(Reading time: 23 - 45 minutes)

அப்போது முருகன் தனது மொபைலுக்கு அனுப்பிய வாட்ஸ் அப் வீடியோ பதிவு வந்ததற்கான இன்டிமேசன் சத்தத்தில் அதனை எடுத்து பார்த்த அதித்துக்கு, நாளை அழகுநிலா தன்னில் சரிபாதியாகிவிடுவாள் என்ற செய்தி மேலும் அவனுக்கு மகிழ்ச்சியே கொடுத்தது.

எனவே மறுநாள் தனது கல்யாணத்தை நடத்துவதற்க்கான வேலையில் பரபரப்பகிவிட்டான். ஹாஸ்பிட்டலின் பக்கம் இருந்த சிவன் கோவிலிலேயே கல்யாணத்தை முடிப்பதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்யச்சொல்லி தனது பி ஏ சங்கரிடம் கூறியவன், அடுத்து தனது அலுவலக பணியாளர்களை கேப்பில் தனது ஓ.எம்.ஆர் பங்களாவிற்கு விருந்துக்கு அழைத்துவர உத்தரவு இட்டான். மேலும் அவ்வாறு வரும் அவர்களுக்கு சாப்பிட்டு முடிந்ததும் போத்தீஸில் ட்ரெஸ் எடுப்பதற்கு ஒவ்வொருவருக்கும் இரண்டாயிரம் கிப்ட் வவ்ச்சர் கொடுக்கச் சொன்னான். அதற்காக ஜவுளிக்கடையில் கொடுக்கவேண்டிய பணத்தை அவர்களிடம் பேசி செக்காக கொடுத்துவிடுமாறு கூறி, அறுசுவை விருந்துக்கும் ஏற்பாடு செய்யச் சொல்லிகொண்டிருகும் போதுதான் அழகுநிலா எழுந்து கொண்டதை பார்த்தான். .

எழுந்தாச்சா வேகமா ரெப்ரஸ் ஆகிவிட்டு அம்மாவை போய் பார். அவங்க விழித்திருப்பதாக நர்ஸ் கூறியதும் நான் பார்க்கப் போனால், என் பின்னால் நீ வருகிறாயா? என்று உன்னைத்தான் தேடுறாங்க. என்ன சொக்குப்பொடி போடுற இப்படி உன்னையே தேட வைக்கிற! என்று தன ஒற்றை புருவம் உயர்த்தி அவளிடம் மயக்கும் ஓரு புன்னகையுடன் கண்ணடித்துக் கேட்டான் ஆதித் .

அவனின் மேல் உள்ள காதலை உணர்வதற்கு முன்பே ஆதித்தின் இந்த புருவம் உயர்த்துதலை கண்டு தடுமாறும் அவள் உள்ளம் இப்போ காதலை உணர்ந்தபின் அவனின் ஒவ்வொரு அசைவையும் ரசிக்க ஆரம்பித்தது அவளின் மனது. .அவள் ஆதித்தை வைத்த கண் வாங்காமல் பார்ப்பதை பார்த்த ஆதித் தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டான்.

காலை தூங்கி விழித்த அழகுநிலா தன்னை பார்த்துக்கொண்டே இருக்கவும் தன்னவள் என்ற எண்ணத்துடன் அவனின் பார்வையும் அவள் உடலெல்லாம் ரசனையுடன் வளைவு நெளிவுகளை லஞ்சையின்றி வருடியது .

அவனின் பார்வை போகும் திசையை கண்டவள் முகம் வெட்கத்தில் சிவந்துவிட்டது. அவளின் கை வேகமாக அருகில் கிடந்த தன துப்பட்டாவை எடுத்து ஒழுங்காக போட்டபடி அவனின் விழி பார்த்து பேசமுடியாத தவிப்புடன் ரெஸ்ட்ரூமினுள் ஓடிச்சென்று மறைந்தாள்.

ஆதித், அவள் துப்பட்டாவில் அவளின் எழில்களை தன் பார்வையில் இருந்து படாமல் மறைத்ததை பார்த்ததும் இப்போ எதுக்கு அதை மேலே போட்டுக்கொண்டு ஓடுரா? நான் மட்டும் தானே இங்கே இருக்கிறேன். இனி அவள் என்னவள் தானே! நான் பார்த்தால் என்னவாம்? என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான். அதேபோல் அவளின் வெட்கமும் அவனை சுண்டியிழுத்தது அடிக்கடி அவளை வெட்கப்படவைத்து பார்க்கவேண்டும் என்ற ஆசை பிறந்தது.

பாத்ரூமிற்குள் போனவள் சே..சே.. இப்படியா வெட்கம் கெட்டுபோய் அவரை நான் வைத்த கண் மாறாமல் அப்படி பார்த்தேன். அதனால் தானே அவரும் என்னை ஒருமாதிரி பார்க்க ஆரம்பித்துவிட்டார். இனி அவரின் முன் கவனமாக இருந்து கொள்ளவேண்டும். இப்படி என் மனதில் அவரின் மேல் உள்ள காதலை வெளிப்படுத்துவதுபோல் நடந்துகொள்ளக்கூடாது, என்று தனக்குத்தானே கூறிக்கொண்டாள். ஆனால்! பூவின் வாசனையையும் பெண்ணின் காதலையும் பொத்திபொத்தி வைத்தாலும் மறைக்கமுடியாதே.....,

----தொடரும்----

Episode 18

Episode 20

{kunena_discuss:1144}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.