(Reading time: 22 - 43 minutes)

வந்ததும் ஜோசப்பை பேசணும் என்று கூப்பிட்டுகொண்டு கடற்கரைக்கு வந்தவன் கோபமாக இருப்பதைய் பார்த்த மாப்பிள்ளை ஜோசப் ,மச்சான் எதுவோ பேசணும் என்று கூப்பிட்டுகொண்டு வந்தவர் இப்படி கோபமா இருந்தா எப்படி? நான் என்ன செஞ்சேன்னு சொல்லிட்டு கோபப்படுங்க என்று கூறியதும், தன மொபைலில் இருந்த ஒரு வீடியோ பதிவை அவனிடம் காண்பித்து இதை பாருங்கஎன்று அவனிடம் கொடுத்தான் ஜேம்ஸ்.

அதை வாங்கி பார்த்தவன் முகம் அதிர்ச்சியில் இருந்தது. ஏனெனில் அதில் அவன் கல்யாணம் செய்யப்போகும் ஜேம்ஸின் தங்கையை ஒரு மாதத்திற்கு முன் வீட்டிற்கு தெரியாமல் ம்காபலிபுரம் கூடிக்கொண்டு போயிருந்தான்

அப்பொழுது தனது வருங்கால மனைவிதானே என்று ஜேம்ஸின் தங்கையிடம் கொஞ்சம் அத்துமீறி அந்தரங்கமாக யாரும் பார்க்கவில்லை என்ற நினைப்பில் அவளிடம் உரிமையாக அவன் நடந்து கொண்டது, வீடியோ பதிவாக அதில் இருந்தது. .

மச்சான்..! மன்னிச்சிடுங்க மச்சான். உங்க தங்கச்சசி என் கூட வர மட்டேனுதான் சொன்னாள். நான்தான் பெங்களூர் போகிறேன் வர ஒருமாசம் ஆகும் அதுக்கு முன்னாடி உன்னுடன் கொஞ்சம் தனியா டைம் ஸ்பென்ட் பண்ணும் என்று கட்டாயப்படுத்தி கூப்பிட்டுக்கொண்டு போனேன். ஆனா மச்சான், என் வருங்கால மனைவி தானே என்று கொஞ்சம் அட்வான்டேஜ் எடுத்துகிட்டேன்!

ஆனா நாங்க இருந்த இடத்தில் யாருமே இல்லையே... எப்படி இப்படி யார் எங்களுக்கு தெரியாமல் இந்த வீடியோ எடுத்தது. நாங்க பைக்கில் வந்ததால் பீச் ஒட்டி ஒரு ரிசாட் இருந்த. அந்த இடம் அழகா இருக்குனு செல்பி எடுக்க நிப்பாட்டச்சொன்னா. அங்க ஆள்நடமாட்டமே இல்லை நாங்க மட்டும் தான் இருக்கிறோம் என்ற நினைப்பில் அப்படி நடந்துகிட்டோம் தப்புதான் மச்சான் என்று மன்னிப்பு கேட்டான்.

ஆனால் அவனின் சட்டையைக் கொத்தாக பித்துவிட்ட ஜேம்ஸ், டேய் யாருமே இல்லையென்று நீ சொல்ற ஆனா இந்த வீடியோவை எவனோ எடுத்திருக்கிறான். அப்படிஎன்னடா பொது இடத்தில் வரைமுறை தாண்டுறீங்க நமக்குன்னு ஒருகட்டுப்பாடு வரைமுறைன்னு எதுவும் இல்லையா?

கல்யாணத்திற்கு பிறகு அந்தரங்கமாக நாலு சுவத்துக்குள் நடக்கிறத கல்யாணத்திற்கு முன்னமே பொதுஇடத்தில் யாரும் இல்லையென இப்படி நடந்து கொள்வதால் தானே குற்றங்கள் பெருகிவிடுகிறது. வீடியோ எடுத்தவன் இத்தோட உங்களை விடாம உங்களோட செயலால் வேறுமாதிரி அவன் யோசித்து உன்னை அடித்துபோட்டுட்டு என் தங்கையை தூக்கிகொண்டு போய் ஏதாவது பண்ணியிருந்தா?

