Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 22 - 43 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Pin It

தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 21 - தீபாஸ்

oten

தூங்கிய சிறிது நேரத்தில் ஆதித்தின் மொபைல் ஒலி எழுப்பியது, ஒன்றிரண்டு ரிங்சத்தத்திற்கு பின்பே ஆதித் எரிச்சலுடன் கட்டிலின் அருகில் இருந்த மொபைலை எட்டி எடுத்தவன் அதில் வர்ஷாவின் என்னைப் பார்த்ததும் இவ எதுக்கு இப்போ போன் பண்றா என்ற யோசனையுடன் எடுக்கவா வேண்டாமா என்று மனதினுள் குழம்பிக் கொண்டிருக்கயிலேயே மொபைல் அடித்து ஓய்ந்தது .

அழகுநிலாவின் உறக்கம் கலையாமல் எழுந்து அவன் அமர்ந்த மறுநிமிடம் மீண்டும் வர்ஷாவிடம் இருந்து மொபைல் அழைப்பு வந்ததும் என்னதான் சொல்கிறாள் பார்ப்போம் என்று அதனை ஆன் செய்து காதிற்கு கொடுத்தான் அப்பொழுது வர்ஷா ஆதித் என்று ஆழ்ந்த குரலில் பேசியதும், யா.. என்றவன் எழுந்து சோபாவில் சென்று அமர்ந்துகொண்டே எதுக்கு இப்போ என்னை தொந்தரவு பண்ற வர்ஷா என்று கேட்டான்

உடனே அவள், நான் கேள்விபட்டது உண்மையா ஆதித் இன்று உனக்கும் அவளுக்கும் கல்யாணமாமே என்று கேட்டாள்.

அதுதான் அன்றைக்கே உன்னிடம் சொல்லிவிட்டேனே இன்னும் ஒருவாரத்தில் அவளுக்கும் எனக்கும் கல்யாணம் என்று ஒருவாரத்துக்குள்ளேயே நான் சொன்னபடி அவளை இன்று மேரேஜ் செய்துகிட்டேன் என்றான்.

அவன் சொன்ன மறுநிமிடம் அப்போ உங்க இருவருக்கும் இன்று முதலிரவா? ஆதித்! அது எப்படி ஆதித் உன்னால் அவ்வளவு சீக்கிரமாக என்னை தூக்கி எறிந்துவிட்டு இன்னொரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கமுடிகிறது .

என்னைவிட அவள் எதில் பெஸ்ட் ஆதித். ஒருவேளை நீ என்னிடம் அந்தமாதிரி நெருக்கம் காட்ட முயன்றபோது நான் ஒத்துக்கொள்ளாமல் இருந்ததால் இப்படி முடிவேடுத்துவிட்டயோ?

என் மீது எத்தனை ஆர்வம் காட்டினாய்! என்னை எவ்வளவு சலனப்படுத்தினாய் அத்தனையும் பொய்யா? ஒருவேளை நான் உன் ஆசைக்கு இணங்கியிருந்தால் இப்போ நீ என்ன செய்திருப்பே ஆதித்?

ஒருவேளை அப்பாவிமாதிரி முகத்தை அந்த அழகுநிலா வைத்துகொண்டு உன் கூட அத்துமீறி கல்யாணத்துக்குமுன் உன்னை திருப்திபடுத்தி, அவள் வலையில் உன்னை வீழ்திட்டாலோ? அதுனாலதான் நீ மயங்கி அவளின் கழுத்தில் தாலி கட்டினாயோ? என்று கேட்டுமுடித்த மறுநிமிடம் ஆதித்துக்கு கட்டுபடுத்த முடியாதவாறு கோபம் எழுந்தது.

ஏய்...! யாருட்ட யாரை பத்தி பேசுறனு ஞாபகத்தில் வச்சுக்கோ! இந்த ஆதித்திடமே அவன் பொண்டாட்டி பற்றி தரம் தாழ்ந்து பேச உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்..!

ஒரு காலத்தில் உன்னை விரும்பித் தொலைத்திருந்தேனே என்று கொஞ்சம் பொறுமையா உன்னிடம் இருக்கணும் என்று நினைத்தேன். .ஆனால் அதற்காக என் மனைவியை நீ வார்த்தையால் கூட இனி டச் பண்ண நினைதாயென்றால் நான் மனுசனா இருக்கமாட்டேன். இதுவே நீ என்னிடம் இப்படிபேசுவது கடைசியாக இருக்கணும் என்று சொன்னவன் மொபைலை சுவிட்ச் ஆப் செய்து வைத்தவன் தலையை கைகள் இரண்டிலும் தாங்கிவாறு அப்படியே உட்கார்ந்துவிட்டான்.

வர்ஷாவிம் மொபைல் ஒலிக்கும் முன் அழகுநிலா அவனின் கையணைப்பில் இருந்தபொழுது அவனுக்கு உண்டான மகிழ்ச்சி ஆசை எல்லாம் இருத்த இடம் தெரியாமல் ஓடிவிட்டது.

வர்ஷா அவனிடம் உன் ஆசைக்கு நான் சம்மதித்திருந்தால் இப்போ நீ என்ன செய்திருப்ப ஆதித்? என்ற கேள்வி அவனை பலமாக தாக்கி இருந்தது. வர்ஷா பேசும் போது அவளின் குரலில் இருந்த துக்கம் அவனை குற்றவாளியாக உணர வைத்தது.

