(Reading time: 17 - 34 minutes)

"சரி நீ சொல்ல மாட்ட தான? நானே அம்மாவை கூப்பிட்டு கேக்குறேன்"

"ஐயோ வேண்டாம் அத்தான். அத்தை என்னை எதுவுமே சொல்லலை. ரொம்ப அன்பா பாத்துக்குறாங்க. அவங்களை குறை சொன்னா என் நாக்கு அழுகிரும்"

"அப்ப அப்பா தான் ஏதோ சொல்லிருக்காங்க. அவர் கிட்ட கேக்குறேன்"

"ஐயோ ப்ளீஸ் அத்தான். மாமாவும் என்னை எதுவும் சொல்லலை. அவர் என்னோட அப்பாவுக்கும் மேல பாசமா பாத்துக்குறார்"

"அப்ப நான் தான் உன்னை எதாவது காய படுத்திட்டேனா? என்னை அறியாம எதாவது சொல்லிட்டேனா?"

"ஐயோ இல்லவே இல்லை. நீங்க என்கிட்ட நல்ல விதமா தான் பழகுறீங்க. என்னை திட்டுனது கூட இல்லை. அன்னைக்கு உங்களோட வண்டி சாவியை நான் வேற இடத்துல வச்சதுக்கு கூட இங்க வைன்னு மென்மையா தான சொன்னீங்க?"

"அப்ப உங்க அப்பா ஏதும் சொன்னாரா?"

"எங்க சித்தி இருந்தா எங்க அப்பா என் கிட்ட கூட வர மாட்டார். அவர் என்ன சொல்ல போறார்?"

"அப்ப வள்ளி அத்தை தான் ஏதோ சொல்லிருக்காங்க. என்ன சொன்னாங்க?"

"ஒண்ணும் சொல்லலை, விடுங்களேன்"

"நீ இப்ப சொல்லலைனா, என் பொண்டாட்டியை என்ன சொன்னீங்கன்னு நான் இப்ப போய் கேப்பேன்"

"அத்தான் ப்ளீஸ்"

"அப்ப சொல்லுமா. நீ இப்படி இருக்குறது கஷ்டமா இருக்கு. அதான் இப்படி போர்ஸ் பண்ணி கேக்குறேன்"

"அது அது... நான்... நான் ", என்று ஆரம்பித்து அழுது விட்டாள் கலை.

கண் முன்னே குலுங்கி அழும் மனைவியை பார்த்து பதறி விட்டான் சூர்யா.

அடுத்த நிமிடம் எதிரே சேரில் அமர்ந்திருந்த அவளை கை பிடித்து எழுப்பியவன் தன்னருகே கட்டிலில் அமர வைத்தான்.

"என்ன டா? எதுக்கு இந்த அழுகை?", என்ற படியே அவள் கண்ணீரை துடைத்து விட்டான்.

அவன் துடைக்க துடைக்க அது பெருகி கொண்டே இருந்தது.

"கலை இங்க பாரு. நான் சொன்னா கேப்ப தான? முதலில் என்ன நடந்துச்சுன்னு சொல்லு. அதுக்கு அப்புறம் நான் அதுக்கு தீர்வு சொல்றேன் சரியா?"

"என்னை நீங்க கல்யாணம் பண்ணது சித்திக்கு பிடிக்கலை. அதனால நான் நல்லாவே இருக்க மாட்டேனாம்"

"இதுக்கா கலை அழுவாங்க? அவங்க சொன்னா அப்படியே நடக்குமா என்ன? என்ன டா இது?"

"இல்லை அது வந்து... கல்யாணத்தன்னைக்கு அந்த பொண்ணு ஓடி போன பிறகு சித்தி தேன் மொழியை உங்களுக்கு கட்டி வைக்க நினைச்சாங்களாம். ஆனா அத்தை என்னை பொண்ணு கேட்டுட்டாங்களாம். நான் அவங்க பொண்ணோட வாழ்க்கையை கெடுத்துட்டேனாம்"

"என்னது தேனையா? லூசா நீ? அத்தை தான் அறிவு இல்லாம பேசுச்சுன்னா நீயும் கேட்டு அழுவியா? நீயே என்னை விட அஞ்சு வயசு சின்ன பொண்ணு. அவ உன்னை விட சின்னவ. அவளை எல்லாம் கல்யாணம் பண்ண தோணுமா? அது மட்டும் இல்லாம அவ எங்க வீட்டுக்கு வந்து விளையாடும் போது, எனக்கு தங்கச்சியா தான் தெரிவா. அவளை போய்..."

"இல்லை அத்தான். சித்தி இதையே சொல்லி திட்டி கிட்டு இருக்காங்க. இத்தனை நாளும் திட்டுவாங்க தான். ஆனா இந்த விசயத்துல ரொம்ப கஷ்டமா இருக்கு. அவங்க என்னை விரட்டி விட்டுட்டு அவளை உங்களுக்கு கட்டி வைக்க போறாங்களாம். எனக்கு எதுவுமே நல்லது நடக்காது. இந்த வீட்டை விட்டு அனாதையா தான் போக போறேன் போல?"

"அப்படி எல்லாம் இல்லை டா'

"இல்லை. அப்படி தான். சித்தி சொன்னா செஞ்சிருவாங்க. அம்மா பாசம் கிடைச்சதே இல்லை. அப்பா இருந்தும் இல்லாத மாதிரி. மத்த உறவுகளும் அப்படி தான். இப்ப நீங்க, இந்த அன்பு, அத்தை, மாமாவோட பாசம், இந்த வீடு, எதுவுமே இல்லாம போயிரும்"

"கலை மா அப்படி எல்லாம் நடக்காது. அழாத டா"

"இல்லை நடக்கும். நான் ஒரு ராசி இல்லாதவ. மறுபடியும் உங்களை எல்லாம் இழந்துட்டு அநாதை மாதிரி தனியா தான் இருக்க போறேன்"

"கலை.. கலை இங்க பாரு மா"

"நான் எல்லாம் வாழவே தகுதி இல்லாதவ அத்தான். எந்த சந்தோஷமும் நிலைக்காது. என்னை எல்லாம் எதுக்கு கடவுள் படைக்கணும்?"

அவன் எவ்வளவு சொல்லியும் அதை காதிலே வாங்காமல் அவள் புலம்பி கொண்டிருப்பதிலே அவளுடைய மனக்காயத்தை உணர்ந்தவன் அவள் அழுகையை நிப்பாட்ட அவள் கன்னத்தை தாங்கி இருந்த கையை அழுத்தி பிடித்து முகத்தை நிமிர்த்தினான்.

அவள் கண்களை மிக அருகில் நெருக்கமாக பார்த்தான் சூர்யா.

அவள் கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டே இருந்தது.

அடுத்த நொடி அவள் முகம் நோக்கி குனிந்தவன், அவள் உதடுகளை சிறை செய்தான் சூர்யா.

அழுத்தமாக பதிந்த இந்த முத்தத்தில் அதிர்ந்து போனாள் மதி. வந்து கொண்டிருந்த அழுகை கூட  நின்று விட்டது. திக் பிரம்மை பிடித்தது போல அசையாமல் இருந்தாள். அவள் உடம்பே நடுங்க ஆரம்பித்தது. அவள் கைகள் தன்னாலே அவன் தோளை பற்றியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.