(Reading time: 23 - 45 minutes)

சுவரில் முதுகினை சாய்த்து நின்று கண்களை ,மூடி போய் விடுங்கள் இங்கு வராதீர்கள்... என்று முனுமுனுத்தவாறு கண்ணீர் வடிய நின்றிருந்தவளின் முன் வந்து நின்றார் வேலாயுதம்

தன முன் வேலாயுதம் வந்து நின்ற அரவம் உணர்ந்தும் கண்ணை திறக்காமல் போய்விடுங்கள் இங்கிருந்து போய்விடுங்கள் என்று அழுகையுடன் புலம்பிக்கொண்டிருந்தாள் ஜானகி.

அதனை கேட்ட வேலாயுதம், நான் உன்னை விட்டு போய்விட்டேனே ஜானகி. இப்பொழுது நான் இன்னொருத்தியின் கணவன் இந்தநிலையில் உனக்கு சங்கடமான எந்த பேச்சையும் நான் பேசமாட்டேன். ஆனால் என் பொருட்டு உனக்கு வந்துள்ள துன்பத்தை போக்கவேண்டியது என் கடமை. அதற்காகத்தான் நான் இப்போ வந்திருக்கிறேன் என்று அவளின் பயம், பதட்டம் தணிவதற்காக கரகரத்த குரலுடன் கூறினார் வேலாயுதம்.

அவரின் குரலை கேட்டதும் கண்திறந்து பார்த்த ஜானகியின் கண்கள் அவரை முழுவதுவும் ஒருமுறை தனக்குள் சிறைஎடுத்துக் கொண்டது. முன்பு தான் பார்த்த வேலாயுதமாக இப்பொழுது அவர் இல்லை. அவர் கண்ணில் இருக்கும் ஒளி இழந்து உடல் கொஞ்சம் மெலிந்து இருப்பது அவளின் கருத்தில் பதிந்தது. அந்த ஒருநிமிட தடுமாற்றத்தையும் தன முகத்தில் காட்டிவிடாதபடி கடுமையை பூசிகொண்டவள், அதற்காக தனியாக ஓர் பெண் இருக்கும் அறைக்குள் நீங்கள் வரலாமா? வெளியில் போங்க அத்தை வந்ததும் பேசிக்கொள்ளலாம் என்று அவள் சொல்லிகொண்டிருக்கும் போது

அந்த ரூமின் வெளியில் இருந்து மஞ்சுளாவின் கூக்குரல் கேட்டது இருவருக்கும்.

உடனே ஜானகி பதட்டத்துடன் வெளியில் வந்தாள் அவளை தொடர்ந்து வேலாயுதமும் வெளியில் வந்தார். இருவரும் ஒரே அறையில் இருந்து வெளிவந்ததை பார்த்த மஞ்சுளா ஜானகியை பார்த்து நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்ட. அடுத்தவ புருஷனை பட்டப்பகலில் வீட்டுக்கே வரவச்சு ரூமில் கொஞ்சிக்குலாவுரீயே நீயெல்லாம் என்ன ஜென்மம்? என்று சத்தமாக கத்தினாள்.

அவளின் பேச்சில் அருவருப்பு அடைந்த ஜானகி, காதுகளை பொத்திக்கொண்ட நொடி வேலாயுதம் ஏய் என்ன சொன்ன? என்று அவளை அடிப்பதற்கு கை ஓங்கினார்

அந்த நொடி வீட்டிற்குள் வாணியும் தன அம்மாவுடன் நுழைந்தாள். ஜானகியின் அத்தை உள்ளே நுழைந்ததும் தன கோபத்தை அடக்கி கொண்ட வேலாயுதம் பிரச்சனை பெரிதாவதை தடுக்க மஞ்சுளாவின் கை பிடித்து விறுவிறுவென வெளியில் இழுத்துச்செல்ல முயன்றார் வேலாயுதம்.