அதற்காக இப்பொழுது அவள் மேல் காதல் எல்லாம் அவனுக்கு இல்லை. ஆனால் தனக்கு பொருத்தமானவள் அவள் இல்லை என்று உணராமல் அவளிடம் ஆசையை காட்டி காதல் என்ற பெயரில் சலனப்படுயத்திய தன முட்டாள் தனத்தால் வர்ஷாவின் மனம் துன்பப்படுத்திவிட்டோம் என்ற குற்ற உணர்வு அவனை பாடாய் படுத்தியது.

தூக்கம் அவனை விட்டுத் தூரப்போனதால் வேண்டாத எண்ணத்தில் இருந்து தன்னை மீட்க்க தனது வேலையில் மூழ்க முடிவெடுத்து தனது ஆபீஸ் பைல்களை பார்க்க ரீடிங் ரூமிற்குள் சென்று மறைந்தான் .

அழகுநிலாவிற்கு அவனின் மொபைல் ஒலி எழுபியதுமே தூக்கம் கலைந்துவிட்டது, ஆனால் ஆதித்தின் அணைப்பிற்குள் இருந்தவளால் கண் விழித்து கூச்சத்தால் அவன் முகம் பார்க்க முடியும் என்று தோன்றவில்லை படுக்கும் முன் அவள் மனது ராசாத்தியின் புறக்கணிப்பாலும் வார்த்தைகளாலும் காயம் பட்டு அதலிருந்து மீள முடியாமல் இருந்தவளுக்கு ஆதித்தின் அணைப்பு அவசியமானதாக இருந்தது.

அவனின் அரவணைப்பு இல்லையென்றால் துக்கத்திலிருந்து மீள முடியாமல் அழுதே கரைந்திருப்பாள்.

ஆனால் அவன் உனக்கு நான் இருக்கிறேன் என்று தேற்றி அமைதிபடுத்தி உறங்கி விழித்தவளுக்கு அவனின் அணைப்பு இப்பொழுது கூச்சத்தைக் கொடுத்தது.

இருந்தாலும் காதல் கொண்ட அவளின் மனம் கள்ளத்தனமாக அவனின் அணைப்பை சுகமாக ஏற்றது.

அவளின் மயக்கம் ஆதித் போனில் இப்போ எதுக்கு என்னை தொந்தரவு செய்ற வர்ஷா என்று கூறியதுமே தெளிந்துவிட்டது .

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5  6 
 •  Next 
 •  End 

About the Author

Deebas

Latest Books published in Chillzee KiMo

 • Cinema suvarasiyangalCinema suvarasiyangal
 • Kandathoru katchi kanava nanava endrariyenKandathoru katchi kanava nanava endrariyen
 • Manathil uruthi vendumManathil uruthi vendum
 • Mounam vizhungiya ragangalMounam vizhungiya ragangal
 • Nethu paricha rojaNethu paricha roja
 • ThaayumaanavanThaayumaanavan
 • Then mozhi enthan thenmozhiThen mozhi enthan thenmozhi
 • Vennilavu enakke enakkaVennilavu enakke enakka

Completed Stories
On-going Stories
 • -NA-
Add comment

Comments  
# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 21 - தீபாஸ்SAJU 2018-03-07 11:41
superrrrrrrrrr ud sis
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 21 - தீபாஸ்Deebalakshmi 2018-03-07 13:47
Thank you Saju :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 21 - தீபாஸ்Saaru 2018-03-06 17:16
Nila seekram melt aaavala
Adhith correct ah catch pannadu super
Cute epi deeps
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 21 - தீபாஸ்Deebalakshmi 2018-03-07 13:46
Thank you Saaru :thnkx:
Reply | Reply with quote | Quote
# OTENAkila 2018-03-06 13:23
Hi
Interesting episode.
Nils's knot with that video is nicely removed also that part of story is narrated in a different approach.
Nila's emotional feeling about adith is nice.
Also adith's part is very interesting.
Totally superb update. No words to say!!!!!!
Reply | Reply with quote | Quote
# RE: OTENDeebalakshmi 2018-03-07 13:45
:-) Thank you Akila :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 21 - தீபாஸ்mahinagaraj 2018-03-06 12:47
amazing..... :clap: ;-)
unmaiya indamathiri yarukum vara kudathu... renduperum verumbium... renduperum velipadutta matingaranga...
alaki konjam purunjukalam..... its ok...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 21 - தீபாஸ்Deebalakshmi 2018-03-07 13:42
Thank you Mahinagaraj. :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 21 - தீபாஸ்madhumathi9 2018-03-06 12:40
(y) Fantastic epi. But azhagunila edukka ninaippathu thavaraana mudivu endru eppithu purinthu kolla pogiraal.but aadhith Kitts adhu mudiyuma :Q: very very interesting epi. Adutha epiyai eppothu padippom endru ennuvathu polave irukkum ungalin ovvoru epiyum. :thnkx: 4 this epi. :clap: :clap: :roll:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 21 - தீபாஸ்Deebalakshmi 2018-03-07 13:40
:-) Thank you Madhumathi :thnkx:
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NSS

NSS

VVU

KiMo

PMM

IOKK2

VTV

NeeNaan

KNY

KTKOP

KET

TTM

PMME

EMS

IOK

NIN

KDR

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top