(Reading time: 22 - 43 minutes)

கரஸ்பாண்டன்ட் எல்லோரையும் வெகுவாக பாராட்டினார். இதன் ஆரம்பத்தில் இருந்து எல்லோருக்கும் இடையே பாலமாக இருந்தது செழியன் என்பதால் அவனை தனியாக பாரட்டினார்.

எல்லோருக்கும் களைப்பு இருந்தாலும் அதையும் மீறிய நிறைவும், சந்தோஷமும் தோன்றியது. இந்த ஒரு வார நிகழ்ச்சிக்காக செய்த உழைப்பு கிட்டத்தட்ட இரண்டு மாத உழைப்பு. ஒவ்வொருவரும் ஒரு பொறுப்பு எடுத்து இருந்ததால் எல்லோருமே பரபரப்பாக இருந்தனர்.

இன்று இது எல்லாம் அடங்கி எல்லோரும் மகிழ்ச்சியோடு இருந்தனர். எல்லோரும் டின்னெர் முடிக்கும்போது பிரின்சிபால் ஒரு அறிவிப்பு செய்தார்.

“டியர்.. பிரெண்ட்ஸ்..விழா நல்ல படியா முடிந்தது.. அதுக்கு உங்க எல்லோரட உழைப்பும், ஒத்துழைப்பும் தான் காரணம்.. நாம ஏற்கனவே முடிவு செய்தபடி ஸ்டுடென்ட்ஸ்க்கு நாலு நாள் லீவ் விட்டாச்சு.. இப்போ நம்ம கரஸ் நமக்கு டூர் ஏற்பாடு பண்ணிருக்கார்.. அவரோட ஊட்டி எஸ்டடேலே போய் நம்ம எல்லோரையும் ரிலாக்ஸ் பண்ண சொல்றார். நம்ம பாமிலிலே ஒருத்தர் கூட வரலாம்.. நாளைக்கு நைட் இங்கிருந்து கிளம்ப எல்லா ஏற்பாடும் செய்திட்டார்.. “ என்று அறிவிக்க ஸ்டுடென்ட்ஸ் மாதிரி ஒரே கைதட்டலும் விசிலும் பறந்தது.

சற்று வயதான ஒரு ப்ரொபசர் “சார்.. எல்லோரும் வரணுமா.. எனக்கு எல்லாம் கொஞ்சம் ரெஸ்ட் வேணும்.. வீட்டிலே இருந்துக்கலாமா?” என்று கேட்க, மேலும் நாலைந்து பேர் கேட்கவே கரஸ்..

“ஓகே.. ஓகே.. யார் எல்லாம் வரணுமோ வாங்க.. முடியல என்றால் ரெஸ்ட் எடுத்துக்கோங்க.. பட் எனக்கு நாளைக்கு மதியம் ஒரு மணிக்குள்ள சொல்லிடுங்க.. நான் அதுக்கு ஏற்றார் போல் சில ஏற்பாடுகள் செய்யணும்..” என எல்லோரும் ஓகே என்றனர்.

எல்லாம் முடிந்து கிளம்பும்போது காலேஜ் பஸ்சில் இதே பேச்சாக இருக்க , இவர்கள் டிபார்ட்மெண்ட் எல்லோரும் போகலாம் என்று முடிவு செய்தனர். செந்தில் அவன் மனைவியை அழைத்து வருவதாக சொல்ல எல்லோரும் ஓ என்று கைதட்டினர்.

மலர் சற்று தயக்கத்தோடு எச்.ஓ.டி இடம் “சார்.. நான் கண்டிப்பா வரணுமா ?” என்று கேட்டாள்.

“ஏன்.. மலர்.. என்ன பிரச்சினை..?”

“இல்ல.. வீட்டிலே கேட்கணும்.. சரின்னு சொல்லுவங்களா தெரியல ?”

“எல்லோரும் வீட்டிலே கேட்கணும் தான்.. ஆனா ஏன் மாட்டேன்னு சொல்லுவாங்க..?”

