(Reading time: 26 - 51 minutes)

தான் தடுப்பதற்குள் ஜானகி மாதேஷை உபசரிக்க போனதும் முருகன் மனதில் “மாதேஷ் அவரிடம் எதுவும் மரியாத்தை குறைவாக பேசிவிட்டால்” என்ற பயம் எழுந்தது எனவே அதுபோன்ற விபரீதத்தை தடுப்பதற்கு வேலாயுதத்தை வேகமாக கூட்டிவர அவர் உறங்கிகொண்டிருந்த அறைக்கு போய் கதவை ஐயா... ஐயா.... என்றபடி டமடம... என்று தட்டினான். யார் இப்படி தட்டுவது என்றபடி எழுந்தவர் போனும் அடிப்பதை பார்த்து அதனை எடுத்துக்கொன்டு வந்து கதவை திறந்தார்.

அய்யா வேகமா வாங்க மாதேஷ் ஐயா இங்க ரொம்ப கோபமா வந்திருக்கிறார் என்றதும் வேலாயுதம இங்கயா வந்திருக்கிறான் என்று பரபரப்படைந்தார். அவன் எதுக்கு இங்க வந்தான்! என்றவர் வேகமாக வாசலுக்கு விரைந்து வந்தார்

வாசல் வரை வந்த மாதேசுக்கு உள்ளே வர ஏதோ ஒன்று தடுத்தது எனவே வாசலில் படியில் நின்றபடி மீண்டும் தனது தந்தைக்கு போன் போட்டான்

அதற்குள் வாசலுக்கு வந்துவிட்ட ஜானகி வாப்பா மாதேஷ் எதுக்கு வெளியவே நிக்கிற என்று கூறினார்.

ஜானகிக்கு பதில் சொல்ல விருப்பம் இல்லாமல் வேறு பக்கம் பார்த்தபடி ரொம்ப ஓவரா நல்லவங்க மாதிரி சீன போடவேண்டாம் என் அப்பாவை வெளிய வரச்சொல்லுங்க என்றான்.

எதுக்குப்பா நான் நடிகனும். அவர் உள்ளேதான் தூங்கிக்கொண்டு இருக்கிறார் வந்து உட்கார் நான் போய் அவரை எழுப்பிவிடுகிறேன் என்றாள் அதற்கு மாதேஷ் அவர் என் அப்பா நீங்க போய் அவர எழுபித்தான் நான் பார்க்கணுமோ? என்று கோபத்துடன் கூறினான்.

அவன் வார்த்தைகளை செவிக்குள் ஏற்றியபடி அங்கு வரும்போதே என்ன மாதேஷ் இப்ப என்ன பிரச்சனையை பண்ண இங்க வந்திருக்கிற? என்று கேட்டபடி அவனின் முன் வந்து நின்றார் வேலாயுதம்.

மாதேசுக்கு வேலாயுதம் தனது வீட்டில் ஓய்வாக இருப்பது போன்ற தோற்றத்தில் இங்கும் உள்ளிருந்து வந்ததை பார்த்து ஏனோ! திகு.. திகு.. என்று நெஞ்சம் எரிந்தது. எனவே தீயின் ஜூவாலைபோல் வார்த்தைகளை வரைந்தது மாதேசின் வாய் என்னமோ நீங்க தூங்கிக்கொண்டிருப்பதாக சொன்னாங்க! இவங்க வந்துதான் உங்களை எழுப்பனும் என்று சொன்னாங்க. ஆனா நீங்க என்னடான்னு உள்ளேருந்து நான் பேசுறதுக்கு பதில் சொல்லிகிட்டே வர்றீங்க? ஏன் நான் எத்தனை தடவை போன் பண்றேன்! என் போனை கூட அட்டன் பண்ணக் கூடாதுன்னு இவங்க சொல்லிடாங்களா? உங்க முத்த பொண்டாட்டி மகன் பேச்சைவிட இவங்க சொல் தான் உங்களுக்கு பெருசா போயிடுச்சா? நீங்க என் போனை அட்டன் பண்ணியிருந்தா நான் எதற்கு இங்கெல்லாம் வந்து இதெல்லாம் பார்க்கப்போறேன் என்று கோபத்துடன் வார்த்தை வளர்த்தான்.

