Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 10 - பிரேமா சுப்பையா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர்கதை - உன்னில்  தொலைந்தவன் நானடி – 10 - பிரேமா சுப்பையா

Unnil tholainthavan naanadi

று நாளில் இருந்து ஆரம்பித்தது  சின்னையாவின் தவம். அவன் தாயை போலவே சின்னையாவிற்கும் அவன் மாமா அதாவது  அந்த பெரிய வீட்டு மனிதர் சிபாரிசு செய்ததால் குணா   மீது ஏற்பட்ட நன் மதிப்பு நாளடைவில் அவனின் செயற்பாடுகளால் விஸ்வரூபம் எடுத்தது.

ஒரு முறை அவன் வீட்டிற்கு செல்லும் போது டேய் குணா நீயும் தங்கச்சி மட்டுமே பேசினீங்க உன் அம்மா கிட்ட ஒரு வார்த்தை கூட கேக்கலையே அவங்க கோச்சிக்க மாட்டாங்களாவெகு நாள் அவனிடம் கேட்க நினைத்த கேள்வியை ஆச்சர்யமாய் கேட்டான் சின்னையா

அவங்க கோச்சிக்கிற ரகமா இருந்தா நாங்க ஏன் இப்படி இருக்கோம்? என்று குணா  சொல்ல

என்னடா சொல்ற? என்று இவன் புரியாமல் கேட்க

தன் விருப்பமே தன் தாயின் விருப்பம் என்று குணா சொன்னதை கேட்டு,” கொடுத்து வச்சவன் டா நீஎன்றவனை நோக்கி விரக்தியாய் சிரித்தவன் , அதென்னமோ உண்மை தான், நான் கொடுத்து தான் வெச்சிருக்கேன் என்று தன் நிலையை மனதில் கொண்டு பெருமூச்சை விட்ட நேரம் அவன் வீடு வந்திருந்தது.

கொடுப்பது மதுவே என்றாலும் ஏதோ கோவில் தீர்த்தம் போல் பவ்யமாய் கொடுப்பதோடு அல்லாமல் உடலுக்கு வலு சேர்க்கும் உணவை கட்டாயம் உண்ண வைத்திடுவாள் சுந்தரி.அவள் அதிகாரமும் பிடிவாதமும் அதில் இருந்த அக்கறையும்  சின்னையாவிற்கும்  பழகத்தான் செய்தது.

ரொம்ப பண்றமா என்று இவன் சொல்லும்போதெல்லாம் இப்படித்தான் இருக்கும் திருந்தணுமா வேண்டாமா? என்று சொல்லி சொல்லியே இவனுள் இப்படி இதை குடிக்கத்தான் வேண்டுமா? என்ற எண்ணத்தை விதைக்கத்தான் தொடங்கினாள் அவள்.

டேய் நான் எதுக்கு குடிக்கிறேன்னே தெரியல போதைக்கு குடிக்கிறேனா?  இல்லை குடிக்கணுமேன்னு குடிக்கிறேனா ? என்று கேட்ட சின்னையாவிடம்

அப்படினா நாளைல இருந்து வேண்டாமா முதலாளி என்று மகிழ்ச்சியுடன் குணா  கேட்க

உடனே அடிமடியில கை வெச்சிடுவியே கிடைக்க போறதே இன்னும் கொஞ்ச நாள் சுந்தரி வேற அவ மேல சத்தியம் வாங்கிட்டா,  பயமா இருக்கு குணா ஒரு வேளை நான் சத்தியத்தை மீறிடுவேனோனு பயமா இருக்கு என்று சொல்ல

மீறினா என்ன ஆக போகுது? சின்னையா என்று குணா கிண்டலாய் கேட்க

டேய் எனக்கு சத்தியம் பாவம் புண்ணியத்துல எல்லாம் நம்பிக்கை ஜாஸ்தி டா என்று இவன் சொல்ல

அது தெரிஞ்சு தான அவ சத்தியம் வாங்கினதே என்று மனதுள் எண்ணியவன் என்னவோ முதலாளி என் வாழ்க்கையே உங்க கிட்ட தான் இருக்கு ஏதோ பார்த்து செய்ங்க என்று  உசுப்பேத்த

போடா போடா பேசாம வண்டியை ஒட்டு இவன் வேற என்று சலித்தவனை பார்த்து புன்னகைத்தான் குணா.

