(Reading time: 14 - 27 minutes)

ஜெய் மற்றும் ராகுலுக்கு நடுவில் ஆதர்ஷ் உட்கார்ந்திருக்க.... இவர்கள் ஏதோ பேசுவதை கவனித்த ராகுல்,

“என்ன மச்சா! ஏதோ இரகசிய மாநாடு நடக்குது போல“ என்று கேட்டு, தன்னையும் அறியாமல் ஜெய்யை அப்போதைக்கு காப்பாற்றினான்.

“இரகசியமில்லை! அதை பற்றி பேசதானே வந்திருக்கோம்.  கொஞ்சம் பொறுங்க மச்சா! உங்க மாமனாரே சொல்லுவாரு” என்று சொல்லி முடிக்கவும், சந்திரசேகர் சற்று உரத்தக் குரலில் பேசவும், எல்லோரும் அதில் கலைந்தனர்....

“சம்மந்தி! பிள்ளைங்க பொறுப்பா இருக்குறது நமக்கு பெருமைதா.  அதே மாதிரி அவங்களுக்கு காலா காலத்துல செய்ய வேண்டியது செய்து நாமளும் பொறுப்பாயிருக்கோம்னு காட்ட வேண்டாமா?”

“வாஸ்தவந்தா சம்மந்தி!” ரவிகுமார் அவரை ஆமோதிக்க

“ஜெய் பொறுப்பா தொழிலை நடத்துறாந்தா.... ஆனா அவனையே அவனுக்கு பொறுப்பா பார்த்துக்க தெரியலையே.... பாருங்க....” என்று அவன் புறமாக கையை நீட்டவும், அனைவரின் பார்வையும் அங்கே சென்று மறுபடியும் சந்திரசேகரிடம் திரும்பின.

“வேலை வேலைனு சுத்திக்கிட்டு, எப்படி மெலிஞ்சு போயிருக்கா. அவனுக்குன்னு ஒருத்தி வந்தா, எங்களுக்கும் கொஞ்சம் கவலை குறையும்.  அடுத்த பேரக் குழந்தைகளை எடுப்போம்” கவலையாக ஆரம்பித்து பேரக் குழந்தைகளை பற்றிய கற்பனையில் அவர் முகமும் குரலும் கனிந்தது.

இவ்வளவு நேரம் சந்திரசேகர் பேசுவதை சாதாரணமாக கேட்டுகொண்டிருந்த ரவிகுமார், சாரதா மற்றும் மைத்ரீயின் முகங்களில் தீவிரம் மின்னலாய் நொடி பொழுதில் குடியேறியது.

“ஏற்கவனே முடிவு செய்ததுதான? கல்யாணத்தை எப்ப வச்சுக்கலாம்?” கேட்டவரின் வாய் மூடுவதற்குள்

மைத்ரீ, “அதை ஏன்பா இங்க கேக்குறீங்க?” என்று கோபமாக கேட்டாள்.

மகளின் அசட்டு தனமான கேள்வியை, அபசகுனமாக கருதிய வடிவு ஏதோ சொல்ல வரவும், மனைவியை தடுத்து,

“இதென்னம்மா கேள்வி?! உங்க எல்லார் முன்னாலையும் பொண்ணோட வீட்ல, பொண்ணை பெத்தவர்கிட்ட கேட்காம, வேறெங்க கேட்கனும்னு நினைக்குற மைத்ரீ?” என்று சந்திரசேகர் அமைதியாக மகளிடம் பதில் கேள்வி கேட்க....

“இந்த வீட்டோட மருமகளும், பொண்ணோட நாத்தனாருமான நான் சொல்ற, எங்க வீட்டு பொண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது” கோபம் கலந்த உறுதியான குரலில், இதுதான் முடிவு என்பது போல் வந்து விழுந்தன வார்த்தைகள். 

Episode 20

Episode 22

முத்து ஒளிரும்…

{kunena_discuss:1038}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.