“பாட்டி.. இது மாதிரி டூர் எல்லாம் அனுப்ப யோசிப்பாங்க.. அதோட வீட்டிலேயும் ரிலாக்ஸ்டா இருந்து ரொம்ப நாள் ஆச்சா.. அப்பாவும் அம்மாவும் ..வீட்டிலே இருக்க சொல்லி கேப்பாங்க.. “

“நீ கேட்டு பாரும்மா.. வேணும்ன்னா செழியன் வந்து உங்க வீட்டிலே பேச சொல்லவா ?” என

செந்தில் “அது சரி..” என்று நமுட்டு சிரிப்பு சிரித்தான்.. அவன் இடுப்பில் குத்தியவன்,

“நீங்க கேட்டு பாருங்க மலர்.. “

“ஆமாம்.. மலர்.. என் மனைவி வராங்க ..அவங்களுக்கு கம்பெனி கொடுக்க என்று சொல்லி கேட்டு பாருங்க.. “

வளர்மதியும் “ஆமாம் மலர்.. வேணும்னா நானும் வரேன்.. வீட்டில் கேட்க.. எல்லோரும் கேட்கும்போது கண்டிப்பா அனுப்புவாங்க..” என்று வற்புறுத்த,

சற்று தயங்கிய மலர் “சரி.. நான் வீட்டிலே கேட்டு காலையில் சொல்றேன்..” என்றாள்.

“சொல்ற.. இல்ல.. வர.. அவ்வளவுதான்.. “ என்று சொல்லி முடித்தார்கள். எல்லோரும் பேசிக் கொண்டு இருந்ததில் அவரவர்கள் இடம் வர, இறங்க ஆரம்பித்தனர்.

மலர் இறங்கும்போது அவர்கள் வீட்டில் இருந்து சற்று தள்ளி ஒரு பஸ் ஸ்டாப் இருந்தது.. அங்கே இறங்கி கொண்டவள் , எல்லோரிடமும் விடை பெற்று நடக்க ஆரம்பித்தாள்.

எச்.ஓ.டி.. “செழியன் .. அவங்க வீட்டில் விட்டுட்டு வா.. ரொம்ப லேட் நைட் ஆச்சு.. பாரு.. “ என

மலர் “பரவாயில்லை சார்.. வீடு பக்கம் தான்.. “ என்றாள்.

“இருக்கட்டும்மா. தனியா போக வேண்டாம்.” என்றவர் செழியனை பார்க்க, அவனும் இறங்கி அவளோடு சென்றான்.

சற்று தூரம் வந்ததும் “ஹலோ.. மை..விழி.. மேடம்.. இன்னிக்கு அசத்துடீங்க.. போங்க.. “ என்று வம்பிழுக்க,

அவனை முறைத்தவள் பின் சிரித்தபடி “ நல்லா இருந்துதா.. ? இதுதான் பர்ஸ்ட் டைம் இந்த மாதிரி மாஸ்டர் ஒப் செர்மனி பண்றது.. கொஞ்சம் நெர்வஸ் ஆகவே இருந்தது. அதிலும் பி.எம். எல்லாம் வரவே.. ரொம்ப டென்ஷன்தான் எனக்கு..”

“ஹேய்.. என்ன எல்.கே.ஜி.. புள்ள மாதிரி பயந்துகிட்டு.. சூப்பரா பண்ணின.. வர வர என் விழி டார்லிங் திறமை எல்லாம் பார்த்துட்டு ஐயா மயங்கி போய் இருக்கேன்.. தெரியுமா ?”

“இளா சார்.. இந்த உளறல் எல்லாம் போன்லே தானே இருக்கும்.. இன்னிக்கு என்ன இப்போவே ஆரம்பிச்சுடீங்க?”

“இதுக்கு மேலே.. எங்க போன்லே உளறரது.. அதான் இப்போவே ஸ்டார்ட் பண்ணிட்டேன்..”

“ரொம்பத்தான்.. சரி வீடு வந்துட்டுது.. நீங்க கிளம்புங்க..”

“இரு உள்ளே போய் பெல் அடி.. அவங்க திறக்கட்டும்.. அப்புறம் கிளம்பறேன்.. “

அவள் பெல் அடித்துவிட்டு, கதவு திறப்பதற்காக காத்து இருக்கவும்,

“விழிம்மா.. இன்னிக்கு ஆளும் செம அழகா இருந்தடா.. என் கண்ணு உன்னை விட்டு எங்கியும்  திரும்ப மாட்டேன்னுட்டு ஸ்ட்ரைக் பண்ண ஆரம்பிச்சுருச்சு..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.