(Reading time: 17 - 33 minutes)

“அப்படியா...நான் கண்டிப்பா அங்கே போறேன்” என்றவன் சுமித்ராவிடம் தான் அவசரமாக மங்களூர்  செல்ல வேண்டும் என்று கூறினான்.

“என்ன டா இப்போ போய் வெளியூர் போக வேண்டும்னு சொல்ற. அம்முக்கு எப்போ வேணும்னாலும் டெலிவரி ஆகலாம்”

“எமர்ஜன்சி மா. கிட்டத்தட்ட அர்ஷு அம்மாக்கு இருந்த கண்டிஷன்ல ஒரு பேஷன்ட் இருக்காங்க”

“வேற யாரும் இல்லையா அங்க”

“அம்மா அது ஹர்ஷா பாஸ் ஹாஸ்பிடல் தான். பாஸும் ஹரிணியும் வெளிநாட்டில் மெடிகல் கேம்ப்ல இருக்காங்க. அவங்க ஜூனியர்ஸ் இருக்காங்க தான். ஆனால் இது சிக்கலான சர்ஜரி. தாய் குழந்தை இருவரையும் காப்பாற்ற வேண்டும். பாஸ் என்னை ரிகுவஸ்ட் செய்து போகச் சொல்றார். ஒரு வகையில் குருதட்சிணை போலவும் தான். நான் உடனே வந்திடுவேன்” அன்னையிடம் விளக்கமாய் கூறினான்.

அங்கே வந்த வர்ஷினி அனைத்தையும் கேட்டு விட்டாள்.

“அவர் போயிட்டு வரட்டும் அத்தை” முன்பு எப்போதும் இல்லாத ஒரு திடம் அவள் முகத்தில்.

நிறை மாதம் முழு நிலவாய் அவள் முகம் ஒளிர்ந்தது.

“போயிட்டு வாங்க ராம். உங்களால் ஒரு அம்ரிதவர்ஷினிக்கு அம்மா அப்பா கிடைக்கட்டும் ராம்” மிகவும் அமைதியாகவும் தெளிவோடும் கூறினாள்.

வர்ஷினியை அணைத்து முத்தமிட்டு உடனே கிளம்பிச் சென்றான் கணேஷ் ராம்.

“அர்ஷுமா சர்ஜரி சக்சஸ். குட்டி பாப்பாக்கு என்னையே பேர் வைக்க சொன்னங்க. நான் அம்ரிதான்னு பேர் சூட்டினேன்” சந்தோஷமாய் அவன் போனில் கூற இங்கேயே அவள் விழிகள் ஏனோ கண்ணீரை சுரந்தது.

“எப்போ வரீங்க ராம்”

“மார்னிங் தான் ப்ளைட். உடனே வந்திடுவேன் டா”

“சரி ராம்”

போனிலேயே மனைவிக்கும் குழந்தைக்கும் அன்பு முத்தங்களை வாரி இறைத்தான்.

போனை அணைத்து விட்டு ஹர்ஷா ஹரிணி நிர்வகிக்கும் அந்த மருத்துவமனையை வலம் வந்தான்.

ராஜவர்தன் விங், ஜெயராஜ் விங் என்று வரிசையாக இருந்ததைப் பார்த்துக் கொண்டே வந்தான்.

அது ஹர்ஷா ஹரிணி தந்தை பெயர்கள் என்று அவன் அறிவான்.

வேறு பெயர்களும் இருக்க அங்கிருந்த பணியாளர் விளக்கம் கொடுத்தார்.

“முன்பு ரொம்ப சின்ன மிஷன் ஹாஸ்பிடல் இது. அப்போது நிறைய பேர் டொனேஷன் செய்து தான் ஹாஸ்பிடல் ரன் ஆகிக் கொண்டு இருந்தது. சார் மேடம் இதை முழுவதுமாய் டேக் ஓவர் செய்த பிறகும் சில பேர் தாமே முன் வந்து மக்களுக்கு இலவசமாய் சிகிச்சை கிடைக்க தங்களோட பங்கினை தொடர்ந்து செய்வதாக சொல்லவும் அவங்களை சிறப்பிக்கும் வகையில் அவங்க யார் நினைவாக அதை செய்கிறார்களோ அவர்களை பெயரை ஓர் விங்க்கு மேடம் வைக்க சஜஸ்ட் செய்தாங்க”

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவன் போன் ஒலிக்க நடந்து கொண்டே போனை அட்டன்ட் செய்தான்.

“ஐ ஆம் ப்ரவுட் ஆப் யூ” ஒரே வரியில் தனது பாராட்டினை தெரிவித்தான் ஹர்ஷவர்தன். அதுவே கணேஷ் ராம்க்கு வஷிஸ்டர் வாயால் பிரம்மரிஷி போல பெருமை வாய்ந்ததாக இருந்தது.

“ராம் அம்மு அப்படி இருக்கா. நாளைக்கு மார்னிங் நீ கிளம்பிடு. பிரவீன் வில் டேக் கேர். உன்னை இந்த நேரத்தில் இங்க வரச் சொல்ல எனக்கே ரொம்ப யோசனையா தான் இருந்தது. பட் உன்னை தவிர வேறு யாரும் இவ்வளவு சக்சஸ்புல்லா செய்திருக்க முடியாது” ஹரிணி சொல்லவும் கணேஷ் ராம் உண்மையில் சொர்க்கத்தில் இருந்ததை போல மகிழ்ந்தான்.

“செர்ரி. அர்ஷு தான் தைரியமா என்னை போயிட்டு வர சொன்னா. யூ நோ வாட்” என்று கௌரி பற்றி கூறினான்.

“மை குட்னஸ். ராம்” என்றவள் மேல சொன்ன தகவல் கேட்டு கணேஷ் ராம் அப்படியே நின்று விட்டான். அவன் எதிரே பச்சிளம் குழந்தைகளின் வார்ட் இருந்தது.

அங்கே வர்ஷினிக்கு பரவச வலி எடுத்துவிட்டிருந்தது.

அடுத்த அத்தியாயத்துடன் நிறைவுப் பெறும்

Episode # 22

Episode # 24

{kunena_discuss:1109}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.