(Reading time: 17 - 34 minutes)

விட்டால் அழுது விடுபவள் போல் நின்றிருந்த மனைவியை உள்ளே இழுத்தவன் அறையை தாளிட்டான்.

சோர்ந்திருந்த அவள் முகத்தை பார்த்தவன், அடுத்த நொடி அவளை இழுத்து அணைத்து கொண்டான். அந்த அணைப்பு இப்போது தேவை என்பது போல் அவன் மார்பில் ஒண்டி கொண்டாள் கலை.

"மறுபடியும் சோகமா ஆகிட்டியா கலை? இப்ப தான சொன்னேன்? இதை எல்லாம் கண்டுக்காத மா. அப்பறம் அவங்களை பார்த்து எதுக்கு பய படுற? அவங்க உன்னை எதுவும் சொல்லாம நான் பாத்துக்குறேன் சரியா?"

"நிஜமாவா அத்தான்?"

"கண்டிப்பா மா. யாரும் உன்னை திட்ட விடாம பாத்துக்குறேன் சரியா?"

"ஹ்ம்ம் சரி"

அவள் முகத்தை நிமிர்த்தியவன் "அழுகை எல்லாம் ஓடி போச்சு போல? ஆனா அழுதிருந்தா அதை நிறுத்த, அப்ப மாதிரி எதாவது செஞ்சிருப்பேன். ஆனா இப்ப அதுக்கு வாய்ப்பு இல்லை போலவே", என்று சிரித்தான்.

"அழுகை வந்தா தான் செய்யணும்னு இருக்கா?", என்று அவளை அறியாமலே சொல்லி விட்டு நாக்கை கடித்து கொண்டாள் கலை.

ஆனந்த திகைப்புடன் அவளை பார்த்தான் சூர்யா. "ஏய் நான் கூட உன்னை என்னவோ நினைச்சேன் டி. மேடம் அப்படியே பட்டையை கிளப்புறாங்க?", என்ற படியே கடி பட்ட அவள் உதடுகளை விரலால் எடுத்து விட்டான்.

அவன் மார்பில் முகத்தை மறைத்து கொண்டாள். அதுவும் அவன் சொன்ன உரிமையான டீ யில் அவள் பெண்மை சிலிர்த்தது.

"எங்க முகத்தை மறைக்கிற? அப்ப உனக்கு முத்தம் கொடுத்தது பிடிச்சிருக்கா? அப்ப தினமும் ஒரு தடவைன்னு ஷிபிட் போட்டுறலாம் சரியா?"

"இன்னைக்கு ஒரு தடவையா கொடுத்த?", என்று கேக்க  வந்த வார்த்தைகளை வெளியே சொல்லாமல் புதைத்து கொண்டாள். அதையும் சொன்னா கிண்டல் பண்ணுவான் என்று நினைத்து.

ஆனால் அவன், அவள் மனதில் நினைத்ததையே வார்த்தையால் வெளியிட்டான்.

"இன்னைக்கு என்ன ஒரு தடவையா கொடுத்தன்னு கேட்டுறாத கலை. நான் உனக்குள்ள பேய் தான் புகுந்துருச்சோன்னு மயங்கி விழுந்துருவேன். அப்புறம் ஒரு தடவைன்னா ஒரு முத்தம் மட்டும் ன்னு அர்த்தம் இல்லை. ஒரு தடவை கிட்ட வந்து எத்தனை வேணும்னாலும் கொடுக்கலாம். இன்னைக்கு மட்டும் ரெண்டாவது தடவையும் கொடுக்கலாம்", என்று சொல்லி அவள் முகத்தை நோக்கி குனிந்தான். 

ன்று மாலை துவைத்து வைத்த துணியை, எல்லாம் மடித்து வைத்து கொண்டிருந்தாள் மதி.

அவளை ஒரு பார்வை பார்த்தவன், தன் அம்மா அம்மாவிடம் பேசலாம் என்று நினைத்தான்.

சோபாவில் அமர்ந்திருந்த தாத்தா, பாட்டி, மற்றும் ரகுவை பார்த்து விட்டு அம்மா, அப்பா அறைக்குள் சென்றான்.

"அம்மா"

"என்ன சூர்யா?"

"இல்லை ஒரு விஷயம் பேச வந்தேன்"

"என்ன டா? பங்க்சனுக்கு எல்லா வேலையும் முடிச்சாச்சு தான? நம்ம கேசவனுக்கு தான் சொல்லலை. அவனுக்கும் சொல்ல அண்ணனும், உன் அப்பாவும் போயிருக்காங்களே"

"அது இல்ல மா. அது வந்து.."

"என்ன டா தயங்குற?"

"இல்லை கலை கையில் கவரிங் நகை தான் போட்டிருக்கா"

"இதுக்கா இப்படி தயங்குற? பொண்டாட்டிக்கு நகை வாங்கி கொடுக்க அம்மா கிட்ட கேட்கணுமா பா? நான் என்னோடதை போட்டுக்க சொன்னேன். ஆனா அவ வேண்டாம்னு சொல்லிட்டா. நான் கூட புதுசா வாங்கி கொடுக்க யோசிக்கலை பாரேன். நீ யோசிச்சதும் சரி தான்" 

இப்படி புரிந்து கொள்ளும் தாய் கிடைத்தால் வரம் தான் என்று நினைத்து கொண்டான் சூர்யா.

"நானும் இன்னைக்கு தான் மா கவனிச்சேன். அதான்"

"ஹ்ம்ம் இந்த பங்க்சனுக்கும் என்னோடதை போட்டு விட்டுரலாம்னு நினைச்சேன். ஆனா அதை விட நீயே அவளுக்கு புதுசா ஒரு செட் எடுத்து கொடுத்துரு. அவளுக்குன்னு இருக்கட்டும்"

"ஹ்ம்ம் சரி மா"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.