“சித்துன்னு வைத்ததுற்கு பதில் புத்து (இந்தியில் புத்து என்றால் முட்டாள் என்று அர்த்தம்) என்று வைத்து இருந்திருக்கலாம் என்று இப்போ தோனுது.” என்றாள் உத்ரா.
“வைப்ப, வைப்ப, நம் திருமணத்தன்று, யாரையாவது விரும்புகிறாயா என்று கேட்ட பொழுதே, உங்களைத் தான் விரும்புகிறேன், என்று சொல்லாமல் இருந்த உனக்குத் தான் அந்த பெயர் வைக்க வேண்டும்.” என்று மகிழ்ச்சியாகவே கூறினான் அபி.
நின்று திரும்பி அவன் கண்களைப் பார்த்தாள் உத்ரா. “இதை கண்டு பிடிக்க உங்களுக்கு மூன்று மாதம் தேவைபட்டு இருக்கு “ என்று முறுவலுடன் கேட்டாள் உத்ரா.
“சரி சொல்லு, ஏன் இதை அப்பொழுதே என்னிடம் கூறவில்லை ? கேட்ட அபிக்கு பதில் அளிக்காமல் நடக்க ஆரம்பித்தாள் உத்ரா. “ஹே..... சொல்லிட்டுப் போடா” என்றதும் அவள் காதுகளில் விழுந்த மாதிரி தெரியவில்லை.
பாதையின் முன்னும், பின்னும் பார்த்த அபி, யாரும் வரவில்லை என அறிந்த பின் வேகமாக நடந்து, அவள் முன் சென்று, அவள் வழியை மறித்து, சட்டென அவளை தூக்கி பக்கத்தில் இருந்த பாறையின் மேல் உட்கார வைத்து, அவள் இறங்க முடியா வண்ணம் நின்று கொண்டு கண்களால் சொல்லு என்றான்.
அவனது செயலினால் மயங்கித் தான் போனாள் உத்ரா. மெதுவாக பேசவும் ஆரம்பித்தாள். “சின்ன வயதில் இருந்தே உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அபிமா. வசு அத்தையிடம் உங்களைப் பற்றி எப்பொழுதும் பேசிக் கொண்டே இருப்பேன். கொஞ்சம் பெரியவளான பொழுது அத்தை உங்களைப் பற்றி பேச மறுத்து விட்டார்கள். அதன் பின் உங்களைப் பற்றி அறிந்து கொள்ள ஷகுனை, ராக்கி கட்டி அண்ணனாக்கி கொண்டேன். நீங்க அமெரிக்கா வந்த பின் அவரிடம் தான் கேட்டுக் கொள்வேன்.” என்றாள் உத்ரா.
“அதெல்லாம் சரி, உங்கப்பா திருமணம் நிச்சயம் செய்த பொழுது உன் அப்பாவிடம் சொல்லி இருக்கலாம் அல்லவா? என்று அபி கேட்க...
“நான் அந்த நேரம், பட்ட படிப்பு முடித்து, தோழிகளுடன், சிங்கப்பூர், மலேசியாவிற்கு உல்லாசப் பயணம் சென்றிருந்ததால், எனக்கு விஷயம் தெரியாது. திரும்பி வந்து பார்த்தால், எல்லாம் நிச்சயம் ஆகி இருந்தது. முக்கியமாக நீங்கள் ஒப்புக் கொண்டீர்கள் என்று கேட்ட பின் எப்படி அப்பாவிடம் கூற முடியும் சொல்லுங்கள்” என்று கூறிய பொழுது உத்ராவின் கண்கள் சிறிது கலங்கி இருந்தது.
“சாரிடா, எனக்கு அப்பொழுது தெரியாதே நீ என்னை விரும்பியது. திருமணத்தன்று உன்னிடம் கேட்டேன் தானே, அப்பொழுதாவது என்னிடம் சொல்லி இருக்கலாம் அல்லவா? என்ற அபியிடம்...
“நீங்களும் என்னை விரும்ப ஆரம்பித்த பின்பே, உங்களிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன் அபிம்மா” என்றாள் உத்ரா.
சிறிது முறுவலித்த படி அவளை அந்த பாறையில் இருந்து இறங்கி விட்டான் அபி. இருவரும் கை கோர்த்து அந்த சிறு பாதையில் நடக்க துவங்கினர். அபி எவ்வாறு அவன் காதலை சொல்லப் போகிறான்? அடுத்த பகுதியில்.........

தொடரும்...
{kunena_discuss:1170}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.