(Reading time: 22 - 43 minutes)

அடுத்தவாரம் உங்க கல்யாணம் நல்லபடி முடியட்டும் .அதற்கு பிறகு இதை எப்படி செய்யலாம் என்று யோசிப்போம் என்று கூறினான் ஜேம்ஸ்.

காலையில் சீக்கிரமே எழுந்துவிட்ட அழகுநிலா பக்கத்து அறையில் கதவை லேசாக திறந்து பார்த்தால் ஆதித் பைலை தனது நெஞ்சில் கவிழ்தியவாறு அந்த சேரில் சாய்ந்து உட்கார்ந்து காலை முன்னால் இருந்த மேஜையின் மீது நீட்டி தூங்கிகொண்டிருந்தான்.

சத்தம் எழுப்பாமல் அங்கிருந்த கபோர்டில் உள்ள அவளின் பேக்கில் இருந்து உடை மற்றும் துண்டை எடுத்துகொண்டு குளித்து வந்தவள் தன முகத்தை கண்ணாடியில் பார்த்தாள். இரவு அழுததாலும் சரியாக தூங்காததாலும் அவளின் இமை இலேசாக தடித்து கண் சிவந்திருந்தது. அதனை கண்ணுக்கு மையிட்டு கொஞ்சம் பிரெஸ் ஆக இருப்பது போல் ஒப்பனை செய்து வெளியில் வந்தவளை பொன்னி சமையல் அறையில் இருந்து எட்டிப் பார்த்தாள்.

அம்மா காபி உங்களுக்கும் அய்யாவிற்கும் தரட்டுமா? என்று கேட்டாள். அவர் தூங்குறார் பொன்னி எனக்கு மட்டும் கொடுங்க என்று கூறி வாங்கியவள் வெளியில் இருந்த தோட்டத்தை பார்த்துக்கொண்டே நடந்தவள் புல்களுக்கு இடையில் இருந்த கல்லில் அமர்ந்து காபி அருந்தி முடித்தவளுக்கு இங்கிருக்கும் காலம் வரை ஆதித்துடனான தனது வாழ்கையை நல்ல தோழமையுடன் அவனுடன் பழகி தன நெஞ்சில் பொக்கிசமாக பதித்து வைத்துக்கொள்ளவேண்டும் அவனை விட்டு பிரிந்தபின் அந்த நினைவுகளுடனே தன காலத்தை கழிக்கவேண்டும் என்று நினைத்தவளுக்கு அழுகை வந்தது.

தான் காதலிக்கும் ஒருவனையே கணவனாக அடைந்த பின்பும் அவனிடம் தன காதலை உணர்த்தமுடியாமல் உள்ள தன நிலையை நினைத்தவள் மனம் இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்று நினைத்துகொண்டாள்.

அப்பொழுது வீசிய காற்றில் அசைந்த புல்கள் அவளின் காலை உரசி அதிலிருந்த பனித்துளிகள் அவளை சிலிர்க்க வைத்தன.

நேற்று ஆதித் தன்னை அணைத்த பொழுது அதே போல் தான் சிலிர்த்ததை உணர்ந்தவளின் இதழில் புன்னகை அரும்பியது.

அவன் அணைத்தபோது ஒரு தாயிடம் குழந்தையாக ஒன்றுவதுபோல் இருந்தவளுக்கு இப்பொழுது தான் அவனின் அணைப்பில் இருந்ததை நினைத்ததும் வெட்கம் ஏற்பட்டது.

அவளின் உள்மனம் சந்தோசத்தில் அதை பத்திரப்படுத்திகொண்டது அவளின் உதடுகள் அதை உணர்ந்து பாட்டாகவே படித்தது , இதே அழுத்தம்... அழுத்தம்.... இதே அணைப்பு வாழ்வின் எல்லைவரை வேண்டும்... வேண்டும்... என்ற படலை முணுமுணுத்தது

அப்பொழுது அவளின் அருகில்வந்து நின்ற ஆதித்தின் அரவம் கேட்டு நிமிர்ந்து அவளை பார்த்தவனுக்கு புன்னகையுடனான அவளின் முகம், அவனுக்கு சந்தோசத்தை கொடுத்தது. அவனும் அவளின் அருகில் அமர்ந்தவன் என்ன பாட்டெல்லாம் பலமா இருக்கு என்னை நெனச்சுத்தானே நீ பாடின! என்று குறும்புடன் அவளிடம் கண்ணடித்துக் கேட்டான் ஆதித்.

