(Reading time: 10 - 20 minutes)

“அப்பா அதுனலதான்ப்பா எனக்கு சந்தேகமா இருக்கு... யாரோ வேணும்ன்னே அவர்க்கு கேட்ட பேர் வரணும்ன்னே பண்றாங்க போல.... நடிப்புத் துறைல ஒருத்தனை அழிக்கனும்ன்னா என்ன வேணா பண்ணுவாங்களே.... அதுவும் சமீப காலமா இவர் அரசியல்ல வேற சேரப்போறேன்னு சொல்லிட்டு இருக்காரு.... அதுனால கூட இவர் பேரைக் கெடுக்க இந்த மாதிரி செஞ்சு இருக்கலாம்....  நீங்க எதுக்கும் அவரைக் கைது செஞ்ச ACP-யை போய் பார்த்துட்டு வாங்களேன்ப்பா....”

“நான் இதோட நாலு வாட்டி அவரைப் பார்க்க முயற்சி பண்ணினேன்மா... ஆனா முடியலை... எதுக்கும் இன்னொரு முறை இன்னைக்கு போய் பார்த்துட்டு வரேன்....”

“சரிப்பா... இந்த கலாட்டாவால பாவம் பசங்க படிப்புதான் கெடுது...”

“படிப்பு பார்த்துக்கலாம்மா.... இங்க கலாட்டா எல்லாம் முடியறவரை அவங்க அம்மாக்கூடவே இருக்கட்டும்... இல்லைன்னா இங்க நடக்கறதை பார்த்துட்டு அதுங்க மனசும் சேர்ந்து கஷ்டப்படும்....”

“சரிம்மா நீ மனசுல எதையும் போட்டுக் குழப்பிக்காம உடம்பை சரியாக்கற வழியைப் பாரு....”

இப்படி நரேஷை நம்பும் இவர்கள் நாளை உண்மை நிலை தெரியும்போது எப்படி மாறுவார்கள்...

டேய் எவண்டா அது என் தம்பி மேல கேஸ் போட்டு உள்ள தள்ளினது... அதுவும் கிட்டத்தட்ட மூணு நாளா அவன் ஜெயில்ல இருக்கான்... எவனும் எனக்கு சொல்லலை....”

“இல்லைண்ணே அண்ணன் உங்கக்கிட்ட முன்னாடியே சொல்லி இருப்பார்ன்னு நினைச்சோம்...”

“என் வீட்டுக்காரி எனக்கு ஏதோ கிரகம் சரியில்லைன்னு ஒரு வாரமா கோவில் கோவிலா என்னை இழுத்துட்டு போய்ட்டா... பாதி இடத்துல ஃபோனும் வேலை செய்யலை நேத்து வீட்டுக்கு வந்த உடனேதான் விஷயம் தெரிஞ்சிச்சு.... உடனே ஓடி வர்றேன்....”

“நீங்க வந்ததால எங்களுக்கு எத்தனை நிம்மதி தெரியுமா அண்ணே.... உங்க தம்பியையும் எங்களால பார்க்க முடியலை... வக்கீல் தவிர அவர்கூட யாரையும் பேச விடறதில்லை... அடுத்து என்ன பண்ணன்னு தெரியாம தவிச்சுட்டு இருந்தோம்....”

“ஏண்டா வீட்டைக் கேட்டு மிரட்டினது அவ்ளோ பெரியக் குத்தமா.... அதுக்கா இம்புட்டு செக்ஷன்ல உள்ள தூக்கி வச்சிருக்காங்க....”

“இல்லைண்ணே அது மட்டும் இல்லை.... பத்து வருஷம் முன்னாடி ரெண்டு பேரை கொலை பண்ணிட்டாங்கன்னு சொல்லி கைது பண்ணி இருக்காங்க... அந்தக் கேஸ்தான் இப்போ முக்கிய வழக்கா இருக்கு...”

“பத்து வருஷம் முன்னாடியா... எவண்டா அவன் பழசையெல்லாம் தோண்டி எடுக்கறது....”

