(Reading time: 14 - 27 minutes)

அது ஒரு பாதாள குகையாக இருந்தது. சிறு குழுக்களாக பிரித்து உள்ளே அனுப்பினர். ஒருவர் மட்டுமே இறங்கிச் செல்லும்  வண்ணம் படிக்கட்டுகள் அமைந்து இருந்தது. ஒருவர் பின் ஒருவராக இறங்கிச் சென்றனர். 154 அடி வரை கீழே சென்றது பாதை. வழியெங்கும் வண்ண விளக்குகள் மின்னின. அங்கங்கு நீர் கசிந்தபடி இருந்தது. சில இடத்தில சிறு குட்டைகளும் இருந்தன. அந்நாட்டவர் நம்பிக்கை படி, அதில் சில்லறை காசுகளை வீசி இருந்தனர். குகையின் கடைசியில் சென்று பார்த்த பொழுது, நூறு அடி உயரத்தில் இருந்து நீர் அருவியாக கொட்டிக் கொண்டு இருந்தது. பார்க்கவே ரம்யமாக இருந்தது.

உத்ரா இதுவரை, கொடைகானலிலும், குற்றாலத்தில்  மட்டுமே அருவிகளை பார்த்திருந்தாள். ஆனால் இது வித்யாசமாக, பூமிக்கு அடியில் குகையில் இருந்தது, பார்க்கவே வியப்பூட்டும் படி அமைந்து இருந்தது. அடுத்து நயாகராவை நோக்கி அவர்கள் பயணம் தொடர்ந்தது. இந்த மூன்று மாதத்தில் உத்ராவும், கார் ஒட்டி பழகி, அங்கு ஓட்டுனர் உரிமமும் பெற்றிந்ததால், அவளும் அபியுமாக காரை மாற்றி ஒட்டினர்.

மாலை நேரம் நயாகராவை வந்து அடைந்தனர். அங்கிருந்த தங்கும் விடுதியில், சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு இரவு உணவை உண்டு முடித்த பின் நடந்து சென்று அருகில் இருந்த  நயாகராவை கண்டு களித்தனர். வண்ண விளக்குகள் மின்ன, லாரி பாலை கொட்டியது போல் வெண்மையாக கொட்டிக் கொண்டு இருந்தது அருவி. நேரம் போனதே தெரியாமல் இருவரும் அதை ரசித்த வண்ணம் நின்றனர்.

மறு நாள் காலை கிளம்பி, அங்கிருந்த பிரன்ச் கோட்டையை பார்த்தனர். ஆயிரத்து அறுநூறுகளின் பிற்பகுதியில் கட்டி இருந்தனர், பிரன்ச் இராணுவ வீரர்களுக்காக, நயாகரா நதி கரையோரம், மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டு இருந்தது. அதனை பார்த்து வரவும், நயாகரா நீர் வீழ்ச்சியை படகில் சென்று பார்க்க முன் பதிவு செய்திருந்த நேரம் வர அங்கே சென்றனர்.

காரை பார்கிங்கில் நிறுத்திவிட்டு  படகை நோக்கிச் சென்றனர். படகில் ஏறும் முன் அவர்களுக்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய மழை கோட் வழங்கப்பட்டது.  அதை அணிந்து கொண்டு படகின் மேல் தளத்தில் வந்து நின்று கொண்டனர்.

“நான் இங்கு முன்பு நண்பர்களுடன் வந்து இருக்கேன் உத்ரா.” என்றான் அபி.

“அது தான் எனக்கு தெரியுமே” என்று கூறினாள் உத்ரா.

“உனக்கு எப்படி தெரியும்? சித்தி சொன்னாங்களா” என்று அபி கேட்க...

“இல்லை, ஷகுன் அண்ணா தான் சொன்னாங்க” என்றாள் உத்ரா.

“ஷகுன் அண்ணாவா?” என வியப்புடன் கேட்டான் அபி.

“உங்களைப் பற்றி கேட்பதற்காகவே அவருக்கு ராக்கி கட்டி அண்ணனாக்கி கொண்டேன்.” என்றாள்.

“என்னைப் பற்றி கேட்கவா? என்ற அபியிடம், அவளது போனை கொடுத்து அவனுடன் இணைந்து நின்று “ஒரு செல்பி எடுங்க” என்றாள்.

“என்னோட போனில் எடுக்கிறேனே” என்ற அபியிடம்

“அம்மாவுக்கு அனுப்ப வேண்டும். அதனால் என்னோட போனில் இருந்தே எடுங்கள்” என்று கூறி போனை அவனிடம் கொடுத்தாள்.

படகின் ஓரத்தில் சென்று, பின்னால் நயாகரா அருவி தெரியும்  வகையில் உத்ராவுடன் சேர்ந்து நின்று புகைப் படம் எடுத்தான். அருவியின் அருகே சென்று திரும்பியது படகு. அருவியின் இரைச்சலில் ஏதும் பேசக் கூட முடியவில்லை.

அறைக்கு திரும்பியதும், பெட்டியில் அடுக்கிக் கொண்டே, “அம்மாவுக்கு அந்த போட்டோவை அனுப்பி விடுங்களேன்” என்றாள்.

அபி அவளது போனை எடுத்து அந்த போட்டோவை அவளது அம்மாவிற்கு அனுப்பி விட்டு,  மற்ற போட்டோக்கள் இருந்த  போட்டோ காலரியை  பார்த்த பொழுது, அதில் சித்து என்று ஓர் போல்டர் இருந்தது. அந்த பெயர் அவனது ஆர்வத்தை தூண்ட அதனை திறந்து பார்த்தான். அது முழுவது அவனது புகைப் படங்களால் நிரம்பி இருந்தது. அதனை பார்த்த பொழுது ஆர்ச்சர்யம் கலந்த சந்தோசமாக இருந்தது சித்தார்த் அபிமன்யுவிற்கு. அவளை பார்த்த பொழுது கிளம்பலாமா என்று கேட்டாள். அப்பொழுது எதுவும் கேட்காமல் அவளுடன் கிளம்பினான்.

அடுத்து மூன்று  மணி நேர பயணத்தில் இருந்த வாட்கின்ஸ் கிளன் என்ற இடத்தை அடைந்தனர். அது ஒரு சிறு மலையாக, மேலே வரை காரில் செல்லும்படி இருந்தது. அங்கிருந்து நடந்து செல்ல படிகள் இருந்தன. அதில் ஏறி வர கடினமாக இருக்கும் என்று, இறங்குவதை தேர்ந்தெடுத்து இருந்தான் அபி. இரு மலைகளுக்கு நடுவே சிறு ஆறாக ஓடி நடு நடுவே சிறு நீர் வீழ்ச்சியாகவும் இருந்து, நாம் இறங்கும் படிக்கட்டுகளுக்கு அருகே ஓடி வந்தது அந்த நீரோட்டம். பார்ப்பதற்கே ரம்யமாக இருந்தது.

இருவரும் படிகளில் இறங்க ஆரம்பித்தனர். அந்த நீரோட்டமும் உடன் வந்தது. அபி, உத்ராவிடம் பேச ஆரம்பித்தான்.

“உன் மனதிற்குள் என்னை எப்படி கூப்பிடுவாய் உத்ரா?”

“என்ன இந்த திடீர் ஆராய்ச்சி ? என்று கேட்டவாறு நடந்தாள் உத்ரா.

“உன்னோட போனில் பார்த்தேன், என்னோட புகைப் படம் எல்லாம் சித்து என்ற போல்டரில்,  அதான் ஒரு சின்ன சந்தேகம்.” என்றான் அபி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.