என்றதும், ஜேம்ஸ், சாரி மச்சான்..... என்று விபரீதத்தை உணர்ந்து அச்சத்துடன் கூறியதும் அவனை பிடித்திருந்த பிடியை தளர்த்தியவன்,

நாம மனுசங்க ஜேம்ஸ். ஆடுமாடு நாய் மாதிரி கண்ட எடத்திலயும் கட்டுப்பாட்டு மீறி நடக்கக் கூடாது. இதெல்லாம் என் தங்கையிடம் என்னால் நேரடியாக எடுத்துச்சொல்ல முடியாது அதனால்தான் நீங்க ஊரில் இருந்து வந்ததும் உங்களை கூப்பிட்டு கண்டிக்கிறேன்.

அதுஅது அந்தந்த நேரத்துல அதற்குரிய இடத்தில நடந்தால்தான் மதிப்பு மாப்பிள்ளை , புரிந்து கொள்வீர்கள் என்று நினைகிறேன் என்று கூறினான்.

இனி இதுமாதிரி நான் நடந்துகொள்ளமாட்டேன் மச்சான். ஆனால் இதை எடுத்தது யார் உங்களுக்கு இது எப்படி கிடைத்தது என்று கேட்டான் .

அப்பொழுது ஆதித் தன்னிடம் வந்து அவருக்கு தெரிந்த பெண்ணுக்கு இந்த போனில் உள்ள வீடியோ பதிவால் பிரச்சனை என்று கூறியவன் அந்த போனை அதற்குரிய பாஸ்வேர்டான அந்த மொபைலின் உரிமையாளரின் கைரேகை இல்லாமல் ஓபன் செய்து அந்த வீடியோ பதிவை டெலிட் செய்வதற்காக தன்னிடம் கொண்டு வந்ததை சொன்னான்.

அப்படி செய்யும் போது தான் அது மினிஸ்டர் காந்தனின் மகன் நரேனின் மொபைல் என்று தெரிந்து கொண்டேன். பின்பு அதில் இருந்த வீடியோக்களை பார்த்தபோதுதான் தெரிந்தது அந்த நரேன் சரியான பொறுக்கி. எடுக்கக்கூடாத நேரத்தில் பெண்களை அவர்களுக்கு தெரியாமல் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து அதை ரசிக்கும் கேவலமான புத்தி உடையவன் என்று தெரிந்து கொண்டேன்.

அவனின் அந்த பழக்கம் கடைசியில் அவனை சுற்றி உள்ளவர்களையும் அதேமாதிரி எடுக்கும் வரை போய் கடைசியில் அவனையும் அவனது அப்பவையுமே அதே மாதிரி எடுத்து வைத்திருக்கிறான்.

இதில் மாட்டும் குடும்பப் பெண்களை என்னனென்ன பாடுபடுத்தினானோ? இவனையெல்லாம் சும்மா விடக்கூடாது இவனின் முகத்திரையை கிழித்து நாறடிக்க வேண்டும் அப்பொழுது தான் இது போன்ற ஈனச் செயல் செய்பவர்களுக்கு பயம் ஏற்படும் என்று கூறினான் ஜேமஸ்.

அவன் கூறியதும் தனது அந்தரங்கத்தை வீடியோ எடுத்த அந்த நரேனின் மேல் சுள் என்று கோபம் ஏறியது. எனவே கண்டிப்பா ஏதாவது செய்யனும் மச்சான். அந்த நரேனும் அவனின் கூட இருப்பவர்களும் அந்த நடிகையுடனான வீடியோவை நெட்டில் வைரலாக்கி அவர்களை மானத்தை வாங்கணும். அப்போதான் மத்தவங்க அந்தரங்கத்தை இதேபோல் வீடியோ எடுத்து பார்ப்பதை நிறுத்துவாங்க அந்த பொறுக்கிங்க என்று கூறினான்.

அவன் அவ்வாறு கூறியதும் அவசரப்பாடாதீங்க மாப்பிளை. அதில் உள்ளவங்களெல்லாம் பெரிய இடத்து பசங்க. நாம்தான் அப்படி செய்தோம் என்று தெரிந்தால் அவர்கள் கோபத்தில் நம்மை எதுவேண்டுமென்றாலும் செய்யலாம்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.