(Reading time: 23 - 45 minutes)

அதையும் மீறி நீங்க இப்போ வந்ததுனால நட்டம் யாருக்கு, இவளுக்குத்தானே முதலாளி, நாங்கெல்லாம் ஏழைங்க முள்மேல சேலை பட்டாலும் சேலை மேல முல்லுபட்டலும் நட்டம் சேலைக்குத்தான் என்று அவரை கோபமாக பேசியவர் வாணி கதவை தொர என்று தட்டினார்.

அப்பொழுது ஜானகியின் பொருட்களை ஒரு பெட்டியில் போட்டு கொண்டுவந்து கதவை திறந்த அவரின் மனைவி அந்த பெட்டியை ஜானகியை பார்த்து தூகிப்போட்டவள், தன கணவனை பார்த்து இங்க பாருங்க உங்க தங்கச்ச்சி மகளுக்கு சப்போட்டு பண்ணி வீட்டுக்குள்ள கூட்டிவந்தீங்க பிறகு நானும் என் மவளும் இந்த வீட்டை விட்டு வெளியில் போயிடுவோம். இந்த மாதிரி ஒழுக்கம் கெட்டவளை வீட்டிற்குள் வைத்திருந்தாள் என் மகளின் வாழ்க்கை கேள்விக்குரியதாகிவிடும் என சத்தம் போட்டாள்.

சுப்பையா அதையும் மீறி, நீ வாம்மா நாம உள்ளே போகலாம் என்று ஜானகியை பார்த்து அவர் கூறியதும் அவரின் மனைவி ஐயோ.....ஐயோ..... இந்த அநியாயத்தை கேட்க யாரும் இல்லையா? கட்டுன பொண்ணாட்டி பிள்ளையை விட இந்த மேனாம் மினுக்கி இவருக்கு பெருசா போயிட்டா....? என்று கூறியவள், அடியே வாணி.... வாடி போலாம் என்று தன மகளை வெளியில் இழுப்பதுபோல் பாவலா பண்ணவும் ஜானகி உள்ளே புக முடியாமல் ஸ்தம்பித்து நின்றேவிட்டாள்.

அவளின் நிலை பொறுக்கமுடியாத அவளின் மாமா வேகமாக தன் மனைவியை ஒதுக்கியவர் விறுவிறுவென்று வீட்டிற்குள் போய் அங்கு சாமிபடத்தின் முன் இருந்த மஞ்சள்கயிரை எடுத்துக்கொண்டு நேராக வேலாயுதத்திடம் வந்தவர் முதலாளி உங்களால இந்த புள்ள வாழ்க்கையே கரை பட்டு போயிருச்சு, எனக்குத்தெரியும் உங்க மேலயும் தப்பில்லை. அவ மேலயும் தப்பில்லை என்று இருந்தாலும் இனி அவ வாழ்க்கையை நேராக்க முடியிற சக்தி எனக்கு இல்லை. அவ கழுத்தில் இந்த தாலியை கட்டி என் பொறுப்பை உங்க தலையில் ஏத்துக்கோங்க என்றார்.

இந்தத்திருப்பத்தை எதிர்பார்க்காத மஞ்சுளாவும், சுப்பையாவின் மனைவியும் ஒருநிமிடம் விக்கித்து நின்றனர். காரில் உட்கார்ந்தவாறு நடப்பதை பார்த்த்சுக்கொண்டிருந்த மஞ்சுளா முதலில் சுதாரித்து வேகமாக இறங்கி வேலாயுதத்தை தடுக்க அவனின் அருகில் வருவதற்குள் வேலாயுதம் தன் முன் சுப்பையா நீட்டிக்கொண்டிருந்த மஞ்சள்கயிற்றைக் கையில் வாங்கிகொண்டு ஜானகியை நோக்கி முன்னேற ஆரம்பித்தார்.

ஆனால் ஜானகியோ வேண்டாம் என்று தலையை மறுப்புடன் இடதுவலமாக ஆட்டியபடி பின்னால் எட்டுவைத்து நகர்ந்தாள்.

அவளின் மறுப்பை பார்த்த சுப்பையா, ஜானகி உனக்கு என் மேல மதிப்பும் மரியாதையும், உனக்கு நான் நல்லதுதான் செய்வேன்ற நினைப்பும் இருந்துச்சுனா நான் எடுத்துக்கொடுத்த இந்த தாலியை நீ வங்கிக்கோ என்றார்.

