“ஆச்சி.. ப்ளீஸ் ஆச்சி.. நான் அவங்ககிட்டே உன்கிட்ட பேசிக்கறேன்னு சொல்லிருக்கேன்.. உன் செல்ல பேத்தி தானே.. நீதானே சொன்ன.. எவ்ளோ தைரியமா நான் எல்லார் முன்னாடியும் பேசினேன்னு .. அது வளரனும்நா இப்படி நாலு இடம் போனாதனே வரும் . அதோட நீ நேத்து பார்த்தியே .. செந்தில் அண்ணாவோட மனைவி.. அவங்க கூட வராங்க.. வேணுமானா.. ஒன்னு செய்.. நீ என்கூட வா.. “

“ஆத்தி.. நான் வரல தாயி. நமக்கு இந்த பனி எல்லாம் ஒத்துக்காது.. “ என, அவர் கொஞ்சம் இளகுவது தெரியவும், மேலும் ஐஸ் வைத்து பேசி ஒத்துக் கொள்ள வைத்தாள்.

“இங்க பாரு மலரு.. எனக்கு ரெட்டை மனசாதன் அனுப்பறேன்.. நீதான் கவனமா போயிட்டு வரணும் சரியா ?” என

“இப்போதான் நீ என் செல்ல பியுட்டி ...நீ கவலைப்படாத.. நான் பார்த்து இருந்துக்கறேன் சரியா ..” என்றவள்

நேராக தன் அப்பாவிடம் சென்றவள் “அப்பா.. நான் உங்ககிட்டே கேக்குறதுக்கு முன்னாடி பாட்டி கிட்டே கேட்டேன்னு நினைக்காதீங்க.. உங்ககிட்டே எப்படியும் சம்மதம் வாங்கிருவென்னு நம்பிக்கை.. ஆச்சிதான் லேசில் சம்மதிக்காது.. அதான் முதலில் அங்கே போயிட்டேன்.. அப்பா ப்ளீஸ் நான் டூர் போயிட்டு வரேன்..”

“அம்மாவே சொன்னதுக்கு பொறவு நான் என்ன சொல்ல போறேன்.. ஆனா ஆச்சி இவ்ளோ கவலைபடுது அப்படின்னா அதுக்கு உலகமே நீதான்மா.. உன்ன ஒருநாள் பாக்கட்டியும் அதாலே சாப்பிட முடியாது .. நீ அப்போ அப்போ போன் பண்ணி உன் பத்திரத்த சொன்னதான் சாப்பிடும்.. அதாலே.. நீ அத மட்டும் சரியா செஞ்சுரும்மா..”

“எனக்கும் ஆச்சி பத்தி தெரியும்பா.. அதுனாலே நான் கண்டிப்பா பாத்துக்கறேன் “ என்றவள் “வள்ளி ..எனக்கு எல்லாம் பாக் பண்ணி வை” என்று தன் அம்மாவை ஏவினாள்

“அடிங்க.. உங்கப்பாட்டையும், ஆச்சி கிட்டயும் கெஞ்சி, கொஞ்சி கேட்டுட்டு இருக்க.. என்னிய  மட்டும் அதட்டுவியோ .. போடி அங்கிட்டு..” என்று அவர் முறுக்கினார்.

“ஏய்..வள்ளி.. நீ தவம் இருந்து பெத்த ஒத்த புள்ள நானு.. என் மனசு நோக விட்டுடுவியா நீ.. நீயும் நானும் ஒண்ணுதானே.. நான் என்ன நினைகிறேனோ.. அத நீ செஞ்சுடுவ.. அவ்ளோ ஒத்துமை.. நீ எல்லாம் எங்கிட்ட கோச்சுகக்கலாமா ? போ .. போ வள்ளி..” என்று அடுக்கு மொழி பேசி அவள் அன்னையை சிரிக்க வைத்தாள்.

“சரியான வாலு “ என்று சிரித்தபடி அவளுக்கு தேவையானதை செய்ய சென்றார்,

அவள் உள்ளே செல்லுமுன் மலரை அழைத்த சுந்தரவடிவு

“கண்ணு.. ஆச்சி.. உன்கிட்ட ஒன்னு கேப்பேன்.. கோச்சுக்க கூடாது..”

“நீ என் செல்ல பியுட்டி ஆச்சே.. என்ன கேளு..”

“உனக்கு அந்த செழியன் தம்பி மேலே ஏதும் நோக்கம் இருக்கோ ?” என்று கேட்க,

இந்த நேரத்தில் அந்த கேள்வியை எதிர்பார்க்காத மலர் , முழிக்க அவள் சுதாரித்து பதில் சொல்லுமுன்

“அப்படி எதுவும் இருந்தா விட்டுடு கண்ணு.. “

“ஏன் ஆச்சி?”

“இப்போ என்னாலே சொல்ல முடியாது.. உனக்கு நா பொறவு விவரம் சொல்லுதேன்.. நான் சொன்னத மட்டும் நினைப்பிலே வச்சுக்கோ..”

பாட்டியின் இந்த வார்த்தை கேட்ட மலரின் மனதினில் குழப்பங்கள் வர ஆரம்பித்தது.. எத்தனை ஆசையாக இந்த பயணத்தை எதிர்பார்தாளோ இப்போது எல்லாம் பாலில் தெளித்த நீர் போல் அடங்க ஆரம்பித்து, யோசனைகளே இடம் பிடித்தது.

இந்த பயணம் அவளுக்கு என்ன வைத்து இருக்கிறதோ ?

தொடரும்!

Episode # 31

Episode # 33

{kunena_discuss:1126}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.