(Reading time: 22 - 43 minutes)

நான் ஆதித்தின் காதலியல்ல அந்த வர்ஷா தான் அவனின் காதலி என்ற உண்மை அவளுக்கு முகத்தில் அறைந்ததுபோல் இருந்தது. தாலி கட்டிவிட்டார் என்பதற்காகவும் தன அம்மாவின் ஆசைகாகவும் எனக்கு நல்ல கணவனாக நடந்துகொள்ள முயற்சிசெய்யும் இந்த அதித்துக்கு நான் என்ன கை மாறு செய்யபோகிறேன் என்று வினா எழுந்தது.

அதற்கு அவள் கண்ட விடை ஜானகிக்கு உடல் நிலை நலமானதும் அவருடன் வாழும் இந்த வாழ்க்கையை மனதில் பொக்கிசமாக வைத்துகொண்டு எங்கேயாவது கண் காணாத இடத்திற்குச்சென்று தனது காலத்தை வாழ்ந்து முடிக்கவேண்டும் என்பதுதான்.

ஆனால் அப்படி போகும் போது வர்ஷாவிடம் அவங்க காதலிக்கும் போது இருந்த அதே ஆதித்தாக நான் ஒப்படைப்பதை சொல்லிவிட்டே சென்றுவிட வேண்டும் என்ற முடிவினை எடுத்தாள் அழகுநிலா.

முடிவெடுப்பது என்னவோ எடுத்துவிட்டால் ஆனால் ஆதித்தை விட்டு பிரிவதை இப்பொழுது நினைக்கயிலேயே அவளது உள்ளம் பெரும் அழுத்தத்திற்கு உண்டானது. மேலும் ஆதித் கொஞ்சநேரத்திற்கு முன் தன்னை நெருங்கி அணைக்கையில் அதனை இயல்பாக தனது உள்ளமும் உடலும் ஏற்றதை அவள் நினைவுகூர்ந்தாள். இதேபோல் மீண்டும் அவன் தன்னை நெருங்கிவந்தாள் அவளால் அவனை விலக்க முடியும்! என்று தோன்றவில்லை

மனைவி என்ற உரிமையில் தன்னை ஆதித் நெருங்காதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும் என்று முடிவெடுத்தாள்.

போனதடவை இங்கு வந்தபோது தங்கியிருந்த அந்த ரீடிங் அரையிலேயே இனி தங்கிகொள்ளனும், ஏன் என்று ஆதித் கேட்டால் அவள் வீட்டில் அவளின் அம்மா ராசாத்தி மற்றும் குமரேசன் அவளை மனமார ஏற்றுகொண்டால் மட்டுமே அவனுடன் இனைய முடியும்! என்று கூறிவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டால் அழகுநிலா .

ர்ஷா மொபைலை வெறித்தபடி உட்கார்ந்திருப்பதை பார்த்து கொஞ்சம் தொலைவில் நரேனுடன் நின்றுகொண்டிருந்த மாதேஷ் அவளின் அருகில் வந்து அமர்ந்தான்.

அப்பொழுது அவனை பார்த்த வர்ஷாவிடம், என்ன வர்ஷா? ஆதித்திடம் நான் அவனுக்கு இன்று கல்யாணம் என்று சொன்னதை கேட்டு உறுதி படுத்திகொன்டாயா என்று கேட்டான்

அவன் அவ்வாறு கேட்டதும் கலங்கிய தனது கண்களில் கண்ணீரை வழியவிட்டமல் சமாளித்தபடி எனக்கு கொஞ்சம் தனியா இருக்கணும் மாதேஷ் ப்ளீஸ்.... என்னை தொந்தரவு செய்யாதீங்க! என்று கூறினாள்.

அவளின் வருத்தம் ஏனோ மாதேஷை வருத்தம் கொள்ள வைத்தது எனவே அவன், உங்களை மாதிரி ஒரு அழகான பெண்ணை இழந்ததுக்கு அந்த ஆதித்தான் வருத்தப்படனும் வர்ஷா. உங்க அருமை தெரியாத அவனுடன் உங்க கல்யாணம் முடியாமல் இருந்ததுதான் உங்களுக்கு நல்லது. அவனுக்காக நீங்க அழக்கூடாது என்று கூறிக்கொண்டிருகும் போது அவர்களிடம் வந்து அமர்ந்தான் நரேனும்.