இந்நிலையில் தான் நிறைமாத கர்பிணியாய்  இருந்த சின்னையாவின் தங்கை மருத்துவ மனையில் மகப்பேறுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தாள்.

ஏற்கனவே புத்தி சுவாதீனம், இதில் சிக்கலான பிரசவம் என்று மருத்துவர்கள் கையை விரிக்க அழகான பெண் குழந்தையை தன் நினைவாய் கொடுத்து விட்டு தன் கணவனுக்கு துணையாய் தானும் சென்று விட தாய்ப்பாலின் வாசம் அறியாமல் வளர வேண்டிய சாபத்தை பெற்றது அந்த சிசு. சின்னையாவின் மருமகள்.

வள்ளியம்மைக்கு அவள் மகளாகி போக தான் பெற்ற மகள் அற்ப ஆயுளில் சென்று விட்ட சோகத்தில் தன் கம்பீரத்தை எல்லாம் இழந்திருந்தார் அந்த பெரியம்மா.

நினைவுகளில் அவன் தங்கை, அழுது ஓய்ந்த தாய் ,  புது வரவாய் பட்டு ரோஜாவென  பெண் குழந்தை, பொறுப்புகள் கூடியிருந்தன சின்னையாவிற்கு.

48 நாட்கள் நிறைவு பெறுவதற்குள் முற்றிலுமாக மாறியிருந்தான் குணாவின் முதலாளி.

தனக்கான பொறுப்புகளை சரிவர முடிக்கவேண்டும் என்ற உணர்வில்சரிவில் இருந்த தன் தொழிலை மீட்டு எடுக்க அயராது உழைக்க தொடங்க இவன் மீது வன்மம் கொண்ட கும்பலோ இவனை வீழ்த்த பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்த,  ஏறுமுகமென ஏற தொடங்கிய இவன் தொழில் சாம்ராஜ்யம் அனைத்தையும் தவிடு பொடி ஆக்கியது.

சரியான நேரத்தில் இவன் வாழ்வில் வந்து சேர்ந்திருந்தான் குணா. விஸ்வாசம், நட்பு, முதலாளி குடும்பம் மேல் அக்கறை என ஒரு சிறந்த ஊழியனாக விளங்கியமைக்கு பரிசாக கிடைத்தது அந்த விபத்து.

சின்னையாவின் மீது கொண்ட சினம் குணா மீது பாய அவன் மருத்துவமனையில் ஆங்காங்கே கட்டுக்களுடன் படுத்திருந்தான்.

பதறி கொண்டு வந்த சின்னையாவிடமும் அவன் மனைவியிடமும் தனக்கு ஒன்றும் இல்லை என்றும் சுந்தரி தான் மிகவும் பயந்து விட்டதாக சொல்ல

சுந்தரி தன் துக்கம் தாளாமல் வள்ளியம்மையிடம் அழுது தீர்த்து விட்டாள்.

முதலாளி தொழிலாளி என்பதையும் தாண்டி இரு குடும்பத்திற்கும் இடையே  நல்லதொரு உறவு வளர்ந்திருந்தது.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5 
  •  Next 
  •  End 

About the Author

Prama Subbiah

Completed Stories
On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 10 - பிரேமா சுப்பையாAdharvJo 2018-01-21 14:50
Interesting update ma'am.. Ila-k ena aga pogadhu?? Why kathir pulambing so much???? Yara pattri solluraru??? This young paati vaai k zip podunga facepalm Vicky ena solla poraru?? Aduthu ena aga pogudhun therindhu kola waiting :yes: thank you!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 10 - பிரேமா சுப்பையாShanthi S 2018-01-20 08:39
nice update Prama (y)

Sunthari ethanol antha veettil velai seiyyum nilamai vara pogirathu?

Kathir sollum antha pen Ila vaa vera yaaravatha?

Very intriguing flow (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 10 - பிரேமா சுப்பையாDevi 2018-01-18 10:10
Nice update Prema (y) innum flash backs niraya irukku pole (y) waiting to read more
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 10 - பிரேமா சுப்பையாmadhumathi9 2018-01-18 06:14
Fantastic epi. Waiting to read more. Thanks for this epi. Avargal iruvarum sandai pottu kondu irukkiraargala? or veru pirachanai ah endru therinthu kolla Adutha epiyai miga aavalaaga ethir paarkkirom. :clap: (y)
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top