(Reading time: 17 - 34 minutes)

நீ நான், அம்மா, அப்பா நாம மட்டும் தான் நம்ம குடும்பம். நான் எதாவது சொன்னா என்கிட்ட சண்டை போடு. கோபம் வந்தா நாலு அடி வேணும்னா  அடிச்சிரு. அம்மா, அப்பா எதாவது சொன்னா என்கிட்ட சொல்லு. நான் அவங்களை கேக்குறேன். ஆனா அவங்க உன்னை எப்பவும் கஷ்ட படுத்த மாட்டாங்க. எங்க மூணு பேரை தவிர கண்டவங்க பேசுறதுக்கு எல்லாம் நீ இப்படி அழணுமா?"

....

"என்ன மா புரிஞ்சதா? பதில் சொல்லு டா"

"ம்ம்"

"உன்னை இந்த வீட்டில் இருந்தோ, என் மனசில் இருந்தோ யாரும் விரட்ட முடியாது. இது உன்னோட வீடு. நான் உன்னோட புருஷன். இனி அவங்க என்ன பேசினாலும் பெருசா எடுத்துக்க கூடாது சரியா?"

"ம்ம்"

"என்ன ம்ம் ம்ம் னு மட்டும் தான் வருது. சொன்னது எதாவது புரிஞ்சதா?"

"ஹ்ம்ம் புரிஞ்சது அத்தான்"

"இனி அழ மாட்ட தான?"

"ம்ம்ம் மாட்டேன்"

"இப்ப தான் என் பொண்டாட்டி நல்ல பொண்ணு. நீ  எப்பவுமே சிரிச்சிட்டே தான் இருக்கணும்"

"ஹ்ம்ம் நீங்களும் சிரிச்சிட்டே இருக்கணும்"

"சரி ரெண்டு பேருமே சிரிச்சிட்டு இருப்போம். என்ன பாக்குறவங்க தான் லூசுன்னு நினைப்பாங்க"

"போங்க அத்தான்"

"அப்புறம் கலை, இப்ப உன் கண்ணீரை நிப்பாட்ட நான் கொடுத்த மருந்து பிடிச்சிருந்ததா?", என்று சிரித்து கொண்டே கேட்டான் சூர்யா. 

ஏற்கனவே அவன் நெஞ்சில் முகம் புதைத்து பதில் சொல்லி கொண்டிருந்தாள் இன்னும் முகத்தை அவன் நெஞ்சில் ஆழமாக புதைத்தாள்.

"கலை மா, இப்படி எல்லாம் இறுக்கி பிடிக்காத மா. உன் அத்தான் பாவம். நானே கஷ்ட பட்டு என்னை கண்ட்ரோல் பண்ணிட்டு இருக்கேன்"

"ஐயோ வலிச்சிட்டா அத்தான்?", என்று அப்பாவியாக கேட்டாள் கலைமதி.

"எப்படி கேக்குது பாரு பாப்பா", என்று நினைத்து கொண்டு "ஒண்ணும் இல்லை டா. வலிக்க எல்லாம் செய்யலை", என்று சிரித்தான்.

"ம்ம்", என்று சொல்லி விட்டு மறுபடியும் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் கலைமதி.

"சமத்து. எப்படி ஓட்டிகிற", என்று மெச்சி போனான் கணவன்.

"இனிமே அழ மாட்ட தான?"

"மாட்டேன்"

"அவங்க என்ன சொன்னாலும் கண்டுக்க கூடாது சரியா?"

"ம்ம்"

இந்த அற்புதமான நேரத்தை இருவரும் ரசித்து கொண்டிருக்கும் போது கரடியாய் வெளியே இருந்து கத்தினாள் வள்ளி. கதவு உடை படுவது போல தட்டவும் செய்தாள்.

அவளுடைய குரலில் கலைமதியின் உடம்பு நடுங்கியது. அவனை விட்டு விலகி அமர்ந்தாள்.

அதை உணர்ந்தவன் "இப்ப தான சொன்னேன். பயப்பட கூடாதுனு. இரு நான் என்னன்னு கேக்குறேன்", என்று சொல்லி விட்டு கதவை திறந்தான்.

அங்கே முறைத்து கொண்டு நின்ற வள்ளி, அவனை பார்த்ததும் ஒரு இளிப்பு இளித்து "எங்க அந்த கழுதை? வீட்ல அவ்வளவு வேலை இருக்கும் போது, இங்க சொகுசா படுத்து கிடக்காளா? அங்க அண்ணி கரடியா கத்திக்கிட்டு இருக்காங்க. கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா? ஏய் மதி வெளிய வாடி என்று கத்தினாள்.

பயத்துடன் அவன் அருகில் வந்து நின்றாள் கலைமதி.

"அத்தை இப்ப எதுக்கு சத்தம் போடுறீங்க? அவளுக்கு என்ன வேலை இருக்கு? அதை எல்லாம் தான் முடிச்சிட்டாளே. அப்படியே முடிக்கலைன்னா அம்மா பாத்துக்குவாங்க. அவங்க அவளை எல்லாம் செய்ய  சொல்ல மாட்டாங்க", என்று கத்தி விட்டு "அம்மா அம்மா", என்று கத்தினான் சூர்யா.

"என்ன சூர்யா?", என்ற படியே அங்கு வந்தாள் மங்களம்.

"அங்க என்ன வேலை இருக்கு? நீங்க எதுக்கு கலையை தேடுனீங்க? வேலை ரொம்ப இருந்தா வேளைக்கு ஆள் வச்சிக்கலாமே மா"

"என்ன பா சொல்ற? என்ன வேலை? சமையல் வேலை முடிஞ்சு பாத்திரத்தை எல்லாம் மதி தான கழுவி வச்சிட்டு வந்தா. ரெஸ்ட் எடுன்னு நான் தான உள்ள அனுப்புனேன்? அப்புறம் எதுக்கு வேலை செய்ய கூப்பிட போறேன்?"

"என்ன அத்தை இது? எதுக்கு இப்படி சில்லியா பிஹேவ்  பண்றீங்க? என்ன மா இதெல்லாம்? நீங்க பாக்க மாட்டிங்களா?"

தன் குட்டு உடைந்து விட்டதில் தலையை குனிந்து நின்றாள் வள்ளி.

"என்ன வள்ளி இது? இப்ப எதுக்கு அவங்களை தொந்தரவு பண்ற? சூர்யாவுக்கு அவனோட ரூம் கதவை தட்டுறது பிடிக்காது. இப்படி தான் எரிஞ்சு விழுவான். இனி இப்படி செய்யாத. தேவை இல்லாம அவனை எதுக்கு கோப படுத்துற? அவனே எப்பவாது தான் லீவு எடுத்துட்டு வீட்ல இருக்கான். அதை கெடுக்கணுமா? நீ வா", என்று அழைத்து கொண்டு சென்று விட்டாள் மங்களம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.