(Reading time: 70 - 139 minutes)

அலுவகத்தில் அவனின் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த நபர் இரு நாட்களுக்கு முன்பு தான் மகேனை அவர்களின் அலுவகத்திற்கு வெளியே பார்த்தாகவும் மகேன் யாரிடமோ தொலைபேசியில் பேசியப்படியே, அவனை பார்த்து புன்னகைத்து சென்றதாக சொன்னான்.

அர்விந்த் மனதில் மின்னலடித்தது! கலைவாணனின் வீடுக்கு முன்பு காத்திருந்த அந்த கார் மகேனின் கார். அதற்குள் அவன் எப்படி அங்கு சென்றிருக்க கூடும். இங்கே அவனுக்கு தேவையான தகவல்கள் ஏதும் கிடைக்காததால் ஆதியை பற்றி அவன் விசாரிக்கமாட்டான் என தான் போட்ட கணக்கு பொய்யாகி போனதை நம்பமுடியவில்லை அவனால்.

மகேனுடன் அங்கிருப்பது இன்னொரு நபர் யாரென்று தெரிவில்லை என்றாலும் இனி அலுவகத்தில் அமர்ந்து ஒவ்வொரு நிமிடத்தையும் வீணடிக்க முடியாதென தோன்றவும் அங்கிருந்து சென்றான்.

காரில் செல்லுகையில் தனது அலுவலக மேலரிடம் அவனுக்கு அரைநாள் விடுமுறை வேண்டும் எனவும் அவனின் வீட்டில் சற்று அவரசமாக வர சொல்லி அழைப்பு வந்தாகவும் ஒரு பொய்யை சொன்னான்.

வெகு நேரம் காத்திருந்த தீபனின் கண்ணில் அர்விந்த் தென்பட்டான். அவனின் வேலை நேரத்தில் யாரிடமோ போனில் பேசியபடி மிகவும் அவசரமாக எங்கோ செல்வது கண்ணில் பட, அவனின் காரை பின் தொடர்ந்தான்.

அர்விந்த் நேராக அவனின் வீட்டுக்கு சென்றான். அவன் சற்று பதற்றமாக இருப்பது தெரிந்தது. காரை வீட்டின் வெளியே நிறுத்தியவன், என்ஜினை ஆஃப் செய்யாமல், காரின் கதவை சாத்தாமல், அவசரஅவசரமாக வீட்டினுள் சென்றான். அவன் மீண்டும் வெளியே வருகையில், அவனின் கைகளில் ஒரு பெட்டியும், காகிதங்களும் இருந்தன.

அவற்றைய காரினுள் வைத்தவன் மீண்டும் வீட்டினுள் ஓடினான். திருப்ப வருகையில் அவனது கையில் ஓர் அட்டை பெட்டி இருந்தது. அதையும் காரினுள் வைத்தவன், மீண்டும் அவசரமாக காரை கிளப்பிக்கொண்டு வேறோரு இடத்திற்கு சென்றான்.

அரவிந்த்தின் செய்கையும் பதற்றமும் தீபனுக்கு அவனின் மேல் சந்தேகத்தை விதைத்தது. ஆகையால் செல்லும் வழியில் அவனுடன் வேலை செய்யும் மாறனுக்கும் வினோத்க்கும் அழைத்து சுருக்கமாக சொல்லி தனக்கு உதவு செய்ய முடியுமா? என கேட்க அவர்கள் உடனே தீபன் சொல்லும் இடத்திற்கு வருவதாக சொன்னார்கள்.

காரை ஓட்டிக்கொண்டே அவன் தற்போது இருக்கும் இடத்தை வாட்ஸ்அப்பில் லொகேஷன் ஷேர் செய்தான்.

வினை விதைத்தவன் அவனது வினைகளை அறுக்கிறான். ஆனால் எந்த தவறும் செய்யாதவர்களின் வாழ்க்கை திருப்ப கிடைக்குமா?

அரவிந்தின் கார் ஏரியை நோக்கி சீறிப் பாய்ந்தது. அவனை பின் தொடர்ந்து வந்த தீபன் மனதில் "இவன் எதற்கு இவ்வளவு வேகமாக செல்லுகிறான். இவன் கண்டிப்பாக எதையோ மறைக்க பார்க்குறான்?” நினைத்து, சற்று இடைவேளை விட்டே அர்விந்ததை பின் தொடர்ந்தான்.

தீபன் நினைத்தது சரிதான் என்பது போல அர்விந்த் காரை ஏரியின் ஓரத்தில் நிறுத்தினான். அவனின் வீட்டிலிருந்து எடுத்து வந்த காகிதங்கள் எல்லாவற்றையும் ஏரியின் அருகே போட்டான். மீண்டும் காரினுள் சென்று எதையோ தேடிக்கொண்டிருந்தான்.

தீபன் உடனே தன் இருக்கும் இடத்தை சொல்லி அவர்களையும் அங்கே  வர சொன்னான். சற்று நேரத்தில் அவர்களும் வந்து விடவே மூவரும் வாட்ஸ்அப்பில் பேசிக்கொண்டனர். மூன்று கழுகுகளும் தங்களின் எதிரியின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்துக் கொண்டிருந்தது.

தீபன் தனது கேமராவின் வழியே அர்விந்த் செய்வது அனைத்தையும் புகைப்படம் எடுக்க, மற்ற இருவரும் காணொளி எடுத்துக் கொண்டிருந்தனர். தேடிய பொருள் அவனின் கைக்கு கிடைக்க,  அதை எடுத்துக்கொண்டு ஏரியின் அருகே சென்றவன் கீழே போடப்பட்டிருந்த காகிதங்களில் மேல் ஊற்றி நெருப்பை பற்ற வைத்தான்.

காகிதங்கள் எல்லாம் எரிகையில், மீண்டும் காருக்கு சென்று ஒரு பெட்டியை எடுத்து வந்தவன் அதிலிருந்த பொருட்களை எல்லாம் ஒவ்வொன்றாக எரியும் நெருப்பில் போட்டுக் கொண்டிருந்தான். அவன் கொண்டு வந்த பொருட்கள் எல்லாம் எரிந்தது சாம்பலானது. அதை ஒரு சந்தோஷத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவனின் உதடுகளில் புன்னகை மலர்ந்தது. ஆனால் இந்த சந்தோஷமும் நிம்மதியும் அவனுக்கு அதிக நேரம் நிலைக்க போவது இல்லை என்பதை அறியவில்லை அவன்.

எல்லாம் எரிந்ததென உறுதி செய்தவன் ஒரு சிறிய பக்கெட்டை கொண்டு ஏரியில் உள்ள தண்ணீரை மொண்டு எறித்து சாம்பலகிருந்த காகிதங்களில் ஊற்றினான். அவை எல்லாம் ஏரியில் உள்ள தண்ணீரோடு கலந்து மறைந்து போனது. அதை பார்த்த அரவிந்தனின் முகம் மகிழ்சியில் மின்னியது!

அர்விந்த்தின் மனம் சற்று லேசானது. ஒரு வேளை கலைவாணன் ஏதும் சொன்னாலும், அதை நிருபிக்க எந்த ஆதாரமும் இப்போது இல்லை! தன்னிடம் இருந்த ஆதாரத்தை அனைத்தையும் நெருப்பில் போட்டு எறித்து விட்டதாகியது. பாவம் அவன் அறிந்திருக்கவில்லை தீபனும் அவனின் சகாக்களும் எல்லாவற்றையும் போட்டோவும் வீடியோவும் எடுத்திருப்பதை!

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.