அவன் அவ்வாறு கேட்டதும் சிரித்தபடி, நெனப்புத்தான் உங்களுக்கு என்று அவள் உதடுகள் சொன்னாலும் அவள் கண்கள் என்னவோ ஆமாம் என்று அவனிடம் சொல்வதுபோல் அவனுக்கு தோன்றியது.

அவனின் பார்வை வீச்சில் தடுமாரிய அவளின் உள்ளத்தை திசை திருப்பும் நோக்குடன் என்ன எந்திச்சு அப்படியே வந்துட்டீங்க போய் ப்ரஸ் பண்ணிட்டு குளிங்க. சாப்பிட்டுவிட்டு ஹாஸ்பிடல் போகனும். அத்தை நம்மள எதிர் பார்த்து காத்திருப்பாங்க என்றாள் அழகுநிலா

அவள் அவ்வாறு கூறியதும் ஆதித் அவளிடம், காலையில் எழுந்ததும் என் பொண்டாட்டியை பார்க்கணும் என்று பார்த்தா..! ரூமில் காணோம் அதுதான் உன்னை தேடி வந்தேன் என் பேபி. நீயும் இந்த அத்தானை நெனச்சு பாட்டுப்பாடிக்கிட்டு இருகிற என்று கூறியவன்

வா... வா... என்னை குளிக்கவச்சு ட்ரெஸ் மாத்திவிடு என்று கூறியவன் எழுந்து அவளையும் கைபிடித்து எழ்ச்சொல்லி இழுத்தான்.

அவனின் வார்த்தையை கேட்டு தன கண்ணை விரித்து என்ன...? நானா ? விளையாடாதீங்க ஆதித். போய் கிளம்பி வாங்க அத்தை காத்திருப்பாங்க என்று மறுபடியும் கூறினாள்.

மகனும் மருமகளும் இன்னைக்கு லேட்டா வரட்டும் என்றுதான் ஆசைபடுவாங்க. நாம விடிஞ்ச உடனே அங்க போய் நின்னா மகனும் மருமகளும் தன்னை நெனச்சு வருத்தத்தில் சந்தோசமாக இருக்கவில்லை என்று கவலை படுவாங்க. சோ...! மதியம் ஹாஸ்பிடல் போனால் போதும். இப்போ நான் சொன்னதை செய்ய என் கூட வா என்று கூறினான் ஆதித்..

அவனின் அலம்பலை அவள் மனம் ரசித்தாலும், அவளின் வாயோ ப்ளீஸ்... ஆதித் இன்னும் நான் ...என்றவள் எப்படி கூற என்று ஒருநிமிடம் யோசித்தவள் பின் வார்த்தைகளை கோர்த்து எனக்கு கொஞ்சம் அவகாசம் வேணும் ஆதித். கல்யாணம்தான் அவசரமாக நமக்கு நடந்துவிட்டது நாம கொஞ்சநாள் நல்ல பிரண்ட்ஸ் ஆக மட்டும் இருக்கலாமே என்றாள் அழகுநிலா .

அவ்வளவு நேரம் அவளுடன் இணக்கமாக பேசிகொண்டிருந்தவன் அவளை ஆழ்ந்து பார்த்து, வாட்ஸ் ஈட்டிங் யூ பேபி. நைட் நல்லாத்தானே இருந்த. தீடீர்னு என்ன ஆச்சு? என்று கேட்டவன் அவள் முகத்தை உற்றுப்பர்த்தவன் நைட் நீ தூங்கலையா? உன் கண்ணை பார்த்தால் தூங்கியமாதிரி தெரியலையே! ஆனா என் கையணைப்பில் உன்னை நான் தூங்கவச்சுட்டேனுதானே நெனச்சேன் பிறகு எப்படி என்று யோசித்தவன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.