(Reading time: 14 - 28 minutes)

“ஹலோ .. நீங்கதான் சார் பொண்ணு வேண்டாம்ன்னு சொல்ல வந்த இடத்துலே, என்னை பொண்ணு கேட்டு நின்னது.. ஏதோ போனா போவுது பாவம்.. நம்ம சைடு கொஞ்சம் ஸ்ட்ராங்கா பேசினா, உங்களுக்கு கஷ்டம் இல்லாம இருக்குமேன்னு நினைச்சா, எங்களையே கிண்டல் அடிப்பீங்களோ.. ஏன் நீங்க சொல்ல வேண்டியதுதானே..?”

“நானும் சொல்லலாம்னுதான் நினைச்சேன்.. ஆனால் என்னோட அருமை பெருமை எல்லாம் எடுத்து சொல்லும்போது அப்படியே “நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டி பார்க்குது“ ன்னு சிச்சுவேஷன் சாங் போடற அளவிற்கு இருந்ததா,  அதான் அந்த பிஜிம் எப்பெக்ட்லே பேசாம இருந்துட்டேன்”

“ஹ.. இருந்தாலும் ரொம்ப நினைப்புதான்.. “ என்று அவள் திரும்ப பேச, இப்போது வீட்டு பெண்கள் பேச ஆரம்பித்து இருந்தனர்.

“சரி சரி.. எல்லோரும் பேசியே களைச்சு போயிருப்பீங்க.. மலர் , கயல் எல்லோருக்கும் டிபன் எடுத்துக் கொடுங்க “ என்று கூற,

மலரும், கயலும் டிபன் எடுத்து வந்தனர். செழியன், மலர் இருவருக்கும் அது பெண் பார்க்கும் சடங்கு போல் தோன்ற, இருவருக்கும் இப்போது சற்று வெட்கமாக இருந்தது..

மலர் பாட்டி வடிவு “கணேசா, நம்ம கயலுக்கும் மாப்பிள்ளை பார்த்துருயா.. என் ரெண்டு பேத்திங்களுக்கும் ஒன்னு போலே கல்யாணம் நடக்கட்டும்” என

“அம்மா... அப்பா மாதிரி நல்லவங்க வாக்கு பலிக்கும்ங்கறது உண்மை ஆயிடுச்சு.. அவர் நினைச்ச மாதிரி என் அம்மா வழி அண்ணன், என் தாய்மாமா வீட்டுலேர்ந்து கயல பொண்ணு கேட்டு ஆள் அனுப்பினாங்க.. நான் தகவல் சொல்லி விடுறதா சொல்லி இருக்கேன்.. மலருக்கு பேசிட்டு பொறவு , கயல் கல்யாண பேச்சு எடுக்கலாம்ன்னு நினைச்சேன் .. நல்ல நேரம் ரெண்டு பேருக்கும் ஒண்ணா கூடி வருது போலே.. “

“எல்லாம் அந்த குமரன் அருள் தான்.. “ என்றவர் மேற்கொண்டு கயலுக்கு பார்த்த மாப்பிள்ளை பற்றி விசாரித்து திருப்தி ஆனார்.

பிறகு செழியன் அப்பாவிடம் மலர், செழியன் திருமணம் பற்றி பேச,

“செழியன் .. இப்போ ஒரு ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கான்.. அது முடியவும் கல்யாணம் வசிக்கலாம்,. என்ன செழியா ... ஒரு ஆறு மாசம் பொருத்து கல்யாணம் தேதி பார்க்கலாமா?” என வினவ,

“என்னது ஆறு மாசமா? இப்போ செமஸ்டர் முடிஞ்சு காலேஜ் லீவ் விடுவாங்க.. அப்போ வசிக்கலாம்” என

“நீதானேலே அந்த ஆராய்ச்சி படிப்பு முடியனும்ன்னு சொன்னே?”

“அது எல்லாம் நான் முடிச்சிடுவேன்.. நீங்க ரெண்டு மாசத்துலே தேதி பாருங்க” என

செழியன் அவசரம் கண்டு எல்லோரும் சிரித்தனர்..

மேலும் சில பேச்சு வார்த்தையின் பின் செழியன் வீட்டிற்கு திரும்ப, அவனுக்காக காத்து இருந்த செந்தில்

“என்னடா.. போன சோலி என்ன ஆச்சு?”

“எனக்கு கல்யாணாம்  நிச்சயம் ஆகிடுச்சுடா “ என

“எப்படிடா.. இங்கே வச்சு அப்பாவ சரிகட்டிதானே கூட்டிட்டு போனே? “

“ஏலே.. எனக்கும், மலருக்கும் நிச்சயம் ஆகிடுச்சு” என

இப்போது ஏகத்துக்கும் திகைத்து நிற்பது செந்தில் முறை ஆனது..

ஹாய் .. பிரெண்ட்ஸ்.. இதோ பென்அல்டிமேட் அத்தியாயம் கொடுத்து விட்டேன்.. அடுத்து கல்யாணம் தான்,.. அதற்கு உங்கள் எல்லோரையும் அழைக்கிறேன்.. வந்து சிறப்பித்து கொடுங்க .. உங்கள் கருத்துக்களுக்காக காத்து இருக்கிறேன்..

அடுத்த அத்தியாயத்துடன் நிறைவுப் பெறும்!

Episode # 44

Episode # 46

{kunena_discuss:1126}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.