அப்பொழுது மஞ்சுளா திகைத்து நின்ற ஜானகியின் அத்தையை பார்த்து கண்ஜாடை காண்பித்தார். அதனால் ஜானகியின் அத்தை ஜானகியை பார்த்து அய்யோ அய்யோ இப்படி குடும்ப மானத்தையே கப்பலேத்திடியேடீ பாவி, இனி நீ இருக்கிற வீட்டில் என் மவளை நான் எப்படி வச்சுருகிறது இப்படி ஒழுக்கமில்லாதவ இனி என் வீட்டில் இருக்கக் கூடாது, நீ வெளியில் போடீ... என்று ஜானகியின் கையை பிடித்து வெளியில் இழுத்துக்கொண்டுவந்தாள்.

அதற்குள் வாசலில் ஆட்கள் கூடிவிட்டனர் தனக்கு பின்னாலேயே ஜானகியை வீட்டை விட்டு வெளியில் விட்டு தப்பை கதவை அடைத்த ஜானகியின் அத்தையின் செயலை பார்த்த வேலாயுதம் எது நடக்கக் கூடது என்று நினைத்து இங்கு பேச வந்தாரோ! அதுவே அரங்கேறவும், செய்வது அறியாமல் விக்கித்து நின்றார்.

ஜானகியோ கதவை தட்டி அத்தை கதவை திறங்க எல்லோரும் வேடிக்கை பார்கிறார்கள் நான் எந்த தப்பும் பன்னலத்தே கதவை திறங்க என்று கெஞ்சியபடி கதவை தட்டினாள்.

அதற்குள் பக்கத்து தெருவில் அய்யரை பார்க்கவந்த சண்முகத்திற்கு அவர்களின் வீட்டு வாசலில் நடக்கும் பிரச்சனை பற்றி கேள்விப்பட்டு விரைந்து அங்கு வந்தவர், வேலாயுதத்தின் காரும் அதன் பின் இன்னும் ஒரு காரும் இருப்பதை பார்த்தவர் நேராக தன தங்கை மகளிடம் வந்து என்னம்மா ஆச்சு என்று பதட்டத்துடன் கேட்டார்.

அத்தை.... அத்தை.... என்னை வெளியில் தள்ளி கதவை சாத்திட்டாங்க மாமா திறக்கச்சொல்லுங்க மாமா... நான் எந்த தப்பும் பன்னல... என்று அழுகையுடன் ஜானகி கூறிகொண்டிருகும் போது அவரின் அருகில் வேலாயுதம் விரைந்து வந்தவர் சுப்பையா உங்க மனைவி தேவையில்லாமல் ஜானகி மேல் பலிசொல்லி வெளிய தள்ளிட்டாங்க என்றார்.

முன்பு வேலாயுதம் ஜானகியின் அம்மா மருத்துவமனையில் இருந்த போது ஜானகிடம், நான் உன் அம்மா மருத்துவத்தை முழுவதுவும் பார்த்துக்கொள்கிறேன் நீ எதற்கும் கவலை படாதே ஜானகி, எனக்கு நீ கவலை படுவத்தை பார்க்க முடியல, உன்னை நான் கல்யாணம் செய்துகொள்ள ஆசை படுகிறேன் உன் கவலையெல்லாம் போக்கி உன்னுடன் சந்தோசமாக வாழ விரும்புகிறேன் என்று கூறியதை ,

தனது தங்கைக்கு மருந்து வாங்கிகொண்டு வாசலுக்கு வந்த சண்முகம் கேட்டுவிட்டார், அதற்கு ஜானகி மறுத்ததையும் இனி தன்னை பார்க்க வரக்கூடாது என்று எச்சரித்ததையும் அவர் பார்த்திருந்தார்.

எனவே கோபத்துடன் சுப்பையா வேலாயுதர்த்தை பார்த்து அன்று நீங்க உங்களின் விருப்பத்தை சொன்னபோதே அதனை மறுத்துவிட்டு இனி எந்த காரணத்திற்காகவும் இப்படி என்னை பார்க்க வரக்கூடாது என்று சொன்னாளே!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.