ஆதித்துக்கு வேலாயுதத்தின் மீது கோபம் இருந்தாலும் இப்பொழுது தனது அம்மாவின் நிலை கண்டு அவர் பதறியதும் கம்பீரமாக இருப்பவர் உடல் அழுகையால் குலுங்குவதையும், ஓய்ந்துபோய் அமர்ந்திருப்பவரின் நிலைகண்டு அவரின் மேல் கோபத்தை இழுத்துபிடிக்க முடியவில்லை. அவருக்கும் ஏதேனும் ஆகிவிட்டால் பிறகு அம்மா எழுந்ததும் நான் என்ன பதில் சொல்வேன்? என்று நினைத்தவன், தன கவலையை ஒதுக்கியவன் காலையில் அவர் போடும் பிரசர் மாத்திரையும் அவருக்கு குடிக்க ஏதாவது ஜூசும் கேண்டியனிலும் வாங்கிவரச் சொல்லி அங்கு நின்றிருந்த முருகனை அனுப்பினான்
வந்ததும் அதை வேலாயுதத்திற்கு குடுக்கும்படி கூறினான், முருகனுக்கு ஜானகியை ஐ சி யூ வில் வைத்திருந்த கவலையை மீறி சற்று தைரியம் வந்தது முருகனுக்குத் தெரியும் வேலாயுதத்தை ஆதித்தின் பாராமுகம் எவ்வளவு பாதித்தது என்பது. எனவே சரி சின்னய்யா என்றவன் வேலாயுதத்திடம் ஜூசை கொடுத்து இதை குடிச்சிட்டு பிரசர் மாத்திரையை போட்டுக்கங்க ஐயா நீங்களே தைரியமம் இல்லாமல் இருந்தால் எப்படிய்யா ஜானகி தங்கச்சி நல்ல படியா எழுந்து வந்துருவாங்க என்றான்.
ஆனால் அவன் கொடுத்ததை வாங்காமல் என் ஜானகி இப்படி இருக்கும் போதுது என்னால் எப்படி சாப்பிடமுடியும்? நீ அங்க்கிட்டுப்போ.. என்று முருகனிடம் சத்தம் போட்டார்.
அப்பொழுது என்கிட்ட கொடுங்க மாமா நான் தந்தா சாபிடுவார் என்று தன கையில் வாங்கினான்.
ஆதித் சென்னைக்கு வந்த பின்பு பலதடவை வேலாயுதம்கூட கார் ஓட்டிக்கொண்டு சென்னை வரும் போது எல்லாம் முருகன் ஆதித்திடம் எத்தனையோ தடவை அங்கு ஊரில் இருக்கும் போது பேசுவதுபோல் பேச முயன்றிருக்கிறார் ஆனால் ஆதித் நின்று அவர் முகத்தை கூட பார்த்து பேசாமல் போய்விடுவான். காலப்போக்கில் அவர் வரும்போது அவசியத்திற்காக பேசினாலும் முன்புபோல் மாமா என்று முருகனை கூபிடுவதை நிறுத்தியே விட்டிருந்தான். ஆனால் இன்று தன்னை மாமா என்று கூப்பிட்டு நான் கொடுத்தால் சப்பிடுவார் என்று வேலாயுதத்தை அதை குடிக்கவைப்பதற்கு தன கையில் வாங்கியதை பார்த்த முருகன் இந்தாங்க சின்னையா நீங்களே அப்பாவுக்கு கொடுங்க என்றார்.
வேலாயுதத்திடம் இந்தாங்க இதை குடிங்க குடிச்சிட்டு பிரசர் மாத்திரையை சாப்பிடுங்க அம்மாவிற்கு சரியாகிடும் என்றான்.
தன மனைவி மூச்சுக்கு போராடும இந்த நிலையில் பலவருடம் கழித்து தன மகன் தன்னிடம் பேசிய மகிழ்ச்சியை கூட அனுபவிக்கமுடியாமல், அவன் கொடுத்ததை கையில் வாங்க முயன்றவரின் கை நடுங்கியது வாய் என் ஜானகியை இப்படி என்னால் பார்க்கமுடியலையே அதித்....! என்று கூறினார்
அவர் கை நடுங்கவும் தானே அவரின் வாய் அருகில் கொண்டு சென்றவன் கண்களும் கண்ணீரில் தளும்பி நின்றது. கரகரத்த குரலில் அம்மாவுக்கு சரியாகிவிடும்பா. அவங்க எழுந்துவரும்போது நீங்க உருக்குலைந்துபோயிருந்தால் வருத்தப்படுவாங்க அவங்களுக்காக நீங்க தெம்பா இருக்கணும் என்றபடி அவருக்கு புகட்டிவிட்டு மாத்திரையை பிய்த்து தண்ணீர் கொடுத்து அவரை முழுங்கச்செய்தான்.
அப்பொழுது ஐ சி யூவிலிருந்து டாக்டர் வெளியே வந்தார். அவரிடம் விரைந்து வந்த ஆதித்திடம், என்ன ஆதித்? உங்க அம்மா ஹார்ட் பலவீனமாக இருப்பதை வீட்டில் சொல்லச்சொல்லி நானும் அவங்க உடம்பு முடியாம வரும் ஒவ்வொருதடவையும் சொல்லியிருக்கேன்! ஆனா அதை அவங்க பெருசா எடுத்துக்கிட்டதே இல்லை! ஒழுங்கா மருந்து மாத்திரையும் சாப்பிட்டமாதிரி தெரியல. அதனால அவங்க ஹார்ட் இப்போ ரொம்ப வீக் ஆகிடுச்சசு நாங்க எங்களால முடிஞ்ச வர காப்பாத்தப் பார்கிறோம் என்று கூறினார் .
----தொடரும்----
{kunena_discuss:1144}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.