“மதின்னு ஒரு ACP... அவர்தான் இந்த கொலை கேஸ்ல அண்ணனை உள்ள போட்டவர்... அதே மாதிரி சந்திரன்னு ஒரு வக்கீல்.... அந்தாள்தான் அந்த ராமசாமி வழக்குல அண்ணனுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தது...”

“ஏண்டா நீங்க எல்லாம் சரச்சிட்டு இருக்கீங்களா.... உடனடியா அவன் வீட்டுல இருந்து யாரையாவது இந்நேரத்துக்கு தூக்கி இருக்க வேண்டாம்... அலறி அடிச்சுட்டு எல்லா வழக்கையும் வாபஸ் வாங்கி இருப்பானுங்க....”

“அண்ணே அந்த ராமசாமி வீட்டுல யார்க்கு என்ன நடந்தாலும் அதுக்கு அண்ணன்தான் காரணம் அப்படின்னு புகார் கொடுத்து வச்சிருக்காங்க... அதனால அவங்க மூணு பேர் மேலயும் கை வைக்க முடியலை... அந்த மதியும், சந்திரனும் இந்த மாதிரி மிரட்டலுக்கெல்லாம் மசியறவங்களா தெரியலை... அதுவும் அந்த சந்திரன்கூட ரெண்டு ஜூனியர்ஸ் சுத்திட்டு இருக்காங்க.... அதுங்க ரெண்டும்தான் எல்லா டீடைல்ஶும் கண்டுபிடிச்சு கொடுக்கறது....”

“ரெட்டை கொலை வழக்கை தோண்ட ஆரம்பிச்சாங்கன்னா அதை வச்சு ஏகப்பட்ட வழக்குல அவன் மட்டும் இல்லாம நானும் சேர்ந்து மாட்டுவேன்... முடிஞ்சவரை இந்தக் கேஸ் நடக்காம பார்க்கணும்.... அப்படியே நடந்தாலும் எந்த விஷயமும் வெளிய வராம பார்க்கணும்... நீ என்ன பண்ற இவங்க எல்லாரைப் பத்தியும் முழு டீடைல்ஸ் collect பண்ணிட்டு வந்து என்னைப் பாரு... நான் போய் வக்கீலைப் பார்த்துட்டு அடுத்து என்ன பண்றதுன்னு பேசிட்டு வரேன்... எப்படியாச்சும் இந்தக் கேஸ் நடத்த விடாம பண்ணனும்....”, நாராயணின் அண்ணன் அடியாளிற்கு கட்டளையிட்டுவிட்டு வக்கீலைப் பார்க்க கிளம்பினார்.

ஹே சப்பாணி அன்னைக்கு நரேஷ் வீட்டுல இருந்து எடுத்துட்டு வந்த டாகுமென்ட்ஸ் எங்க வச்சிருக்க....”

“லேப்டாப்ல N1 அப்படிங்கற folder-ல இருக்கு பாரு.... பாரதி நான் அன்னிக்கே உங்கிட்ட கேக்கணும் நினைச்சேன்... அதுல அக்கௌன்ட் டீடைல்ஸ் அப்படிங்கற file இருக்குது பாரு... அதுல ஒரு நம்பர் எங்கயோ பார்த்தா மாதிரி இருக்குது... உனக்கு நியாபகம் வருதா பாரு.....”

“ஹ்ம்ம் எனக்கும் பார்த்தா மாதிரிதான் இருக்கு... ஹே இது அந்த பையன் வீட்டுல எடுத்த பாஸ்புக்ல பார்த்த நம்பர் மாதிரி இருக்கு... இரு அதுதானா செக் பண்றேன்....”

பாரதி இரண்டையும் சரிபார்க்க இரண்டு எண்களும் ஒரே மாதிரியாக இருந்தது... அந்தக் கணக்கிலிருந்து அனுப்பப்பட்ட தொகையும் பெரிய அளவில் இருந்தது... மேலும் தோண்டித் துருவ பல்வேறு நாடுகளிலிருந்து இருவருக்கும் அதிக அளவில் பணம் அனுப்பப்பட்டிருப்பது தெரியவந்தது....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.