(Reading time: 22 - 43 minutes)

ஐ காட் இட் அப்போ எனக்கு வந்த போன சத்தத்தில் நீயும் எழுந்துட்டீயா? எனக்கு அந்த வர்ஷாவிடம் இருந்து அந்த நேரத்தில் போன் வந்ததால்தான் இந்த முடிவா அழகி? என்று கேட்டான்

அவனின் யூகத்தை பார்த்தவள் எப்படி சரியா எதிரில் இருப்பவரின் மனதை கனித்து விடுகிறார் என் ஆதித் என்று நினைத்தவள் தான் நினைத்ததை செயல்படுத்துவது எளிதல்ல என்பதையும் உணர்ந்து கொண்டாள்.

அவளின் பதிலுக்கு அவளின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த ஆதித்தை பார்த்தவள் முகத்தை கடினமாக வைத்துகொண்டு அதுவும் ஒரு காரணம் தான் என்றவுடன் கோபத்துடன் என்னை சந்தேகப்படுகிறாயா அழகுநிலா...? என்று கோபத்துடன் கேட்டான்.

அவனின் கடினமான முகத்தையும் வார்த்தைகளையும் கேட்டவளுக்கு முணுக்கென்று கண்ணில் நீர் சுரந்துவிட்டது.

உங்களை சந்தேகப்படுவது என்னை நானே சந்தேகப்படுவது போல ஆதித். ஆனால் நீங்கள் என் மீதுள்ள அனுதாபத்தாலும் அத்தையின் ஆசைகாகவும் உங்களின் காதலை துறந்து என்னை கடமைக்காக கல்யாணம் செய்திருக்கலாம் ஆதித் .ஆனால் என்னால் கடமைக்காக உங்களுடன் இனைய முடியாது என்றாள்.

அவள் கூறியதை கேட்ட ஆதித்திற்கு அவளின் மேல் கோபம் சுறுசுறு என்று ஏறியது. தன் கண்ணை மூடி ஒருநிமிடம் நின்று கோபத்தை அடக்கியவன் வாயிலிருந்து வார்த்தைகள் அணலாய் தெரித்தது.

என்னடீ சொன்ன..? கடமைக்காக உன் கழுத்தில் தாலியை கட்டினேனா? இந்த ஆத்திதுக்கு பிடிக்காததை யாராலும் கார்னர் செய்து செய்யவைக்க முடியாது. எனக்கு ஒன்றுதான் புரியல நேத்து ஒன்றும் நீ கடமைக்காக என் அணைப்பை ஏற்றது போல் இல்லையே....! என்கிட்டையே விளையாடி பார்கிறாயா அழகுநிலா..., என்றவன் மனதினுள் நீயே உன்னை அறியாமல் என்கிட்டே மெல்ட் ஆவ என்று கூறியவன்

நான் பிரெஸ் ஆகி வருகிறேன் மத்தவங்க முன்னாடி குறிப்பா அம்மா முன்னாடி என்கிட்டே இருந்து விலகி இருக்கிறமாதிரி நடந்துகிட்ட உன்னை என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது...! என்று கூறியவன் திரும்பி அவளை விட்டு கோபமாக வீட்டிற்குள் சென்று மறைந்தான்.

அவ்வளவு நேரம் அழகாக தெரிந்த அந்த இடம் ஏனோ இப்பொழுது அவளுக்கு அவ்வாறு தெரியவில்லை. அவளும் அவனை தொடர்ந்து வீட்டிற்குள் வந்தவள் பொன்னி என்ன சமைகிறாள் என்று பார்க்க அடுப்படிக்குள் நுழைந்தாள் .

----தொடரும்----

Episode 20

Episode 22

{kunena_discuss:1144}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.