(Reading time: 17 - 33 minutes)

திருமண ஏற்பாடுகள் குறித்து பேச கணேஷ் ராம் அவனது பெற்றோருடன் வர்ஷினியின் இல்லத்திற்கு வருகை தந்த போது வர்ஷினி ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாய் கூறவும் அனைவரும் திகைத்துத் தான் போயினர்.

ஆனால் கணேஷ் ராம் அது தனது விருப்பம் என்று தெரிவித்தான்.

“நான் தான் சிம்பிளா மேரேஜ் செய்துக்கலாம்ன்னு அர்ஷு கிட்ட சொன்னேன். அவளும் என்னோட விருப்பத்தை ஏற்றுக் கொண்டாள். நீங்க எல்லோரும் ஏத்துக்கணும்”

கணேஷ் ராம் இவ்வாறு சொல்லவும் வர்ஷினி ஒரு கணம் திகைத்து தான் போனாள். அவனது அன்பில் அவள் கண்கள் கலங்கித் தான் போயின.

“எப்படியும் முறைப்படி கல்யாணம் நடத்தித் தானே ஆக வேண்டும்” லக்ஷ்மி மெல்லிய குரலில் கூறியது சுமித்ரா செவிகளில் விழுந்தது.

அங்கே சில நொடிகள் நிசப்தம் நிலவ காயத்ரி சூழ்நிலையை இலகுவாக்கினாள்.

“அப்போ ஒன்னு செய்யலாம். நம்ம வீட்லேயே நம்ம குடும்பத்தினர் மட்டுமா முறைப்படி கல்யாணம் நடத்திடலாம். அப்படியே பதிவும் செய்திடலாம். அப்புறம் ரிசப்ஷன் ஏற்பாடு செய்துக்கலாம்” என்று கூற அனைவரும் ஒரு மனதாக ஏற்றுக் கொண்டனர்.

“என்னோட பிரண்ட்ஸ் கல்யாணத்திற்கு வருவாங்க அர்ஷுமா. எனக்கு அவங்களும் குடும்பம்” கணேஷ் சொல்ல வர்ஷினி சந்தோஷமாய் சம்மதித்தாள்.

குடும்பத்தினர் மற்றும் மிக நெருக்கமான நட்புக்கள் சூழ ராம் வர்ஷினி திருமணம் இனிதே நடைபெற்றது.

சைந்தவி, ஜான்வி மற்றும் லிசி யு.எஸ்ஸில் இருந்து வருகை புரிந்தனர்.

மொரிசியஸ்ஸில் இருந்து பூர்வி ஆஜராகி விட கடைசி நிமிடத்தில் ஹரிணியும் ஹர்ஷாவும் கலந்து கொண்டனர்.

“ஹே மிசஸ் ராம். எப்படி இப்போது தான் திருமணம் ஆனால் அன்று மிசிஸ் ராம் என்றீர்கள்” லிசி சற்று புரியாமல் விளக்கம் கேட்கவும் ராம் மெலிதாக வர்ஷினியைப் பார்த்து புன்னகைக்க அவளோ வெட்கச் சிரிப்பில் பூரித்தாள்.

அன்றைய நாள் இருவரின் நினைவிலும் வந்து தாலாட்டி விட்டுச் சென்றது.

பூர்வி தான் பொறுப்பேற்றுக் கொண்டு லிசி, ஜான்வி சைந்தவிக்கு இவர்களின் கதையை கதாகலாட்சேபம் செய்தாள்.

“என்னோட என்கேஜ்மன்ட்ல தானா லவ் ப்ரோபோசல் நடந்துச்சு. அதுவும் அந்தாக்ஷரில. நமக்கு தெரியவே இல்லை பாரேன்” ஜான்வி சைந்தவியிடம் கூற அவளும் ஒத்துப் பாடினாள்.

“நான் அவளோட கூடவே இருந்திருக்கேன் எனக்கே தெரியல” ஸ்ரீதர் தன் பங்கிற்கு ஏற்றி விட்டான்.

எல்லோரும் சூழ்ந்து கொண்டு புதுமணத் தம்பதியினரை செல்லமாய் சீண்டி கேலி செய்து கொண்டிருந்தனர்.

ஹரிணி ஓர் ஓரத்தில் இருந்து நிறைவாய் புன்னகைத்தாள்.

அவளிடம் வந்து சேர்ந்தான் கணேஷ் ராம்.

“பாஸ் எங்கே செர்ரி”

“போன் பேசிட்டு இருக்கான். ஐ ஆம் சோ ஹாப்பி பார் யூ ராம்” மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு கூறினாள்.

“நீ அன்னிக்கு சொன்னியே!!! உனக்கு என்று இருந்தால் இந்த பிரபஞ்சமே அதை உனக்கு கிடைக்க வழி செய்யும்னு. அந்த நம்பிக்கை தான் இன்று இந்த சந்தோஷத்திற்கு காரணம்” நெகிழ்ச்சியோடு கூறினான்.

“என்ன புது மாப்பிள்ளை என்ன சொல்றார்” அங்கு ஹர்ஷவர்தன் வந்து சேர

“ஒண்ணுமில்லை பாஸ். சும்மா தான் பேசிக் கொண்டிருந்தோம்” கணேஷ் ராம் எப்போதும் போல கொஞ்சம் பதட்டமாய் கூற அவனது தோளில் தட்டிக் கொடுத்தான் ஹர்ஷா.

திருமணம் முடிந்து சில நாட்கள் சென்று விட்டிருந்தது.

“அம்மு நீ எப்போவும் போல ஹாஸ்பிடல் மேனேஜ்மன்ட் உங்க கம்பனி பொறுப்புக்கள் எல்லாம் தொடர்ந்து செய்” சுமித்ரா சொல்லவும் வர்ஷினி அவரைக் கட்டிக் கொண்டாள்.

காயத்ரி கரு தரித்திருந்த செய்தியைக் கேட்ட வர்ஷினி தலை கால் புரியாமல் சந்தோஷத்தில் ஆட்டம் போட்டுக் கொண்டாடினாள்.

அச்சமயம் முக்கியமான ஆடிட் வேலை இருந்ததாலும் காயத்ரி அவள் பிறந்த வீட்டிற்கு சென்றிருந்ததாலும் உடனே சென்று வர்ஷினியால் பார்க்க முடியவில்லை.

இரண்டு வாரம் கழித்து காயத்ரிக்குப் பிடித்த இனிப்புகள் மற்றும் பட்சணங்களை அள்ளிக் கொண்டு அவளது வீட்டிக்கு சென்றாள்.

அங்கே காயத்ரி சோர்ந்து படுத்திருந்ததைப் பார்த்து மிரண்டு போனாள் வர்ஷினி.

“அண்ணி என்ன ஆச்சு. ஏன் இவ்வளவு டல்லா இருக்கீங்க” பதட்டாமாய் ஓடிச் சென்று காயத்ரியின் அருகில் அமர்ந்து கொண்டு வர்ஷினி கேட்க அங்கே வந்த காயத்ரியின் சித்தி

“அது சரி பிள்ளை பேறுன்னா அப்படி தான் இருக்கும். இதுக்கே இப்படி பதட்டபட்டா எப்படி. இன்னும் நிறைய இருக்கு” என்று சொல்லவும் வர்ஷினி சற்றே மிரண்டு தான் போனாள்.

“ராம்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.