உடனே அதுக்காக எப்படி மாமா இன்னொருத்தியின் புருஷனை நான் கல்யாணம் செய்ய முடியும்? என்று அவள் கேட்கும் போதே அங்கு வந்த மஞ்சுளா ரொம்ப நடிக்காதடீ என்று ஆத்திரத்துடன் சொன்னவள் வேலாயுதத்தின் கையில் இருந்த தாலியை பரித்து தூர வீசும் நோக்கத்துடன் அவரிடம் சென்றாள்.

அவளின் நோக்கத்தை அவளின் உடல் மொழியில் உணர்ந்த வேலாயுதம் ஜானகியின் மேல் அவளுக்கிருந்த வன்மத்தால் இக்கட்டான நிலையில் அவமானப்பட்டு நடுரோட்டில் நின்ற ஜானகியை கண்டு கட்டுப்படுத்த முடியாதவாறு மஞ்சுளாவின் மேல் கோபம் எழுந்தது.

எனவே தன கையில் இருந்த தாலிகயிரை அவளின் கைக்கு எட்டாத தூரத்தில் ஒரு கையில்தூகிப்பிடித்தவர் மற்றொரு கையால் அவளது கழுத்தை பிடித்து அவளை பின்னால் தள்ளியபடி நீ ஜானகியை இங்கிருந்து என்னைவிட்டு துரத்தனும் என்பதற்காக சொன்ன பொய்யை நான் இப்போ நிஜமாக்கப் போறேன். நான் முன்பு அவளை காதலித்ததை கூறி கல்யாணம் செய்ய்துகோ என்று கேட்டப்போது அவள் மறுத்ததை ஒத்துக்கொண்டது தப்புன்னு எனக்கு புரிய வச்சுட்ட நீ. என் மனதில் முதல்முதலில் நுழைந்த அவள்தான் இனி எனக்கு பொண்டாட்டி, குறுக்க வந்த உன்ன தொலைச்சிடுவேன் என்று கர்ஜித்தவர் தன ஒற்றை கையாலேயே அவளை தள்ளிவிட்டார் .

அவரின் முகத்தில் தெரிந்த உக்கிரத்தில் அங்கிருந்த எல்லோரும் ஆடித்தான் போய்விட்டனர். மஞ்சுளாவிற்கு அவரின் கோபத்தை கண்டு உடலெல்லாம் உதறல் எடுக்க ஆரம்பித்தது. இனி அவரை தடுக்க தன்னால் முடியாது என்ற உண்மை தெரிந்து தன் வினை தன்னையே சுடும் என்பதுபோல ஜானகியின் அமைதியை கொள்ளையடிக்க முயன்ற தன்னுடைய செயலால் தன வாழ்க்கையே கொள்ளை போவதை கண்டு கண்ணீருடன் நின்றாள்.

மஞ்சுளாவை தள்ளிவிட்ட அதே வேகத்துடன் ஜானகிடம் போனவர் அவள் மறுக்க மறுக்க அவளின் கழுத்தில் தாலியை கட்டினார். பின் அவளின் கைபிடித்து தன் காரில் அவளை இழுத்துக்கொண்டுபோய் அமரவைத்தவர் அவளின் அருகில் அமர்ந்ததும் ஓடிவந்து முருகன் வண்டியை எடுத்தார். அப்போது முருகனிடம் நம்ம புது வீட்டுக்கு காரை விடு முருகா என்று கூறினார்.

ஜானகியின் கழுத்தில் வம்படியாக தாலிகட்டி இழுத்துக்கொண்டு வந்த பின்பு ஜானகி, வேலாயுதத்திடம் நீங்க செஞ்சது தப்பு. கல்யாணம் ஆன நீங்க நான் மறுக்க மறுக்க எப்படி என் அனுமதியில்லாமல் எனக்கு தாலி கட்டலாம்? நான் உங்க கூட இருக்க மாட்டேன். எத்தனைநாள் எனக்கு காவலாக நீங்க இருக்க முடியும்? நான் உங்களை விட்டு நீங்க அசந்திருக்கும் நேரம் நான் இந்த வீட்டை விட்டு வெளியேறிவிடுவேன் என்று மிரட்டினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.