(Reading time: 23 - 45 minutes)

தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 19 - தீபாஸ்

oten

ஜானகியின் மாமா சுப்பையாவின் வீட்டின் வாசலில் கார் நின்றதும் உள்ளுக்குள் இருந்த சுப்பையாவின் மகள் வேணி யார் என்று வெளியில் வந்து பார்த்தாள். தனது வீட்டிற்கு காரில் வந்து இறங்கக்கூடியவர்கள் இல்லை, தெரியாமல் யாராவது வீடு மாத்தி வந்துட்டாங்களோ...? என்று ஐயத்துடன் வாசலுக்கு வந்த வேலாயுதத்திடம் யார் நீங்க? என்று கேள்வி கேட்டாள்.

அதற்கு சுப்பையாவின் வீடுதானே இது, நான் அவர் வேலை பார்க்கும் மில்லின் முதலாளி வேலாயுதம் என்று கூறியதும் சட்டெண்டு வரவழைத்துக்கொண்ட பெளயமான குரலில், அப்பா வீட்டில் இல்லையே ஐயரை பார்க்கப் போயிருகிறார்கள் என்று பதில் கூறினாள்.

உடனே வேலாயுதம் நான் உன் அப்பாவை பார்க்க வரல, ஜானகியை பார்த்து பேச வந்தேன் உள்ளதானே இருக்கிறாளா? என்று கேட்டார். உடனே வாசல் மறைத்து நின்று பேசிகொண்டிருந்த அவள், வாங்க என்று வழிவிட்டு “ஆமா உள்ள அவ ரூமில் இருகிறா” என்றவள் முன் அறையில் ஓரமாக இருந்த அந்த இரும்பு சேரை இழுத்து அவரின் முன் போட்டவள், இதில் உட்காருங்க நான் போய் அவளை வரச்சொல்றேன் என்றவள் ஜானகி இருந்த அறையுனுள் சென்றாள்.

இன்றுடன் ஜானகியின் அம்மா இறந்து 29நாள் ஆகியிருந்த நிலையில், நாளை முப்பதாம் நாள் விசேசம் குடும்ப அளவில் ஏற்பாடு செய்து அய்யருக்கு அரிசி கொடுக்க கூப்பிடுவதற்கு சுப்பையா சென்றிருந்தார். அந்த தெருவில் இருந்த கடையில் மதியம் சமையலுக்கு காய் வாங்க அவரது மனைவி சென்றிருந்தாள்.

ஜானகி தன் அம்மாவின் படத்தின் முன்பே கடந்த இருவாரமாக சரியா சாப்பிடாமல் அழுது அழுது பலகீனமாக அமர்ந்திருந்தாள்.

வாணி ஜானகியிடம் வந்து “ஜானகி, அப்பாவின் முதலாளி வேலாயுதம் உன்னை பார்க்கனும் என்று வந்திருக்கிறார். முன் அறையில் உட்கார வச்சிருக்கிறேன் வேகமா வா” என்றாள்.

வேலாயுதம் வந்திருப்பதாக அவள் சொன்னவுடன் தனது அத்தை வேறு கடந்த இரு மாதங்களாக அவருடன் தன்னை இணைத்துப்பேசி மஞ்சுளாவிற்கு தான் துரோகம் செய்வதாக தன் மேல் வீண் பழி போட்டு ரணப்படுத்திக்கொண்டிருகும் போது இவர் நேராக வீட்டிற்கே வந்து தன்னிடம் பேச வந்திருக்கும் இந்த சூழல அவளை அச்சுறுத்தியது. ஏனோ! மனம் பட படவென்று அடித்துக்கொண்டது.

எனவே, நான் வரல வாணி எனக்கு அவர் கூட பேச எதுவும் இல்லை நான் இல்லைன்னு சொல்லி அவரை அனுப்பிடு என்று கூறினாள் ஜானகி.

வேணிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை, தான் ஜானகியுடன் பேசிகொண்டிருக்கும் சத்தம் கண்டிப்பாக வேலாயுதத்திற்கு கேட்டிருக்கும். பிறகு எப்படி நான் அவள் இல்லைன்னு சொல்ல... என்ற யோசனையுடன் வேலாயுதத்திடம் வந்தவள் அவளுக்கு கொஞ்சம முடியல அதனால் இப்போ எழுந்து வந்து உங்களிடம் பேசமுடியல என கூறினாள்.

வேலாயுதத்திற்கு அவர்கள் பேசியது வேறு லேசாக காதில் விழுந்தது. திரும்பி போய்விடலாமா என்றுதான் முதலில் நினைத்தார். ஆனால், அவளை அவளின் அத்தை, மஞ்சுளாவின் பேச்சை கேட்டு வீட்டை விட்டு அனுப்புவதற்குள் அவளை பாதுகாப்பான இடத்தில் விடவேண்டும் அவளின் நன்மைக்காக பேசித்தான் ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன்

வேணியிடம், அவள் எழுந்து வரவேண்டாம். அந்த ரூமில்தனே இருக்கிறாள். நானே போய் பேசிக்கொள்கிறேன் என்று உள்ளே செல்ல போனார்.

வேணிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை, இல்லை நீங்க இங்க உட்காருங்க நான் அம்மாவை கூப்பிட்டுகொண்டு வருகிறேன், பிறகு அவளிடம் பேசுங்கள் என்றவள் அந்த தெருவின் கடைகோடியில் இருந்த கடைக்கு போயிருந்த அவள் அம்மாவை கூப்பிட விரைந்து வெளியேறினாள்.

அவள் சென்றதும் ஜானகியின் அத்தை வருவதற்குள் அவளிடம் பேசவேண்டியதை பேசிவிடவேண்டும் என்று ஜானகி இருந்த அறைக்குள் வந்தார் வேலாயுதம்

வெளியில் வாணி கூறியதையும் வேலாயுதம் பதில் சொல்லியதையும் அந்த அறையின் வாசலுக்கு வந்து அந்த வாசல் சுவருடன் வெளியில் இருப்பவனின் பார்வையில் படாதவாறு ஒன்றிநின்றுகொண்டிருந்த ஜானகி கேட்டாள்.

அன்று வேலாயுதம் தன்னிடம் காதல் சொன்னதும் அதனை ஜானகி மறுத்த அன்று அவரின் முகத்தில் தெரிந்த வலிகண்டு, வேதனையுற்ற தன் மனத்தை அவர் அடையளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காக கடும் சொற்களை உபயோகித்தாள். அவரை இனி தன கண்முன்னே பார்க்க தான் விரும்பவில்லை என்று விரட்டியதன்பின் தன்னை தொந்தரவு செய்யாமல் இருந்தவர் இப்பொழுது எதற்கு வந்தார்? என்ற பதட்டமும் உண்டானது ஜானகிக்கு.

அவர் உண்மையாக தன்னை நேசித்தார் என்பதை தான் உணர்ந்து கொண்டிருந்த நிலையிலும், தான் அவரை மறுக்க வேண்டிய துர்பாக்கியமான தன்நிலை கண்டும் மனதொடிந்து போய் இருந்தவளுக்கு, அநாதரவான இருந்த நிலையில் தன் மேல் அன்பு கொண்ட ஓர் ஜீவனை ஒருதடவை கண்களால் பார்க்க மனம் பரபரத்தது,

அவரை அடைய வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு இல்லை. எனினும் தன் அகம் தொட்ட ஒருவனை தள்ளிநின்று பார்க்கும் பாக்கியம் கூட தனக்கு இல்லாத நிலையில் அவளை நிறுத்திய மஞ்சுளாவின் வார்த்தையும் அதனை தொடர்ந்து தன அத்தையின் சாபங்களும் வெளியில் போகவிடாமல் அவளை கட்டிப்போட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.