அவனின் வார்த்தைகள் ஜானகியை பெரிதும் தாக்கியது அவள் தன வீடு தோட்டக்காரன் மற்றும் வார்ச்மேன் மற்ற வேலையாட்களின் மத்தியில் இவ்வாறு பேசியது அந்த வயதிற்குப் பிறக்கும் பெரும் அருவருப்பு தன மேலேயே எழுந்தது

வேலாயுதம் அவனின் வார்த்தைகளை கேட்டதும், மாதேஷ்..! என்று அலறியவர் இப்படியெல்லாம் உன்னை பேசச்சொல்லி உன்பாட்டி இங்க அனுபினாங்களா? யாரப் பார்த்து என்ன வார்த்தை பேசுற இனி ஒருதடவை ஜானகியைப்பத்தி இப்படியெல்லாம் பேசுன பிறகு நான் மனுசனாகவே இருக்க மாட்டேன். உன்னை அடிந்து நொருக்கிருவேன் என்று எச்சரிப்பதுபோல் கூறினார்.

வந்துருச்சுல உங்க வாய்ல இருந்து, என்னை அடித்துநொருக்கிருவேனு இவங்க வர வச்சுட்டாங்கள .இவங்க இப்படினா இவங்க பையன் எப்படி இருப்பான் என் frieபிரன்டோட மொபைலை பறித்து அதில் நாங்க இருக்கிற வீடியோவை பொண்ணுங்க கூட இருக்கிறமாதிரி மாபிங் செய்து நெட்டில் விட்டுடுவேன்னு மிரட்டுறான். அதை ஏன் இப்படிசெய்ற என்று கேட்டதுக்கு என்னை அடித்து மண்டையைவேறு உடைத்துவிட்டான் என்று கூசாமல் தன்னை நல்லவனாக காட்டுவதற்கு போய் சொன்னன் மாதேஷ்

அவன் சொன்னதும் இல்லை தம்பி என் ஆதித் அப்படியெல்லாம் பண்ணமாட்டன் என்று ஜானகியும் வேலாயுதம் ஆதித் ஒன்றும் அப்படி செய்பவன் கிடையாது என்றும் ஒரே நேரத்தில் குரல் எழுப்பினர். வேலாயுதம் பேசவும் அவர் ஆதித்தின் மீது இருக்கும் நம்பிக்கையை பார்த்து சிலிர்த்தபடி அமைதியானார் ஜானகி ஆனால் வேலாயுதாமோ, எனக்கு உன்னை பற்றியும் தெரியும் ஆதித் பற்றியும் தெரியும் அவன் ஒன்றும் உன்னைப்போல் பொண்ணுக விசயத்தில் ஒழுக்கம் கேட்டு நடப்பவன் கிடையாது எனக்கு உன்னை பற்றித் தெரியாது என்று நினைத்தா நீயும் உன் கூட சேர்ந்து அந்த மினிஸ்டர் பையனும் செய்கிற அட்டகாசம் என் காதுக்கு ஏற்கனவே சிலது வந்திருக்கு. தலைக்கு மேல வளர்ந்திட்ட எப்படி கண்டிக்கிறதுன்னு நானே யோசித்துக்கிடுதான் இருக்கேன் என்று கூறினார்.

அவர் கூறியதும், அப்பா.... நல்லத்தான் உங்களை அம்மாவும் மகனும் மயக்கிவச்சுருக்காங்க என்ன சொன்னீங்கங்க! பொண்ணுங்க விசயத்தில் நான் மோசமானவன் அவன் உத்தமனாகும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.