நரேன் அங்கு வந்து அமர்ந்ததும் மாதேஷ் டக்கென்று எழுந்துவிட்டான். உடன் வா நரேன் நம்ம அங்க போகலாம் என்று அங்கு உட்கார்ந்த நரேனை இழுத்துக்கொண்டு போக முயன்றான்.

ஏனென்றால், நரேனின் பார்வையில் வர்ஷா விழுவதை அவன் விரும்பவில்லை. அவனின் செய்கையை பார்த்த நரேன் ஏய்....! உட்காருடா என்னை அவங்களுக்கு அறிமுகப்படுத்து மாதேஷ் என்று உட்கார்ந்திருந்தவன் அவனையும் இழுத்து அமரவைத்தான்.

பின் அவனே வர்ஷாவிடம், நான் நரேன், மாதேசின் நண்பன் அதுமட்டுமல்ல மினிஸ்டர் காந்தனின் ஒரே மகன் என்று கூறியவன் பதிலுக்கு வர்ஷா எதுவோ சொல்லவருவதை தடுத்து உங்களை பற்றி நீங்க எதுவும் சொல்லவேண்டாம். உங்களை பற்றிய அனைத்து விசயமும் தெரியும் இன்குலூடிங் ஆதித் உங்களை கழட்டி விட்டது கூட என்று கூறினான்.

நரேன் மினிஸ்டர் காந்தனின் மகன் என்று அவன் கூறியதுமே அழகுநிலாவை இவனிடம் இருந்து காப்பாற்ற முயன்றதால்தான் ஆதித்தை சந்தேகப்பட்டோம். அதனால்தான் இருவருக்கும் பிரிவு வந்தது என்ற உண்மை அவளுக்கு புரிந்து அவனின் மேல் கோபம் உண்டானது வர்ஷாவிற்கு .

அவள் தன்னை கோபமாக பார்ப்பதை கூட பொருட்படுத்தாமல் இப்போ நான் எதுக்கு உங்க கூட பேசவந்தேன்னா.... உங்களையும் அந்த ஆதித் ஏமாற்றியிருக்கிறான். என்னையும் அவன் சில விசயத்தில் பகைத்துக்கொண்டிருகிறான். மேலும் மாதேசின் ஜென்ம விரோதி அந்த ஆதித். எனவே நாம எல்லாரும் ஒன்றா சேர்ந்தா நம்ம எல்லோருடைய ஒரே எதிரியான ஆதித்தை கண்டிப்பா ஒழிச்சுக்கட்ட முடியும். சோ..! அதுக்கான கூட்டணியில் நாம இனையலாமா? எப்படி டீலா....நோ டீலா...... சொல்லு பியூட்டி என்று கேட்டான்.

அவன் கேட்ட மறுநிமிடம் உட்கார்ந்த இடத்தைவிட்டு பட்டென்று எழுந்த வர்ஷா, எனக்கு உங்க கூட டீல் வச்சுக்க பிடிக்கல. எனக்கு பாய் பிரண்ட்ஸ் இருந்தாலும், அதில் பொண்ணுங்களை ஆக்வேர்டாக ஹேண்டில் பண்றவங்களை என் நண்பர்கள் வட்டத்தில் சேர்பதில்லை என்றவள், மாதேசின் பக்கம் திரும்பி, இப்படிப்பட்ட friendநண்பர்கள் குரூப்பில் நீங்க இருப்பீங்கனு தெரிந்திருந்தால் முன்னமே உங்ககூட நான் பேசியிருக்க மாட்டேன் மாதேஷ். குட் பை..... இத்தோட உங்க கூட உள்ள என்னோட நட்பை முறித்துக்கொள்கிறேன். குட் பை என்றவள் விறுவிறுவென்று வெளியேற ஆரம்பித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.